For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தீபாவளிக்கான சில டிப்ஸ்...

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி. எவ்வாறு பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

|

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளிப் பண்டிகை. உற்சாகத்தின் மத்தியில், காயம் அல்லது விபத்துக்கள் இல்லாமல், நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் எவ்வாறு பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த தீபாவளியை மறக்க முடியாத மற்றும் சிறப்பு நினைவாக மாற்ற இந்த எளிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும்.

Tips For A Safe And Healthy Diwali

தீபாவளிக் கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் கொண்டாட்டங்களின் போது எழும் பிரச்சனைகளுக்கு நான்கு முக்கிய காரணங்கள் உண்டு . அவை தீ, ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் கலோரி நிறைந்த உணவுகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீ ஆபத்து

தீ ஆபத்து

தீபாவளிப் பண்டிகையில் ஆபத்தை உண்டாக்கும். முதல் காரணி நெருப்பு. பண்டிகையின் போது பல்வேறு காரணங்களால் நெருப்பின் மூலம் ஆபத்து ஏற்படலாம். தீபாவளித் திருநாளில் விளக்குகள் ஏற்றுவதன் காரணமாக, பட்டாசு வெடித்து கொண்டாடுவதன் காரணமாக அல்லது குழுக்களாக சேர்ந்து கொண்டாடும் காரணத்தால் கவனக்குறைவின் காரணமாக தீ விபத்து ஏற்படலாம்.

MOST READ: உங்க பல் சொத்தையாகாமல் இருக்கணுமா? அப்ப இதெல்லாம் செய்யுங்க...

நெருப்பினால் ஏற்படும் காயத்தைத் தவிர்க்க சில எளிய உதவிக்குறிப்புகள்:

நெருப்பினால் ஏற்படும் காயத்தைத் தவிர்க்க சில எளிய உதவிக்குறிப்புகள்:

* வெளிப்புறங்களில் எப்போதும் பரந்த திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிக்கச் செய்யுங்கள்.

* குப்பைத்தொட்டி, குப்பைகள் மற்றும் எரியக்கூடிய பிற பொருட்களின் அருகில் நின்று பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.

* பட்டாசுகளை ஏற்றும்போது உங்களுக்குப் பொருந்தக் கூடிய அளவு பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

* பட்டாசு வைத்திருக்கும் இடங்களில் அல்லது பட்டாசு அருகில் நடக்கும்போது பாதணிகளை அணியுங்கள்.

* வெடித்து முடித்த பட்டாசுகளை ஒரு வாளி மணலில் அல்லது ஒரு மூலையில் தண்ணீரில் முக்கி எடுத்து அப்புறப்படுத்துங்கள்.

* எளிமையான தீக்காயத்தின் போது, உடனடியாக அந்த இடத்தை குழாய் நீரில் கழுவவும். இது ஒரு தீவிர தீக்காயமாக இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

ஒலி மாசு

ஒலி மாசு

* பட்டாசுகளிலிருந்து சத்தமாக வெடிக்கும் ஒலிகள் காது சவ்வைச் சேதப்படுத்தும் மற்றும் தற்காலிக அல்லது நிரந்தர செவித்திறன் குறைபாட்டை ஏற்படுத்தும்.

* பட்டாசுகளின் சத்தங்கள் காரணமாக ஒரு சிலருக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்களிடையே மாரடைப்பு கூட ஏற்படலாம்.

* ஒலி மிகவும் சத்தமாகவும் தாங்கமுடியாததாகவும் இருந்தால் காது செருகிகளைப் (Ear Plug) பயன்படுத்தவும்.

* குறைந்த ஒலி பட்டாசுகளை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

MOST READ: தீபாவளி பலகாரங்களால் குண்டாகாம இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்...

காற்று மாசு

காற்று மாசு

* பட்டாசுகளிலிருந்து வரும் தூசி மற்றும் ரசாயனங்கள் காற்றுப் பாதைகளையும், கண்களையும் எரிச்சலடையச் செய்யலாம்.

* கண்களில் எரியும் உணர்வு ஏற்பட்டால், கண்ணை நிறைய தண்ணீரில் கழுவ வேண்டும்.

* நச்சு இரசாயனங்கள் வெளியேற்றும் புகை ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் போன்ற நிலைகளை மோசமாக்கும்.

* சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியேறும் போது பாதுகாப்பு முகமூடிகளை அணியுங்கள்.

* அதிக மாசுபாட்டின் அளவு தோல் ஒவ்வாமை மற்றும் தோல் வெடிப்புகளையும் ஏற்படுத்தும். தோல் எரிச்சலைத் தவிர்க்க, பட்டாசுகளை கையாண்ட பிறகு கைகளையும், கால்களையும் நன்கு கழுவுங்கள்.

உயர் கலோரி மற்றும் சர்க்கரை உணவுகள்

உயர் கலோரி மற்றும் சர்க்கரை உணவுகள்

* தீபாவளியின் போது உயர் கலோரி இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் பிரதானமானவை.

* நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக இந்த வகை உணவுகளால் பாதிக்கப்படக்கூடியவர்கள். ஆகவே இத்தகையவர்கள் ஆரோக்கியமான உணவு தேர்வுகளை செய்ய வேண்டும்.

* அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தைத் தடுக்க சர்க்கரை மற்றும் எண்ணெய் சுவையான உணவுகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

MOST READ: ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

ஆரோக்கியம் மேம்பட...

ஆரோக்கியம் மேம்பட...

* பண்டிகை நாள் முழுவதும் அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நீர்ச்சத்துடன் இருங்கள்.

* நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கான பரிசுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, இனிப்புகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற தின்பண்டங்களுக்கு மாற்றாக ஆரோக்கியமான நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

தீபங்களின் திருவிழாவான தீபாவளி உங்கள் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கான பாதையை பிரகாசமாக்கட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips For A Safe And Healthy Diwali

Here are some tips for a safe and healthy diwali. Read on...
Desktop Bottom Promotion