For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமைத்த உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுறீங்களா? இப்படி சூடுபண்ணுங்க இல்லனா ஆபத்துதான்...!

உணவை மீண்டும் சூடாக்குவது என்பது மிகவும் தந்திரமான விஷயமாகும், சிறிய அறியாமை கூட உணவின் சுவை மற்றும் அமைப்பைக் கெடுத்துவிடும்.

|

உணவை மீண்டும் சூடாக்குவது என்பது மிகவும் தந்திரமான விஷயமாகும், சிறிய அறியாமை கூட உணவின் சுவை மற்றும் அமைப்பைக் கெடுத்துவிடும். எஞ்சிய உணவை வீணாக்காமல் சாப்பிட வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை, சில சமயங்களில் அது சமைத்த நாளை விட அடுத்தநாள் சுவையாக இருக்கும், அதற்கு காரணம் அதனை சரியாக சூடுசெய்வதாக கூட இருக்கலாம்.

Things to Keep in Mind While Reheating Food in Tamil

துரதிர்ஷ்டவசமாக சில சமயங்களில் உணவை மீண்டும் சூடாக்குவது உணவின் சுவையை கெடுப்பதுடன் பல ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. எனவே சமைத்த உணவை மீண்டும் சூடாக்கும் போது எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் உணவை சூடு பண்ணும்போது நினைவில் கொள்ள வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவை சரியாக சூடாக்குவது ஏன் முக்கியம்?

உணவை சரியாக சூடாக்குவது ஏன் முக்கியம்?

சுவை மற்றும் அமைப்பைத் தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், எஞ்சியிருக்கும் உணவு அல்லது சமைத்த உணவைத் தவறான வழியில் மீண்டும் சூடுபடுத்துவது வயிற்றில் தொற்று மற்றும் உணவை விஷமாக மாற்றுவது போன்ற சில தீவிர தாக்கங்களை ஏற்படுத்தும். சரியான வெப்பநிலையில் உணவை சூடாக்குவது கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் உணவின் ஊட்டச்சத்தையும் தக்க வைத்துக் கொள்ளும்.

நன்றாக சூடு செய்ய வேண்டும்?

நன்றாக சூடு செய்ய வேண்டும்?

மீண்டும் சூடாக்குவது என்பது உணவை 30 வினாடிகள் அல்லது சிறிது நேரம் மட்டும் சூடாக்குவது மட்டுமல்ல; மாறாக இது ஒரு விரிவான செயல்முறையாகும், இதில் உணவு சமைக்கும் போது இருந்ததைப் போலவே சூடாக இருக்க வேண்டும். பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்த உணவு சூடாகவும், உடனடியாக உட்கொள்ளப்படுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சூடாக்கும் முன் நன்கு குளிர வைக்கவும்

சூடாக்கும் முன் நன்கு குளிர வைக்கவும்

உங்கள் உணவை முன்கூட்டியே திட்டமிட்டால், சமைத்த உடனேயே குறைந்தது இரண்டு மணிநேரங்களுக்கு உணவை குளிர்விப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உணவு சாதாரண அறை வெப்பநிலையை அடைந்த பிறகு உணவை மூடி குளிர்சாதன பெட்டியில் வையுங்கள். குளிர்சாதன பெட்டியில் இருக்கும் உணவை மீண்டும் சூடுபண்ணும்போதும் இதையே கடைபிடிக்க வேண்டும். குளிர்ஸ்தான பெட்டியில் இருந்து உணவை எடுத்து அறைவெப்பநிலையை அடைந்த பின்னரே மீண்டும் சூடாக்க வேண்டும்.

மீண்டும் சூடாக்கக்கூடாது

மீண்டும் சூடாக்கக்கூடாது

நீங்கள் உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும்போது, உணவு அதன் சத்துக்களை இழக்கிறது, மேலும் இது உணவு விஷம் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. அதனால்தான் உணவை ஒரு முறை சரியான வெப்பநிலையில் சூடாக்க வேண்டும் என்று உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்

உறைந்த உணவை எப்படி மீண்டும் சூடாக்க வேண்டும்?

உறைந்த உணவை எப்படி மீண்டும் சூடாக்க வேண்டும்?

முறையான செயல்முறையைப் பின்பற்றினால் மட்டுமே உறைந்த உணவை மீண்டும் சூடுபடுத்துவது பாதுகாப்பானது. உறைந்த உணவை மீண்டும் சூடாக்குவதில் உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், அதனை சூடாக்க அதிக நேரம் தேவைப்படும், ஆனால் முதலில் உணவை அறை வெப்பநிலைக்கு கொண்டுவந்தால் மட்டுமே, அதைச் சரியாகச் சூடாக்க முடியும். இருப்பினும், நீங்கள் ஆறவைக்கும் செயல்முறைக்கு செல்லாமல் சமைக்கலாம், ஆனால் உணவை சூடாக மாறும் வரை அதிக நேரம் மீண்டும் சூடாக்க மறக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things to Keep in Mind While Reheating Food in Tamil

Check out the important things to keep in mind while reheating food.
Story first published: Thursday, November 3, 2022, 18:09 [IST]
Desktop Bottom Promotion