For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சாதாரண உணவுகளை ஒழுங்காக சமைக்காவிட்டால் உங்களுக்கு உடனடி மரணத்தை ஏற்படுத்துமாம்... ஜாக்கிரதை!

ஆரோக்கிய வாழ்வில் உணவு தயாரிக்கும் முறை மிகவும் முக்கியமானது. பூச்சிக்கொல்லிகளை அகற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுதல் ஒரு பொதுவான நடைமுறையாகும்.

|

ஆரோக்கிய வாழ்வில் உணவு தயாரிக்கும் முறை மிகவும் முக்கியமானது. பூச்சிக்கொல்லிகளை அகற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுதல் ஒரு பொதுவான நடைமுறையாகும், மேலும் பச்சை இறைச்சியை நன்கு சமைப்பதும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் சரியாக சமைக்காத உணவு உங்களுக்கு விஷமாக மாறக்கூடும்.

These Common Foods Can Cost You Your Life in Tamil

உண்மைதான், சில ஆரோக்கியமான மற்றும் நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகூட சரியாக சமைக்காமல் இருந்தால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறலாம். உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள அன்றாட உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி

அரிசி

அரிசி மிகவும் பரவலாக உட்கொள்ளப்படும் முக்கிய உணவு, ஆனால் இந்த பிரதான உணவை சாப்பிடுவது உங்கள் ஆயுட்காலத்தையும் குறைக்க வாய்ப்புள்ளது. ஆய்வின்படி அரிசியில் இருப்பது கண்டறியப்பட்டது

அதிக அளவு ஆர்சனிக், இது அடிப்படையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு, இது பொதுவாக நிலத்தடி நீர் மற்றும் மண்ணில் உள்ளது. உண்மையில், அரிசியை முறையற்ற முறையில் சமைப்பது பாக்டீரியா மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுகளுக்கு வழி வகுக்கும். எனவே இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் வகைகளுக்குச் செல்ல வேண்டும் மற்றும் வழக்கமான அரிசியை ஒருவர் அரை மணி நேரம் ஊறவைத்து, சமைப்பதற்கு முன் நன்கு கழுவ வேண்டும்.

மிளகாய்

மிளகாய்

மிளகாய் உணவுகளுக்கு காரமான சுவையை சேர்க்கிறது, ஆனால் மிளகாயை அதிகமாக சாப்பிடுவது செரிமான அமைப்பை பாதிக்கும். எரியும் உணர்வை ஏற்படுத்துவதைத் தவிர, காரமான மிளகாயை அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி, பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும், குறிப்பாக எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கு. இது உடல் சூட்டை அதிகப்படுத்துகிறது, இது கோடை காலத்திற்கு நல்லதல்ல.

 பீனட்

பீனட்

மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பருப்புகளில் இது முக்கியமானதாகும், இதுவும் சில அமைதியான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது, இது உங்கள் உயிரை பறிக்கக்கூடும். வேர்க்கடலை ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் சொறி, தொண்டை வீக்கம், திடீர் சுவாசப் பிரச்சனைகள் போன்ற பல அறிகுறிகளை எதிர்கொள்ளலாம். உணவு ஒவ்வாமையின் பயங்கரமான வகைகளில் இதுவும் ஒன்றாகும், இது சில சந்தர்ப்பங்களில் ஆபத்தானதாகவும் மாறும்.

சூஷி

சூஷி

சுஷி குறிப்பாக ஒவ்வாமைகளைத் தூண்டலாம் மற்றும் ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம், ஏனெனில் பெரும்பாலான சூஷிகள் மீனில் தயாரிக்கப்படுகின்றன, அவை பச்சையாக, புகைபிடித்த அல்லது உறைந்த நிலையில் இருக்கும். முறையற்ற முறையில் சமைக்கப்பட்ட அல்லது சமைக்கப்படாத இந்த மீன்களில் கிருமிகள், புழுக்கள் அல்லது பாக்டீரியாக்கள் இருக்கலாம், அவை கடுமையான உணவு விஷம், வயிற்று வலி மற்றும் வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே கிருமிகள், புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை அகற்ற அவற்றை முறையாக சமைக்க வேண்டியது அவசியம்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

ஜாதிக்காய் இந்தியில் ஜெய்பால் என்றும் அழைக்கப்படுகிறது, இது வீட்டு வைத்தியம், தேநீர் கலவைகள், இனிப்புகள் அல்லது மேற்கத்திய சமையலில் கூட பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா ஆகும். இந்த மசாலா பாஸ்தாக்கள், ஒயின் கலவைகள் மற்றும் இனிப்புகளிலும் சேர்க்கப்படுகிறது. ஆனால் தேவைக்கு அதிகமாக ஜாதிக்காயை சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஜாதிக்காய் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சேர்ப்பது தலைவலி, குமட்டல், தலைச்சுற்றல் மற்றும் மாயத்தோற்றம் போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய மிரிஸ்டிசின் விஷத்திற்கு வழிவகுக்கும். சில சமயங்களில் அதிகமாக உட்கொள்வது மரணத்தை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Common Foods Can Cost You Your Life in Tamil

According to experts, these common foods can cost you your life.
Story first published: Tuesday, June 21, 2022, 18:33 [IST]
Desktop Bottom Promotion