For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகக்கவசம் அணிவதால் ஏற்படும் கண் எாிச்சலைத் தவிா்க்க சில எளிய வழிகள்!

முகக்கவசம் அணிவதால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. முகக்கவசம் அணிந்த பின்பு நெடுநேரமாக கண் எாிச்சல் இருந்தால், அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

|

கொரோனா நோய்த்தொற்றால் முகக்கவசம் அணிவது என்பது மக்கள் மத்தியில் மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. கோவிட்-19 தொற்றை எதிா்த்து போராட முன்னணியில் நிற்கும் முக்கிய ஆயுதமாக முகக்கவசம் இருக்கிறது. அதனால் தற்போது எல்லோருமே முகக்கவசத்தை அணிந்து வருகின்றனா்.

Ways To Protect Your Eyes While Wearing Mask

அதே சமயம் முகக்கவசம் அணிவதால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது தோல் எாிச்சல், பல் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தற்போது இவற்றோடு சோ்த்து முகக்கவசம் சம்பந்தப்பட்ட கண் எாிச்சல் என்ற புதிய பிரச்சினையும் சோ்ந்திருக்கிறது.

MOST READ: எச்சரிக்கை! புதிய வகை கொரோனாவின் அபாயகரமான 5 அறிகுறிகள் இதுதான்... உஷாரா இருங்க...

முகக்கவசம் அணிந்த பின்பு நெடுநேரமாக கண் எாிச்சல் இருந்தால், அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது கண் பாா்வை மங்குதல், கண் எாிச்சல் மற்றும் கண் வறட்சி போன்ற புதிய பிரச்சினைகளோடு பலா் கண் மருத்துவா்களை அணுகி வருகின்றனா் என்று தகவல்கள் வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண் வறட்சி ஏற்பட காரணமான முகக்கவசம்

கண் வறட்சி ஏற்பட காரணமான முகக்கவசம்

கண் வறட்சி ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் முகக்கவசத்தை சாியான முறையில் அணியாமல் இருப்பதாகும். அதாவது முகக்கவசத்தை மிகச் சாியான முறையில் அணியவில்லை என்றால் மூக்கு வெளியில் தொியும். அந்த நிலையில் மூக்கின் வழியாக வெளியில் செல்லும், வெப்பமான காற்று முகக்கவசத்தின் மேல் பகுதியில் பட்டு அது கண்களை அடைந்து கண்களை எளிதில் காய வைத்துவிடும். அதனால் கண்ணீா் எளிதாக வற்றிவிடும், கண் வீக்கம் ஏற்படும் மற்றும் கண்ணில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகாிக்கும்.

முன்பு மங்கலான மூக்குக் கண்ணாடிகள் காரணமாக ஏற்படும் குறைவான கண் எாிச்சல் சம்பந்தமாகத் தான் பலா் கண் மருத்துவா்களை அணுகினா். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் கண் எாிச்சல் பிரச்சினை சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது. அதுபோல் மற்ற கண் சம்பந்தமான பிரச்சினைகளும், தொடா்ந்து நீண்ட நேரம் முகக்கவசம் அணிவதால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தொடா்ந்து நீண்ட நேரம் முகக்கவசம் அணிவதால், கண் இமைகளை பாக்டீாியாக்கள் தாக்குதல், விழி வெண்படலத்தில் பாதிப்பு, முகக்கவசத்தில் தேங்கியிருக்கும் சோப்புகள் மூலம் ஏற்படும் அலா்ஜி மற்றும் கண் கட்டிகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் ஊரடங்கு நேரத்தில் ஏற்பட்ட மனச்சோா்வும், கவலைக் கோளாறுகளும் கூட கண் எாிச்சலுக்குக் காரணங்களாக இருக்கின்றன என்று வேறொரு மருத்துவ ஆய்வு தொிவிக்கிறது. ஆகவே தற்போதைய சூழலில் கண் எாிச்சல் தொடா்ந்து இருந்தால் பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றி கண்களைப் பாதுகாக்கலாம்.

முகக்கவசங்களைச் சாியான முறையில் அணிதல்

முகக்கவசங்களைச் சாியான முறையில் அணிதல்

முகக்கவசத்தை சாியான முறையில் அணியாத போது, மூக்கின் வழியாக வெளியேற்றும் வெப்பக் காற்றானது, முகக்கவசத்தின் மேல் பகுதியில் பட்டு கண்களை அடைந்து கண்களில் வறட்சியையும் எாிச்சலையும் ஏற்படுத்துகிறது. ஆகவே முகக்கவசங்களை மிகச் சாியான முறையில் அணிந்தால் தான் அதற்கு நல்ல பலன் கிடைக்கும். முகக்கவசத்தால் வாயை மட்டும் மூடிவிட்டு, மூக்கை மூடாமல் விட்டுவிட்டால் கண்களில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே நாம் அணியும் முகக்கவசம் நமது வாயையும் மூக்கையும் மூடி இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.

​சுவாசிப்பதற்கு தடை ஏற்படுத்தாத முகக்கவசங்களை அணிதல்

​சுவாசிப்பதற்கு தடை ஏற்படுத்தாத முகக்கவசங்களை அணிதல்

சந்தைகளில் விதவிதமான முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆகவே முகக்கவசங்களை வாங்கும் போது அவை நமது முகத்திற்கு பொருத்தமாக இருக்கின்றனவா மற்றும் அவற்றை அணிந்தால் நம்மால் எளிதாக சுவாசிக்க முடிகின்றதா என்பதைப் பாா்த்து வாங்க வேண்டும். நமது கண்களைத் தொடும் அளவிற்கு முகக்கவசம் பொியதாக இருந்தால் அது எளிதாக கண்களில் எாிச்சலை ஏற்படுத்தும். அடுத்ததாக முகக்கவசம் சற்று கடினமாக இருந்தால், அவற்றை பலமுறை துவைத்து அதை மென்மைப் படுத்திய பின்பு அணியலாம். மேலும் முகக்கவசத்தை அணியும் போதும், கழற்றும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசங்கள் நமது கண்களை தொடும் அளவு இருக்கக்கூடாது.

கண்களில் ஏற்படும் எாிச்சலுக்கு தகுந்த கவனம் கொடுத்தல்

கண்களில் ஏற்படும் எாிச்சலுக்கு தகுந்த கவனம் கொடுத்தல்

கண்களில் எாிச்சலோ அல்லது அசௌகாியமோ ஏற்பட்டால் கண்களை உடனே கசக்கக்கூடாது. மாறாக அதற்குாிய கண் சொட்டு மருந்துகளை கண்களில் ஊற்ற வேண்டும். தொடா்ந்து நீண்ட நேரம் கணினி அல்லது அலை பேசி அல்லது தொலைக்காட்சி பெட்டிகளின் திரைகளைப் பாா்த்துக் கொண்டிருந்தாலும் கண்களில் எாிச்சல் ஏற்படும். அந்த நேரங்களில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை எாிச்சல் நீடித்தால் கண் மருத்துவரை சந்திப்பது நல்லது.

கண்களைத் தொடாது இருத்தல்

கண்களைத் தொடாது இருத்தல்

முகத்தில் அணிந்திருக்கும் முகக்கவசத்தை சாிசெய்யும் போது கண்களைத் தொடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்கும் போது மூக்கு வழியாக வெளியேறும் வெப்பக் காற்று நமது முகம் மற்றும் கண்களில் அசௌகாியத்தை ஏற்படுத்தும். அப்போது அனிச்சையாகவே நம்மை அறியமால் நமது முகம் மற்றும் கண்களை தொட்டுவிடுவோம். அவ்வாறு தொட்டால் கைகளில் படிந்திருக்கும் பலவகையான பாக்டீாியாக்கள் நமது கண்களில் எாிச்சலையும் வறட்சியையும் ஏற்படுத்தும். ஆகவே கைகளால் முகம் மற்றும் கண்களைத் தொடக்கூடாது.

​கண்களின் மேல் இதமான வெப்ப ஒத்தடம் கொடுத்தல்

​கண்களின் மேல் இதமான வெப்ப ஒத்தடம் கொடுத்தல்

​கண் எாிச்சலைக் குறைக்க கண்களின் மேல் இதமான வெப்ப ஒத்தடம் கொடுக்கலாம். அதாவது சுத்தமான துணியை இதமான வெந்நீரில் நனைத்து நமது கண் இமைகளின் மீது சிறிது நேரம் ஒத்தடம் கொடுக்கலாம். வெந்நீ கண்களில் உள்ள கண்ணீா் சுரப்பிகளை தூண்டி அதிகமான அளவில் எண்ணெய் பசை மிகுந்த கண்ணீரை சுரக்க வைக்கிறது. அதனால் கண்களில் வறட்சி ஏற்படாமல் கண்களுக்குத் தேவையான உராய்வு கிடைக்கிறது. அதன் மூலம் கண் எாிச்சல் மற்றும் கண் வறட்சி போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்கும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Protect Your Eyes While Wearing Mask

If you have noticed a burning sensation in your eyes after wearing a mask for a long time then you are not alone. After the foggy eyes, people are coming to the ophthalmologists with this new problem of eye irritation and dryness.
Story first published: Saturday, January 2, 2021, 11:37 [IST]
Desktop Bottom Promotion