Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
பப்பாளி பழத்தைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
பல கட்டுக்கதைகளைக் கொண்ட ஓர் பழம் தான் பப்பாளி. இது வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய ஓர் சுவையான பழமாகும். ஆனால் சில கட்டுக்கதைகளால் பப்பாளிப் பழம் சிலருக்கு ஆரோக்கியமற்ற உணவாக கூறப்பட்டு வருகிறது.
நாம் சாப்பிடுவதற்கு பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் எதை சாப்பிடுவது, எதை சாப்பிடக்கூடாது என்பதில் குழப்பம் ஏற்படலாம். பல பழங்களில் பக்கவிளைவுகள் ஏராளமாக உள்ளதால், ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பழங்களை சாப்பிட அச்சம் கொள்கின்றனர். ஆனால் அவற்றில் பெரும்பாலான பழங்களின் பக்கவிளைவுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை மற்றும் வெறும் கட்டுக்கதைகளாக பல தலைமுறைகளாக நம்பப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

அப்படியான பல கட்டுக்கதைகளைக் கொண்ட ஓர் பழம் தான் பப்பாளி. இது வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய ஓர் சுவையான பழமாகும். ஆனால் சில கட்டுக்கதைகளால் பப்பாளிப் பழம் சிலருக்கு ஆரோக்கியமற்ற உணவாக கூறப்பட்டு வருகிறது. இப்போது ஏராளமான ஊட்டச்சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்ட பப்பாளிப் பழம் குறித்த சில கட்டுக்கதைளையும், உண்மைகளையும் காண்போம்.

கட்டுக்கதை: பப்பாளியின் விதைகளை சாப்பிடக்கூடாது
உண்மை: அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியின் விதைகள் ஆரோக்கியமற்றவை என்று கூறப்படுவதால், அவை தூக்கி எறியப்படுகின்றன. இருப்பினும், இது ஒரு தவறான கருத்து. ஏனெனில் பப்பாளியின் விதைகளில் பல முக்கியமான நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆய்வுகளில் கூட, இது புற்றுநோயைத் தடுக்கவும், சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிப்பதாக தெரிய வந்துள்ளது. இருந்தாலும், இவற்றை அளவாக மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

கட்டுக்கதை: குறைவான ஊட்டச்சத்துக்களைக் கொண்டது
உண்மை: பப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் போன்ற முக்கியமான சத்துக்கள் உள்ளதால், இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். தொற்றுநோய் காலத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உதவும். மேலும் இதில் உள்ள லைகோபைன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

கட்டுக்கதை: கர்ப்பிணிகள் பப்பாளியைத் தவிர்க்க வேண்டும்
உண்மை: இது பப்பாளி குறித்த பொதுவான கட்டுக்கதைகளில் ஒன்றாகும். உண்மை என்னவென்றால், கனிந்த அல்லது பழுத்த பப்பாளி கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமானதாகும். இருப்பினும் பப்பாளியானது நன்கு கனிந்து இருக்க வேண்டும். பழுக்காத பப்பாளியில் லேடெக்ஸ் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தானது. ஏனெனில் இது கருப்பையில் சுருக்கங்களைத் தூண்டிவிட்டு, கருக்கலைப்பை ஏற்படுத்தும். இருப்பினும், கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடுவது குறித்து மருத்துவரிடம் கேட்டுக் கொள்வதே நல்லது.

கட்டுக்கதை: பப்பாளி அழற்சியை ஏற்படுத்தும்
உண்மை: லேடெக்ஸ் அழற்சி ஒரு பொதுவான நிகழ்வாகும். பழுக்காத பப்பாளியில் லேடெக்ஸ் உள்ளது. இது லேடெக்ஸ் அழற்சி உள்ளவர்களுக்கு அழற்சியை ஏற்படுத்தும். இருப்பினும், இத்தகையவர்கள் கனிந்த பப்பாளி சாப்பிடுவது பாதுகாப்பானது மற்றும் இது ஆரோக்கியமான உணவும் கூட.

கட்டுக்கதை: பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது
உண்மை: பப்பாளி செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் பாப்பைன் எனப்படும் நொதி உள்ளது. வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பப்பாளியை சாப்பிட்டால், இதில் இருந்து விடுபடலாம். அதுவும் பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் உண்பது செரிமான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உடல் செயல்பாட்டை சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.



Click it and Unblock the Notifications
