For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! சளி, இருமல் இருந்தா, இந்த உணவுகளை மறந்தும் சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்...

சளி, இருமல் இருந்தால் உண்ணும் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் சளி, இருமல் பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.

|

குளிர்காலம் அல்லது பனி காலத்தில் ஏராளமான மக்கள் சளி, இருமல் பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். அதோடு இக்காலத்தில் பாக்டீரியல் தொற்றுக்களால் பலர் காய்ச்சலாலும் கஷ்டப்படுவார்கள். இதற்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொண்டால் காய்ச்சல் குறைந்துவிடும். ஆனால் சளி, இருமல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், அவ்வளவு எளிதில் குணமாகிவிடாது. எனவே சளி, இருமல் இருந்தால் உண்ணும் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் சளி, இருமல் பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.

These Things Should Not Be Eaten By Mistake In Cold And Cough

இப்போது சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த உணவுகளை தப்பித்தவறி சாப்பிட்டால், அது மார்பில் சளியை அதிகரித்து, நிலைமையை மோசமாக்கி, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

நிபுணர்களின் கூற்றுப்படி, சளி, இருமல் பிரச்சனையைக் கொண்டவர்கள் பாலைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் பால் குடிப்பதால் மார்பு பகுதியில் சளி அதிகம் உற்பத்தியாகி தேங்க ஆரம்பித்து, இருமலை மேன்மேலும் அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு சளி, இருமல் இருந்தால், பால் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

சாதம்

சாதம்

மருத்துவரின் கூற்றுப்படி, அரிசியானது குளிர்ச்சித்தன்மை கொண்டது மற்றும் இது சளியை உருவாக்கும் தன்மையைக் கொண்டது. ஆகவே சளி பிரச்சனையால் ஏற்கனவே அவதிப்படும் ஒருவர் சாதத்தை சாப்பிட்டால், அது பிரச்சனையை மோசமாக்கும்.

சர்க்கரை

சர்க்கரை

இருமல் உங்களுக்கு அதிகம் இருந்தால் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடாதீர்கள். ஏனெனில், சர்க்கரையானது மார்பில் அழற்சியைத் தூண்டும். அதே வேளையில், சர்க்கரை நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி, இருமல் மற்றும் சளியை அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு விரைவில் சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், சர்க்கரையைத் தவிர்த்திடுங்கள்.

காபி

காபி

சளி மற்றும் இருமல் இருக்கும் போது காப்ஃபைன் நிறைந்த பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பொதுவாக காப்ஃபைன் நிறைந்த பானங்கள் தொண்டை தசைகளில் வறட்சியை ஏற்படுத்தி, அதிகளவு இருமலுக்கு வழிவகுக்கும். ஆகவே இனிமேல் சளி பிடித்திருக்கும் போது, காப்ஃபைன் நிறைந்த காபி, டீ குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

மருத்துவர்களின் கூற்றுப்படி, சர்க்கரைக்கு அடுத்ப்படியாக நெஞ்சுப் பகுதியில் அழற்சியை அதிகரிக்கும் ஓர் உணவுப் பொருள் என்றால், அது ஆல்கஹால் தான். சளி பிடித்திருக்கும் போது, ஆல்கஹாலைக் குடித்தால், நமது உடலில் காயத்தைக் குணப்படுத்தும் செயல்முறையை செய்யும் இரத்த வெள்ளையணுக்கள் சேதமடைவதோடு, உடலில் உள்ள பிரச்சனையும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Things Should Not Be Eaten By Mistake In Cold And Cough

Here we listed some things that should not be eaten by mistake in cold and cough. Read on to know more...
Story first published: Tuesday, January 11, 2022, 12:11 [IST]
Desktop Bottom Promotion