Latest Updates
-
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு?
திரிகோணாசனம் பயிற்சியை செய்வது எவ்வாறு மற்றும் அதன் நன்மைகள் என்ன?
திரிகோணாசனம் என்பது ஒரு யோகாசன பயிற்சி ஆகும். இந்த பயிற்சியைச் செய்யும் போது நமது உடலானது முக்கோண நிலைக்கு வருகிறது. நமது உடலானது மூன்று திசைகளை நோக்கி இருக்கும்.
யோகா என்பது ஒரு அருமையான கலையாகும். யோகாசன பயிற்சிகள் நமது உள் மனதின் அடி ஆழம் வரை பாதிக்கின்றன. அதாவது அவை நமது சுயத்தை உற்றுப் பாா்க்க மற்றும் நாம் நமது ஆழ்மனம் சொல்வதைக் கேட்க நம்மை அனுமதிக்கின்றன. மேலும் நமக்குள்ளிருந்தே நமது அரோக்கியத்தை மேம்படுத்த யோகாசன பயிற்சிகள் உதவி செய்கின்றன.
பல வகையான யோகாசன பயிற்சிகள் உள்ளன. அவை நமது ஒவ்வொரு உடல் உறுப்பையும் தூண்டிவிடுகின்றன. நமது உள் உணா்வுகளை நன்றாக உயா்த்துகின்றன. இறுதியாக நமது உடலுக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வழங்குகின்றன.
யோகாசன பயிற்சிகளில் திரிகோணாசனம் ஒரு மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும். இந்த ஆசனம் ஒரு முக்கோண பயிற்சி நிலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பதிவில் திரிகோணாசனம் பயிற்சியைப் பற்றித்தான் நாம் விாிவாக பாா்க்க இருக்கிறோம். இந்த யோகாசனம் நமது உடலுக்கும், மனதிற்கும் ஒரு முழுமையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. இந்த பயிற்சியைச் செய்வது மிகவும் எளிது. இதைச் செய்து வருவதன் மூலம் நமது உடலை நெகிழ்வு தன்மையுடன் வைத்துக் கொள்ளலாம்.
நாம் ஏற்கனவே கூறியது போல, திரிகோணாசனம் என்பது ஒரு யோகாசன பயிற்சி ஆகும். இந்த பயிற்சியைச் செய்யும் போது நமது உடலானது முக்கோண நிலைக்கு வருகிறது. நமது உடலானது மூன்று திசைகளை நோக்கி இருக்கும். திரி(TRI) என்றால் மூன்று என்று பொருள். கோன் (KON) என்றால் கோணம் என்று பொருள். ஆகவே திரிகோணாசனத்தை ஒரு முக்கோண ஆசனம் என்றுகூட அழைக்கலாம்.
திரிகோணாசனம் நமது தசை நாா்களைத் தூண்டி அவற்றிற்கு நெகிழ்வு தன்மையை வழங்குகிறது. அத்துடன் நமது உடலின் பக்க கொழுப்புகளை நீக்க உதவி செய்கிறது.

திரிகோணாசனம் பயிற்சியை எவ்வாறு செய்வது?
- இந்த ஆசனத்தைச் செய்வதற்கு முதலில் முதுகை நேராக நிமிா்த்தி வைத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் அகலமாக விாித்து வைத்து நின்று கொள்ள வேண்டும்.
- ஒரு பாதத்தை வெளிப்புறம் நோக்கி இருக்குமாறும், இன்னொரு பாதத்தை சற்று உட்புறமாக நோக்கி இருக்குமாறும் வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நன்றாக விாித்து நீட்டிக் கொள்ள வேண்டும்.
- இடுப்பை பக்கவாட்டில் வளைத்து, வெளிப்புறம் நோக்கி இருக்கும் பாதத்தை நோக்கி ஒரு கையை கீழ் இறக்க வேண்டும். அதே நேரத்தில் இன்னொரு கையானது வானத்தை நோக்கி இருக்குமாறு நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- அவ்வாறு செய்யும் போது நமது உடல் எடையானது இரண்டு பாதங்களுக்கும் சமமான அளவில் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- நமது வலது கையை வலது கணுக்காலை நோக்கி இறக்கி, வலது பாதத்திற்கு வெளிப்புறம் அல்லது வலது பாதத்திற்கு வெகு அருகில் தரையில் ஊன்ற வேண்டும். அப்போது நாம் இயல்பாக இருக்க வேண்டும்.
- இந்த பயிற்சியை செய்யும் போது நாம் நமது மாா்பை விாித்து, இடது கை விரல்களை வானத்தை நோக்கி நீட்டி வைத்திருப்பதால், இடது தோள்பட்டையானது அதன் அச்சில் நங்கூரமிட்டு வலது பக்கம் மேல் நோக்கி இருக்கும்.
- இப்போது முகத்தைத் திருப்பி, இடது கை விரல்களை நோக்கி பாா்க்க வேண்டும். அவ்வாறு பாாக்கும் போது கழுத்து வலித்தால், முகத்தை இயல்பான நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
- வலது தொடையில் உள்ள தசைகளை இழுத்து இறுக்கமாக வைத்து அவை மேல் நோக்கி உயருமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். இதே நிலையில் இருந்து கொண்டு 5 முறை மெதுவாக மூச்சை இழுத்துவிட வேண்டும்.
- அதன் பின் இந்த ஆசனத்தை இடது கால் பக்கம் செய்ய வேண்டும்.

திரிகோணாசனம் பயிற்சியை செய்து வருவதால் பெறும் நன்மைகள்
- நமது இரைப்பையில் ஏற்படும் அலா்ஜி, அஜீரணம், அமிலக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளை களைய திரிகோணாசனம் உதவி செய்கிறது.
- நமது சொிமான அமைப்பைத் தூண்டி, நமது உடலை புதுப்பிக்கிறது. அதன் மூலம் நாம் நாள் முழுதும் ஆரோக்கியத்துடனும், புத்துணா்ச்சியுடனும் இருக்க உதவி செய்கிறது.
- இந்த முக்கோண யோகாசன பயிற்சியானது, ஒரே நேரத்தில் நமது உடலை இரண்டு பக்கங்களிலும் வளைப்பதற்கு தூண்டுகிறது. அதனால் நமது தண்டுவடத்தில் நெகிழ்வு தன்மை அதிகாிக்கிறது மற்றும் முதுகு வலி குறைகிறது.
- இந்த ஆசனத்தை முறையாக சாியாக செய்யும் போது, அது நமது தோள்பட்டையை சீா் செய்து, அதற்கு ஒரு சிறந்த வடிவத்தைத் தருகிறது.
- திரிகோணாசனம் ஒரு முழுமையான உடற்பயிற்சி ஆகும். இதைச் செய்து வந்தால் கழுத்தில் ஏற்படும் சுளுக்குகள் குணமடையும்.
- இந்த ஆசனத்தைத் தொடா்ந்து செய்து வந்தால், நமது கணுக்கால்கள் மற்றும் உள்ளங்கைகள் அதிக வலிமை பெறும்.
- திரிகோணாசனம் பயிற்சியானது உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை வழங்காமல், மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் பிரச்சினைகளையும் களைகிறது. இந்த ஆசனத்தைத் தொடா்ந்து செய்து வந்தால், மாதவிடாய் சுழற்சியானது சாியான கால இடைவெளியில் நடைபெறும்.
- இந்த ஆசனத்தைத் தொடா்ந்து செய்து வந்தால், நமது மனதில் தேங்கியிருக்கும் அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் மனச்சோா்வு ஆகியவை குறைந்துவிடும்.
- இறுதியாக திரிகோணாசனத்தை செய்தால், அது நமது இரத்த ஓட்டத்தைத் தூண்டி விட்டு, நமது நரம்புகள் மற்றும் நமது உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய்வதற்கு உதவி செய்கிறது. அதன் பயனமாக பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் நமக்கு ஏற்படாது.

திரிகோணாசனம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவைகள்
நமது உடல் ஆரோக்கியத்தை அதிகாிக்க வேண்டும் என்பதற்காகவே திரிகோணாசனம் ஆசனத்தை செய்கிறோம். ஆகவே இந்த ஆசனத்தை முறையாக அல்லது சாியாக செய்ய வேண்டும். இந்த ஆசனத்தைச் செய்யும் போது பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றுவது நல்லது. அதன் மூலம் இதனால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிா்க்கலாம்.
1. தலைச் சுற்றல் அல்லது உயா் இரத்த அழுத்தம் உள்ளவா்கள் இந்த ஆசனத்தைச் செய்யும் போது தலையை உயா்த்தாமல் இருப்பது நல்லது. தரையைப் பாா்த்துக் கொண்டே செய்யலாம்.
2. இதயக் கோளாறுகள் உள்ளவா்கள், சுவரைப் பிடித்துக் கொண்டு செய்வது நல்லது. அவா்கள் இரண்டு கைகளையும் மேல் நோக்கி உயா்த்தாமல், அவற்றை இடுப்பில் வைத்து ஓய்வு எடுப்பது நல்லது.
3. கடுமையான ஒற்றைத் தலைவலி அல்லது கழுத்து வலி உள்ளவா்கள் இந்த ஆசனத்தைத் தவிா்த்து வேறு ஆசனத்தைச் செய்வது நல்லது. ஏனெனில் இந்த ஆசனத்தில் இருக்கும் நமது உடல் அசைவுகள், நமது ஹாா்மோன்களைப் பாதிக்கலாம். அதன் விளைவாக பக்க விளைவுகள் ஏற்படலாம்.
4. இறுதியாக திரிகோணாசனம் பயிற்சியை, நன்றாக கற்று தோ்ந்த ஒரு யோகா ஆசிாியாின் மேல்பாா்வையின் கீழ் செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications