Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
பால் குடிப்பதை முழுமையாக நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக ஜூன் 1 ஆம் தேதி உலக பால் தினம் அனுசரிக்கப்படுகிறது. இப்போது உணவில் இருந்து பாலை முழுமையாக கைவிடுவதால் பெறும் அற்புத நன்மைகளைக் காண்போம்.
பால் குடிப்பதை நிறுத்தலாம்-ன்னு நினைக்குறீங்களா? ஒருவருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை போன்ற பிரச்சனை இருந்தாலொழிய, பால் குடிப்பதை நிறுத்த பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கமாட்டார்கள். ஏன் என்று யோசிக்கிறீர்களா? ஏனெனில் பாலில் கால்சியம், புரோட்டீன், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இப்படி பால் குடிக்க முடியாதவர்களுக்கு என்று சோயா பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், பாதாம் பால், ஓட்ஸ் பால் என்று பல வகையான பால் உள்ளன. ஆகவே பால் குடிக்க விரும்பாதவர்கள், இந்த வகையான பாலைக் குடிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக ஜூன் 1 ஆம் தேதி உலக பால் தினம் அனுசரிக்கப்படுகிறது. இப்போது உணவில் இருந்து பாலை முழுமையாக கைவிடுவதால் பெறும் அற்புத நன்மைகளைக் காண்போம்.

சருமம் மேம்படும்
காஸ்மோபாலிட்டனின் அறிக்கையின்படி, பால் பொருட்களை முழுமையாக தவிர்ப்பது ஒருவரது சருமத்தை மேம்படுத்தும். மாட்டுப் பாலில் ஹார்மோன்கள் இருப்பதால், சில சமயங்களில் உடலில் உள்ள ஹார்மோன்களுக்கு எதிர்வினையாற்றி, சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுத்து, சருமத் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி, முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

குடல் ஆரோக்கியம் மேம்படும்
ஒருவர் தங்களின் உணவில் இருந்து பாலை முழுமையாக நீக்கும் போது, செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடல் ஆரோக்கியம் மேம்படும். இது தவிர, இதுவரை வயிற்று உப்புசம், வாய்வு தொல்லையை அனுபவித்து வந்திருந்தால், அதிலிருந்து சற்று விடுபடுவீர்கள்.

மனநிலை மாற்றங்கள்
ஒரு டம்ளர் பாலில் 60 ஹார்மோன்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? மாட்டுப் பாலில் உள்ள ஹார்மோன்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ஏற்கனவே உடலில் உள்ள இயற்கையான ஹார்மோன்கள் அதிகரித்து, மனநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே பால் குடிக்காமல் இருந்தால், மனநிலை சீராக இருக்கும்.

எடை இழக்க உதவும்
உணவில் இருந்து பால் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது எடை இழப்புக்கு பெரிதும் உதவும் சிறப்பான வழி என்று கூற முடியாது. ஆனால் உடல் எடையில் சற்று மாற்றங்களைக் காணலாம். ஏனெனில் பாலில் இயற்கையாகவே கொழுப்புக்கள் நிறைந்திருக்கும். கொழுப்பு நிறைந்த பாலை தினமும் அதிகளவில் உட்கொண்டால், அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும்.

புற்றுநோய், சர்க்கரை நோயின் அபாயம் குறையும்
உணவில் இருந்து பாலை முழுமையாக நீக்கினால், புற்றுநோய் வருவதற்கான அபாயம் குறையும். பாக்கெட் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் அதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.



Click it and Unblock the Notifications