Latest Updates
-
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
தூங்கி எழுந்தாலும் நீங்க கண்ட கனவு ஞாபகத்துல இருக்கணுமா? அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க...
ஒரு புதிய ஆய்வின் படி, தூங்குவதற்கு முன் வைட்டமின் பி6 சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வது காலையில் உங்கள் கனவுகளை நினைவுக் கொள்ள உதவும்.
இரவு தூங்கும் போது அனைவருக்குமே கனவு வரும். சிலருக்கு பேய் கனவு வரலாம். இன்னும் சிலருக்கு அதிர்ஷ்டம் அடிப்பது போன்ற கனவு வரலாம். இன்னும் சிலருக்கு அவர்களது லட்சியத்தை அடைவது போன்ற கனவு வரலாம். அப்படி காணும் கனவுகள் தூங்கி எழுந்ததும் பல சமயங்களில் மறந்துவிடுவதுண்டு. ஆனால் சில கனவுகள் தூங்கி எழுந்தாலும் நினைவில் இருக்கும்.

ஒருவருக்கு தூக்கத்தில் காணும் கனவுகள் மறப்பதற்கு மன இறுக்க எதிர்ப்பு மருந்துகள், ஆல்கஹால் போன்றவை கூட காரணமாக இருக்கலாம். சரி, நாம் கண்ட கனவை நினைவுக்கூர என்ன செய்ய வேண்டும்?
ஒரு புதிய ஆய்வின் படி, தூங்குவதற்கு முன் வைட்டமின் பி6 சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வது காலையில் உங்கள் கனவுகளை நினைவுக் கொள்ள உதவும்.

ஆஸ்திரேலியா ஆய்வு
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தால் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்றவர்களுக்கு இரவு தூங்குவதற்கு முன் 240 மி.கி வைட்டமின் பி6 சப்ளிமெண்ட் தொடர்ச்சியாக 5 நாட்கள் கொடுக்கப்பட்டது. அப்படி வைட்டமின் பி6 சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொண்டவர்களின் கனவை நினைவுப்படுத்தும் திறனில் முன்னேற்றம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதோடு சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொண்டது பங்கேற்பாளரின் தெளிவான தன்மை, கனவில் வினோதம் அல்லது தூக்க முறைகளின் பிற அம்சங்களைப் பாதிக்காது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
இருப்பினும் இந்த ஊட்டச்சத்து எவ்வாறு கனவை நினைவுப்படுத்துவதற்கு உதவியது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதன் பின்னணியில் உள்ள மர்மத்தை அறிய கூடுதல் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

வைட்டமின் பி6
வைட்டமின் பி6 என்பது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குழுவில் உள்ள 8 வைட்டமின்களுள் ஒன்றாகும். பைரிடாக்சின் என்று அழைக்கப்படும் இந்த நீரில் கரையக்கூடிய வைட்டமின் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. வைட்டமின் பி6, மற்ற பி வைட்டமின்களுடன் சேர்ந்து, உணவில் இருந்து புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பை பதப்படுத்த உடலுக்கு உதவுகிறது. மேலும் இந்த வைட்டமின் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு மற்றும் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.
நமது உடலால் வைட்டமின் பி6-ஐ உற்பத்தி செய்ய முடியாததால், அதை வெவ்வேறு மூலங்களில் இருந்து தான் பெற வேண்டும். வைட்டமின் பி6 நீரில் கரையக்கூடியது. இது உடலில் பெரிய அளவில் சேமிக்கப்படுவதில்லை என்பதால், இந்த வைட்டமின் எளிதில் உடலில் இருந்து வெளியேறிவிடும்.

வைட்டமின் பி6 உணவுகள்
வைட்டமின் பி6 ஆனது பீன்ஸ், கோழி, மீன், வலுவூட்டப்பட்ட தானியங்கள், அடர் பச்சை நிற கீரைகள், பப்பாளி, ஆரஞ்சு, முலாம் பழம், வாழைப்பழம், அவகேடோ, பசலைக்கீரை, உருளைக்கிழங்கு, பால், சீஸ், முட்டை, மாட்டிறைச்சி, ஈரல் போன்றவற்றில் அதிகமாக நிறைந்துள்ளது.
ஒரு கப் வேக வைத்த கிட்னி பீன்ஸில் 0.2 மி.கி வைட்டமின் பி6 உள்ளது. அதேப் போல் ஒரு பெரிய ஆரஞ்சு பழத்தில் 0.1 மி.கி வைட்டமின் பி6 உள்ளது.

ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை?
வயது வந்த ஆண்களுக்கும், 50 வயது வரையிலான பெண்களுக்கும் ஒரு நாளைக்கு 1.3 மில்லிகிராம் வைட்டமின் பி6 தேவைப்படுகிறது. அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் படி, 50 வயதிற்கு மேலான ஆண்களுக்கு 1.7 மி.கி அளவும், 50 வயதிற்கு மேலான பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 மி.கி அளவும் தேவைப்படுகிறது.

வைட்டமின் பி6 குறைபாடு
வைட்டமின் பி6 சிறிய குறைபாடு ஏற்படுவது பொதுவானது. ஆனால் இச்சத்தில் பெரிய குறைபாடு என்பது அரிதானது. பெரும்பாலும் வைட்டமின் பி6 குறைபாடு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் குறைந்த அளவு வைட்டமின் பி6-ஐ ஏற்படுத்தக்கூடிய சில மருந்துகளை உட்கொள்பவர்களில் காணப்படுகிறது.

யாருக்கெல்லாம் வைட்டமின் பி6 குறைபாடு ஏற்படலாம்?
சிறுநீரக நோய், குடிப்பழக்கம், ஹைப்பர் தைராய்டிசம், முடக்கு வாதம் போன்ற ஆட்டோ இம்யூன் கோளாறுகள் மற்றும் செலியாக் நோய் அல்லது கிரோன் நோய் போன்ற அழற்சி குடல் நோய்கள் உள்ளவர்களுக்கு இச்சத்து குறைபாடு ஏற்படலாம். இத்தகையவர்களுக்கு உணவுப் பொருட்களில் இருந்து இச்சத்தை உறிஞ்சுவதில் சிக்கல் இருப்பதால் தான் இப்பிரச்சனை ஏற்படுகிறது.

வைட்டமின் பி6 குறைபாட்டின் அறிகுறிகள்
ஒருவருக்கு வைட்டமின் பி6 மிகவும் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
* பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி
* இரத்த சோகை
* சரும அரிப்பு மற்றும் தடிப்புகள்
* உதடுகளில் தோல் உரிவது
* வாயின் மூலைகளில் வெடிப்புகள்/விரிசல்
* நாக்கு வீக்கம்
* வைட்டமின் பி6 மிக மிக குறைவாக இருந்தால், அது மனச்சோர்வு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
வைட்டமின் பி6 ஒருசில மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம். எனவே, பைரிடாக்சின் சப்ளிமெண்ட் எடுப்பதற்கு முன்பு எப்போதும் உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடுங்கள்.



Click it and Unblock the Notifications
