Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஒரு நாளைக்கு 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
நீங்கள் ஒவ்வொரு நாளும் 2 ½ டம்ளர் நற்பதமான ஆரஞ்சு ஜூஸ் பருகுவதால் உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதில்லை, உங்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதில்லை. இது விளையாட்டல்ல. அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் கேள்விப்பட்டதுண்டா? இது ஒரு கல்லில் மூன்று மாங்காய். ஆம், உங்கள் மூன்று பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு. உடல் பருமன், இதய ஆரோக்கியம், நீண்ட ஆயுட்காலம் ஆகிய மூன்றுக்கும் ஒரே தீர்வு என்ன தெரியுமா? ஆரஞ்சு ஜூஸ்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் 2 ½ டம்ளர் நற்பதமான ஆரஞ்சு ஜூஸ் பருகுவதால் உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதில்லை, உங்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதில்லை. இது விளையாட்டல்ல. அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை. ஆரஞ்சு ஜூஸ் பருகுவதால் உடல் பருமன் குறைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன மற்றும் எதிர்மறை விளைவுகள் தடுக்கப்படுகின்றன. இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைப் படியுங்கள்.

ஆராய்ச்சி
லிப்பிட் ஆராய்ச்சி குறித்த பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி , ஆரஞ்சு மற்றும் டேங்கரின் ஆகியவற்றில் நோபெலிட்டின் என்னும் மூலக்கூறு உள்ளது . இது உடல் பருமன் மற்றும் அது தொடர்பான சாத்தியமான பக்க விளைவுகள் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது என்று அறியப்படுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சின் போது, உடல் பருமன் மற்றும் அது தொடர்பான எதிர்மறை அறிகுறிகள் கொண்ட எலிக்கு நொபிலிட்டின் பயன்படுத்தியதால் அதன் அறிகுறிகள் தடுக்கப்படுகின்றன மற்றும் தமனி தடிப்பு என்னும் தமனிகளில் கொழுப்பு படியக்கூடிய நிலையும் தடுக்கப்படுகிறது.

எலி கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு
இந்த ஆராய்ச்சி இரண்டு குழுக்களாக எலிகளை பிரித்து நடத்தப்பட்டது. இரண்டு குழுவிற்கும் உயர் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் கொழுப்பு உணவுகள் கொடுக்கப்பட்டன. இதனால் உடல் பருமன் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதில் ஒரு குழுவிற்கு மட்டும் இதனுடன் நொபிலிட்டின் வழங்கப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவில் , நொபிலிட்டின் உட்கொண்ட எலிகள் மற்ற குழுவுடன் ஒப்பிடும் போது மிகவும் மெலிந்து காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் நொபிலிட்டின் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிய மேற்கொண்டு ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

நொபிலிட்டின் பணி என்ன?
கொழுப்பு ஒழுங்குமுறைக்கு காரணமான வழிகளை நொபிலிட்டின் மூலக்கூறு பாதிப்பதாக நம்பப்படுகிறது. AMP கைனேஸ் என்பது கொழுப்பு கட்டுப்படுத்தி என்று அழைக்கப்படுகிறது. கொழுப்பு உற்பத்தி செயல்பாட்டுடன் கொழுப்பு எரிக்கும் இயங்குநுட்பத்தையும் ஊக்குவிப்பது இதன் பணியாகும். நொபிலிட்டின் என்ற மூலக்கூறின் செயல்பாடு AMP கைனேஸை ஒத்து இருக்கும். "நொபிலிட்டின் AMP கைனேஸ் மீது செயல்புரியவில்லை. உடலில் கொழுப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான இந்த முக்கிய கட்டுப்பாட்டை தவிர்த்துவிட்டு வினை புரிகிறது. ஆனால் இன்னும் நமது மனதில் இந்த கேள்வி எழுகிறது. நொபிலிட்டின் இதனை எவ்வாறு செய்கிறது? " என்று முர்ரே கூறினார்.

மனித சோதனை அவசியம்
மனித உடலின் இயங்கு நுட்பம் மற்றும் எலியின் இயங்கு நுட்பம் ஆகியவை ஒரேமாதிரி இருந்தாலும், இந்த முழு சோதனையை மனிதர்களின் மேல் நடத்தி சாதகமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்று ஆராய்ச்சி குழு தீர்மானித்துள்ளது.

முடிவு
உடல் பருமன் மற்றும் அதன் விளைவான வளர்சிதை மாற்ற நோய்க்குறி ஆகியவை ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. வெகு சில கண்டுபிடிப்புகள் மட்டுமே இதற்கான சிறந்த தீர்வை வெளிப்படுத்துகின்றன ஆகவே புதிய சிகிச்சைமுறைகள் குறித்த கண்டுபிடிப்புகள் தொடர வேண்டும் என்று கூறி ஹஃப் தனது உரையை முடித்தார்.



Click it and Unblock the Notifications