For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு இதுல எந்த மாதிரி தொப்பை இருக்குன்னு சொல்லுங்க.. அதை குறைக்கும் வழிய சொல்றோம்...

தொப்பையில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையில் உருவாகும் தொப்பையை, அதற்கேற்ப குறைக்கலாம். கீழே தொப்பையின் வகைகளும், அவற்றைக் குறைக்கும் வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

|

நம்மில் பலர் அதிகம் கவலைப்படும் ஓர் விஷயமாக இருப்பது தொப்பையாகவே இருக்கும். தொப்பை ஒருவரது உடல் தோற்றத்தையே மோசமாக வெளிக்காட்டுவது மட்டுமின்றி, பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். வயிற்றுக் கொழுப்பு என்று வரும் போது, அது உள்ளுறுப்பு/தோலடி கொழுப்பாக இருக்கலாம். உள்ளுறுப்பு கொழுப்புகள் ஒருவரது உறுப்புக்களைச் சுற்றியிருக்கும் மற்றும் இது இயற்கையாகவே மிகவும் ஆபத்தானது. இருப்பினும், தோலடியில் உள்ள கொழுப்புக்கள் உள்ளுறுப்பு கொழுப்புக்களை விட தீங்கு விளைவிக்கும்.

Types Of Belly Fat And Ways To Get Rid Of Them

தொப்பையில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையில் உருவாகும் தொப்பையை, அதற்கேற்ப குறைக்கலாம். கீழே தொப்பையின் வகைகளும், அவற்றைக் குறைக்கும் வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு எந்த வகையான தொப்பை உள்ளது என்பதை அறிந்து, அதைக் குறைக்கும் வழிகளைப் பின்பற்றி சிக்கென்று மாறுங்கள்.

MOST READ: கடகம் செல்லும் புதனால் அடுத்த ஒரு மாசத்துக்கு இந்த ராசிக்காரங்க பணப் பிரச்சனையை சந்திக்கப் போறாங்க..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தத்தால் ஏற்படும் தொப்பை

மன அழுத்தத்தால் ஏற்படும் தொப்பை

ஆம், ஒருவருக்கு அதிகப்படியான மன அழுத்தம் இருந்தால், அது தொப்பையை வரவைக்கும். எப்படியெனில் மனதளவில் ஒருவர் அதிகளவு அழுத்தத்தை சந்திக்கும் போது, உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக அது அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்புக்களின் தேக்கத்திற்கு வழிவகுத்து, உடல் பருமனுடன், வேறு பல பாதிப்புக்களையும் ஏற்படுத்துகிறது.

இதைக் குறைப்பது எப்படி?

இதைக் குறைப்பது எப்படி?

மன அழுத்தத்தால் ஏற்படும் தொப்பையைக் குறைக்க, தியானம், யோகா போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தம் மற்றும் மனக் கவலை அளவு குறையும். இது தவிர, போதுமான அளவு தூக்கத்தை மேற்கொண்டால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

ஹார்மோன் தொப்பை

ஹார்மோன் தொப்பை

ஹார்மோன் தொப்பை என்பது ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுவதாகும். ஹைப்பர் தைராய்டிசம் முதல் பி.சி.ஓஎஸ் வரை, பல ஹார்மோன் மாற்றங்கள் எடை அதிகரிப்பிற்கு வழிவகுப்பதோடு, உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரித்து தொப்பையை உண்டாக்கும்.

இதை எப்படி குறைப்பது?

இதை எப்படி குறைப்பது?

ஹார்மோன் தொப்பையைக் குறைப்பதற்கான ஒரே சிறந்த வழி, ஹார்மோன் நல்லிணக்கத்தைப் பேணுவது தான். ஆரோக்கியமற்ற உணவுகள் உண்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த அவகேடோ, நட்ஸ் மற்றும் மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதோடு, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொண்டு, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். முக்கியமாக ஹார்மோன் மாற்றங்களைக் கட்டுப்படுத்த கடினமாக இருந்தால், மருத்துவரை அணுக தாமதிக்கக்கூடாது.

கீழ் வயிற்று தொப்பை

கீழ் வயிற்று தொப்பை

ஒருவரின் மேல் உடல் அடிவயிற்றுப் பகுதியை விட மெலிதாக இருக்கும் போது, அது கீழ் வயிற்று தொப்பை என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த மாதிரியான தொப்பை உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை அல்லது செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் போது ஏற்படும்.

இதைக் குறைப்பது எப்படி?

இதைக் குறைப்பது எப்படி?

கீழே வயிற்று தொப்பையை கொண்டிருப்பவர்கள், சிறந்த செரிமானத்திற்கு நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். அதிக நீரைப் பருக வேண்டும் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். அதோடு அடிவயிற்று கொழுப்பைக் குறைக்கும் உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் அடிவயிற்றுப் பகுதி தொப்பையை விரைவில் குறைக்கலாம்.

வீங்கிய/உப்பிய வயிறு

வீங்கிய/உப்பிய வயிறு

வீங்கிய வயிறானது ஒருவருக்கு மோசமான உணவு அல்லது குறிப்பிட்ட உணவுகளின் சகிப்புத்தன்மையால் ஏற்படுகிறது. இந்த வகையான வயிற்றைக் கொண்டவர்கள், அசிடிட்டி மற்றும் அஜீரண கோளாறால் அடிக்கடி அவதிப்படுவார்கள்.

இதைக் குறைப்பது எப்படி?

இதைக் குறைப்பது எப்படி?

வீங்கிய வயிற்றைக் குறைக்கும் சிறந்த வழி, தினமும் உடற்பயிற்சி செய்வது தான். வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். முக்கியமாக குளிரூட்டப்பட்ட பானங்கள் மற்றும் அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

அம்மா தொப்பை

அம்மா தொப்பை

புதிதாக குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள் தான் இந்த வகையான தொப்பையைப் பெறுகிறார்கள். இந்த மாதிரியான தொப்பையைக் கொண்ட பெண்கள், என்ன தான் குழந்தையை பெற்றெடுத்துவிட்டாலும், அவர்கள் இன்னும் கர்ப்பமாக இருப்பது போலவே தோன்றக்கூடும். ஒரு பெண்ணின் உடல் கர்ப்பத்திற்கு பின், மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு நேரம் எடுக்கும். எனவே அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பொறுமையாக இருந்தால் போதும்.

இதைக் குறைப்பது எப்படி?

இதைக் குறைப்பது எப்படி?

அம்மா தொப்பையைக் கொண்டவர்கள், அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல், போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் ஓய்வு எடுப்பதன் மூலம் உடல் தன்னைத் தானே விரைவில் சரிசெய்யும். மேலும் இக்கால கட்டத்தில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த நட்ஸ், ஆலிவ் ஆயில் மற்றும் அவகேடோ போன்றவற்றை சாப்பிடுவதோடு, சருமத்தை இறுக்குவதற்கு கெகல் பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types Of Belly Fat And Ways To Get Rid Of Them

There are different types of bellies that one might possess. Depending on the kind of tummy you have, you can eliminate the fat accordingly. Read on to know more...
Desktop Bottom Promotion