Latest Updates
-
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
ஒரு ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!
Symptoms Of Sperm Deficiency In Tamil: தற்போது நிறைய ஆண்கள் விந்தணு குறைபாட்டை சந்திக்கிறார்கள். விந்தணு குறைபாடு அல்லது குறைந்த விந்து எண்ணிக்கை என்பது புணர்ச்சியின் போது வெளியேறும் விந்து திரவத்தில் இயல்பை விட குறைவான விந்தணுக்களைக் கொண்டிருப்பதாகும்.
ஒரு மில்லிலிட்டர் விந்துவில் 15 மில்லியனுக்கும் குறைவான விந்தணுக்கள் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை இயல்பை விட குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.

ஒரு ஆணின் உடலில் விந்தணுக்கள் குறைவாக இருந்தால், அந்த ஆணால் தன் துணையுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு கருத்தரிப்பதில் பிரச்சனை அல்லது துணையை கருத்தரிக்க வைக்க முடியாமல் போகும். ஆயினும் கூட, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பல ஆண்கள் ஒரு குழந்தைக்கு தந்தையாக உள்ளனர்.
எனவே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதை நினைத்து மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொண்டு, மன தைரியத்தை விடாமல் முயற்சி செய்யுங்கள். இதனால் நிச்சயம் குறைவான விந்தணு பிரச்சனையில் இருந்து விடுபட்டு, அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். இப்போது விந்தணுக்கள் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் மற்றும் காரணங்களைக் காண்போம்.

அறிகுறிகள்
குறைந்த விந்து எண்ணிக்கை இருந்தால் வெளிப்படும் முதன்மையான மற்றும முக்கியமான அறிகுறி தான், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க இயலாமை. இதைத் தவிர வேறு எந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறியும் இருப்பதாக தெரியவில்லை. சில ஆண்களில், பரம்பரை குரோமோசோமால் அசாதாரணத்தன்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, நீடித்த டெஸ்டிகுலர் நரம்புகள் அல்லது விந்தணுக்கள் செல்வதைத் தடுக்கும் ஒரு நிலை போன்ற அடிப்படை பிரச்சனைகளும் அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.

வேறு சில அறிகுறிகள்
* பாலியல் செயல்பாட்டில் பிரச்சனை. உதாரணமாக, பாலுறவில் நாட்டமின்மை அல்லது நீண்ட நேரம் படுக்கையில் குதூகுலமாக இருக்க முடியாமை
* விரை விதைகளில் வலி, வீக்கம் அல்லது சிறு கட்டி
* முகம் அல்லது உடலில் முடியின் வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பது.

எப்போது மருத்துவரைக் காண வேண்டும்?
ஒரு வருடம் கருத்தரிக்க முயற்சித்தும் கருத்தரிக்க முடியாமல் போனால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதுமட்டுமின்றி, கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலைகளின் போதும் மருத்துவரை உடனே காண வேண்டும்.
* விறைப்புத்தன்மை பிரச்சனை
* ஆண்களின் விதை பகுதிகளில் வலி, அசௌகரியம், வீக்கம் அல்லது கட்டிகள்
* பரம்பரையில் விரை விதை, புரோஸ்டேட் அல்லது பாலியல் பிரச்சனைகள் இருப்பவர்கள்
* ஒரு இடுப்பு, விதை, ஆண்குறி அல்லது விதைப்பையில் அறுவை சிகிச்சை

காரணங்கள்
விந்தணு உற்பத்தி ஒரு சிக்கலான செயல்முறை. இதற்கு விதைகள், மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் ஆரோக்கியமான செயல்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவைகள் தான் விந்தணுக்களின் உற்பத்தியைத் தூண்டும் ஹார்மோன்களை உருவாக்குகின்றன. ஒருமுறை விந்தணுக்கள் விதைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பின், அவை நுணுக்கமான குழாய்கள் வழியே சென்று விந்துவுடன் கலந்து, ஆண்குறியிலிருந்து வெளியேற்றப்படும் வரை இருக்கும். இந்த அமைப்புகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது விந்து உற்பத்தியைப் பாதிக்கும். மேலும் அது அசாதாரண விந்து வடிவம், இயக்கம் அல்லது செயல்பாட்டின் சிக்கலாகவும் இருக்கலாம்.
இருப்பினும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு ஆரோக்கிய பிரச்சனைகள், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களும் முக்கிய காரணங்களாகும். இப்போது அவற்றைக் குறித்துக் காண்போம்.

போதைப் பொருட்கள்
அனாபாலிக் ஸ்டெராய்டு தசைகளின் வலிமை மற்றும் வறர்ச்சியைத் தூண்டுவதுடன், விதைகளை சுருங்கச் செய்து, விந்தணுக்களின் உற்பத்தியைக் குறைக்கும். மேலும் கொக்கைன் அல்லது மாரிஜுவானா போன்ற போதைப் பொருட்களும், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தைக் குறைக்கும்.

மதுப் பழக்கம்
மது அருந்துவதால் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதுடன், விந்தணுக்களின் உற்பத்தியும் குறைய ஆரம்பித்துவிடும். இப்பழக்கம் அப்படியே தொடர்ந்தால், அந்த ஆணால் ஒரு குழந்தைக்கு தந்தையாவதே கனவாகிவிடும்.

வேலைகள்/பணிகள்
குறிப்பிட்ட வேலைகள் ஆண் மலட்டுத்தன்மையுடன் தொடர்பு கொண்டுள்ளது. அந்த வேலைகளாவன நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பணிகளான டிரைவிங், கம்ப்யூட்டர் வேலை போன்றவை.

புகைப்பிடிப்பது
சில ஆண்கள் புகைப்பிடிப்பதை ஸ்டைலாகவும், டென்சனைப் போக்கும் ஒன்றாகவும் நினைக்கலாம். ஆனால் இப்படி கண்டமேனிக்கு ஒரு நாளைக்கு சிகரெட்டைப் பிடித்தால், அது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைந்து, நாளடைவில் மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடுமாம்.

மன இறுக்கம்
தீவிரமான அல்லது நாள்பட்ட மன அழுத்தம் கருவளத்தை பாதிக்கும் என்பது தெரியுமா? ஒருவர் இப்படி எந்நேரமும் எதிர்மறை எண்ணங்களுடன் இருந்தால், அது விந்தணுக்களை உற்பத்தி செய்யும் ஹார்மோன்களில் இடையூறை ஏற்படுத்திவிடும். இதனால் விந்தணு பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே எப்போதும் மனதை சந்தோஷமாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

உடல் பருமன்
உடல் பருமன் பல வழிகளில் கருவுறுதலைக் குறைக்கும். அதில் விந்தணுக்களை நேரடியாக பாதிக்கும் மற்றும் ஆண் கருவுறுதலைக் குறைக்கும் ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே குண்டாக இருக்கும் ஆண்கள், தங்கள் உடல் எடையை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.



Click it and Unblock the Notifications
