Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
வாயில் இந்த மாதிரி இருக்கா.. அப்ப உடம்பில் ஏதோ பெரிய பிரச்சனை இருக்குன்னு அர்த்தமாம்.. உஷார்...
வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தக்கசிவு, ஈறு வீக்கம் போன்றவை வெறும் வாய் பிரச்சனைகள் மட்டுமல்ல, உடலில் உள்ள பல ஆபத்தான கொடிய நோய்களின் அறிகுறியும் கூட.
ஒருவருக்கு வாய் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வாயின் வழியாக பல கிருமிகள் உடலினுள் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இதை அனைவருமே அறிவோம். வாய் சுகாதாரம் என்று வரும் போது பலரும் பற்களின் சுத்தத்தை மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் வாய் நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி, உடலில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்லும் என்பது தெரியுமா?

வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தக்கசிவு, ஈறு வீக்கம் போன்றவை வெறும் வாய் பிரச்சனைகள் மட்டுமல்ல, உடலில் உள்ள பல ஆபத்தான கொடிய நோய்களின் அறிகுறியும் கூட. எனவே வாயில் சந்திக்கும் பிரச்சனைகளை சாதாரணமாக நினைக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இவை உடலில் வளரும் கொடிய நோய்களின் முக்கிய அறிகுறியாகும். இப்போது வாயில் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவை எந்த நோயை உணர்த்துகின்றன என்பதையும் காண்போம்.

வாய் துர்நாற்றம்
உங்கள் வாய் துர்நாற்றத்துடன் உள்ளதா? அப்படியானால் அது உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதற்கான முக்கிய அறிகுறி. பெரும்பாலும் வாய் துர்நாற்றம் ஈறு நோயின் அறிகுறியாக இருக்கும். சில சமயங்களில் மூக்கு, சைனஸ் அல்லது தொண்டையில் ஏற்படும் அழற்சியும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இது தவிர சில புற்றுநோய்கள் மற்றும் வளர்சிதை மாற்ற கோளாறுகளும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். வயிற்றில் அதிகப்படியான அமில சுரப்பின் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.

ஈறுகளில் இரத்தக்கசிவு
உங்களின் ஈறுகள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா அல்லது பற்களைத் துலக்கும் போது இரத்தக்கசிவு ஏற்படுகிறதா? அப்படியானால் அது ஈறு நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஹார்வார்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் ஈறு நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

வாய் புண்கள்
சிலருக்கு வாயில் புண்கள் வரும். இது சாதாரணம் தான். பொதுவாக வாயில் வரும் புண்கள் சில நாட்கள் அல்லது வாரங்களில் சரியாகிவிடும். வாய்ப் புண்கள் ஹார்மோன் மாற்றங்கள், பி வைட்டமின்களின் குறைபாடுகள், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகள் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் இது கை, கால் மற்றும் வாய் நோய், வாய்வழி லிச்சென் பிளானஸ், கிரோன் நோய், செலியாக் நோய், எச்.ஐ.வி அல்லது லூபஸ் போன்ற தீவிர நோய்களினாலும் ஏற்படலாம்.

உதடுகளில் பிளவு
உதட்டின் ஓரங்களில் பிளவுகள் ஏற்படுவது இரும்புச்சத்து, ஜிங்க் அல்லது பி வைட்டமின்களின் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் இது செரிமான மண்டலத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் வரக்கூடும். செலியாக் நோய், கிரோன் அல்லது அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற சில நோய்களின் காரணமாகவும் ஏற்படலாம். உதடுகளில் ஏற்படும் பிளவுகளை சரிசெய்ய, வைட்டமின் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

வெள்ளை நிற நாக்கு
நாக்கில் வெள்ளை படலம் தோன்றுவது சாதாரணம் தான். ஆனால் அந்த வெள்ளை படலமானது மிகவும் அடர்த்தியாக இருந்தால், அது ஏதேனும் தொற்று அல்லது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அசாதாரண வெள்ளைப் படலம் புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே இம்மாதிரியான நிலையில் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இந்த வெள்ளை படலம் வாய்வழி லிச்சென் பிளானஸ் அல்லது ஓரல் த்ரஷ் ஆக இருக்கலாம். இல்லாவிட்டால், பாலியல் நோய்களுள் ஒன்றான சிபிலிஸின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.

ஈறு வீக்கம்
ஈறுகளில் வீக்கம் ஏற்படுவது வைட்டமின் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் மல்டி வைட்டமின் மற்றும் ஒமேகா-3 மீன் எண்ணெய் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம், ஊட்டச்சத்து குறைபாட்டினை சரிசெய்ய முடியும்.



Click it and Unblock the Notifications
