Just In
- 7 hrs ago
வார ராசிபலன் (22.05.2022-28.05.2022) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
- 8 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் ரகசியங்களை பிறருடன் பகிர்வதைத் தவிர்க்கவும்..
- 18 hrs ago
மட்டன் தால்சா
- 18 hrs ago
உங்கள் ஆயுளை அதிகரிக்க நெய்யுடன் இந்த பொருட்களில் ஒன்றை சேர்த்து சாப்பிடுங்கள் போதும்...!
Don't Miss
- Movies
அதிர்ச்சி.. ‘தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை’ பாடலை பாடிய பிரபல பாடகி சங்கீதா சஜித் காலமானார்!
- News
அறிவே இல்லாதவன்! வார்த்தையை விட்ட பெண்.. கண்ணசைத்த அன்புமணி.. மைக்கை பிடுங்கிய மூர்த்தி.. ஒரே கூத்து
- Sports
பண்ட் கேப்டன்சியில் பெரும் பிரச்சினை?? ரிக்கிப் பாண்டிங் கூறிய தடாலடி பதில்.. அப்படி என்ன கூறினார்?
- Finance
61 மடங்கு லாபம் கொடுத்த அதானி பங்கு.. லட்சாதிபதியாக கிடைத்த வாய்ப்பு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!
- Technology
லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆண்களே! 'இந்த' டயட் உங்க எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் விந்தணுக்களின் தரத்தையும் அதிகரிக்குதாம்!
மக்கள் பலரால் அதிகமாக பின்பற்றப்பட்டும் டயட் கீட்டோ டயட். இது கடந்த சில ஆண்டுகளில் பெரும் புகழ் பெற்றது. இந்த டயட்டை முயற்சித்தவர்கள், உடல் எடையை குறைக்க இந்த உணவு திட்டம் உதவியது மட்டுமல்லாமல், பல வழிகளில் அவர்களுக்கு நன்மை செய்ததாகவும் கூறுகின்றனர். பெரும்பாலும் நம் உணவு முறைகளால் உடல் பருமன் மற்றும் பாலியல் வாழ்க்கை ஆகியவை பாதிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம். நம் உணவு முறைகள் நமக்கான பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதேபோல சில உணவுகள் நம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கீட்டோ உணவின் பிற நன்மைகளைப் பற்றி பேசுகையில், எடை குறைவதைத் தவிர, ஒரு புதிய ஆய்வில், உணவில் விந்தணுக்களின் தரம் அதிகரிக்கும் மற்றும் பருமனான ஆண்களில் எண்ணிக்கை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை பற்றியும், கீட்டோ உணவு முறை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ஆய்வு
கீட்டோ உணவைப் போன்ற உணவு திட்டத்தை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைத்த இரண்டு பருமனான ஆண்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையிலும் தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
MOST READ: உங்க நினைவாற்றலை மேம்படுத்த நீங்க இந்த உணவுகள கண்டிப்பா தவிர்க்கணுமாம்...!

விந்தணுக்களின் தரம்
முதல் சோதனையில், பங்கேற்பாளர் கீட்டோ உணவைப் பின்பற்றிய மூன்று மாதங்களில் சுமார் 27 கிலோ உடல் எடையை இழந்தார். அவரது உடல் கொழுப்பு சதவீதம் 42 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகக் குறைந்தது. சோதனை மாதிரியில் உள்ள மோட்டல் விந்தணுக்களின் சதவீதத்தின் அடிப்படையில் விந்தணுக்களின் தரம் கிட்டத்தட்ட 100 சதவீதம் மேம்பட்டது. டெஸ்டோஸ்டிரோன் அளவும் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது.

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இரண்டாவது பங்கேற்பாளர் மூன்று மாதங்களில் சுமார் 9 கிலோ உடல் எடையை இழந்தார். மேலும் அவரது உடல் கொழுப்பு சதவீதம் 26 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகக் குறைந்தது. விந்தணுக்களின் தரமும் மேம்பட்டது, ஆனால் இறுதி சோதனை மாதிரியில் 100 மில்லியனுக்கும் அதிகமான விந்தணுக்கள் பரிசோதிக்கப்பட்டதால் விந்தணுக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. ஆனால் ஆச்சரியப்படும் விதமாக நோயாளியின் டெஸ்டோஸ்டிரோன் அளவு சற்று குறைந்தது.

உணவு திட்டம்
பங்கேற்பாளர்கள் 2004ஆம் ஆண்டில் ஸ்பெயினில் தொடங்கப்பட்ட மிகவும் ஆய்வு செய்யப்பட்ட வணிக எடை குறைப்பு முறையான ப்ரோனோகல் என்ற உணவு முறை திட்டத்தைப் பின்பற்றினர். உணவுத் திட்டம் பாரம்பரிய கீட்டோவிலிருந்து வேறுபடுகிறது. இது குறைந்த கார்ப் உணவு மட்டுமல்ல (ஒரு நாளைக்கு 50 கிராமுக்கும் குறைவானது), ஆனால் கலோரிகளை ஒரு நாளைக்கு 800 ஆக கட்டுப்படுத்துகிறது.
MOST READ: நீங்க ஸ்மார்ட்போனை அதிகம் யூஸ் பண்ணாம இருக்கணும்னு சொல்றதுக்கான உண்மையான காரணம் தெரியுமா?

பாலியல் ஆரோக்கியம்
எந்தவொரு உறுதியான முடிவையும் எடுக்க இந்த ஆய்வு மிகச் சிறிய அளவிலானதாக இருக்கிறது. குறைந்த கார்ப் உணவு பாலியல் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் மற்றும் நல்ல கொழுப்பை அதிகளவில் உட்கொள்வது ஆரோக்கியமான விந்தணுக்களின் அளவை ஆதரிக்கும் என்ற கருத்தை ஆதரிக்கும் ஆதாரங்கள் தற்போது உள்ளன. பழைய ஆய்வுகள் டெஸ்டோஸ்டிரோனின் அபாயத்துடன் அதிக அளவு உணவு கொழுப்பு உட்கொள்ளலுடன் இணைத்துள்ளன.

உணவு தேவைகள்
பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்களுக்கு எப்போதும் கடுமையான உணவு தேவையில்லை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட உணவுகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக நீண்ட காலத்திற்கு பக்கவிளைவை உருவாக்கலாம். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருவர் மிகவும் கடினமான உணவுகளை பின்பற்ற வேண்டியதில்லை.

விறைப்புதன்மை
உங்கள் வழக்கமான உணவில் ஆரோக்கியமான உணவு மாற்றங்களைச் செய்வதன் மூலம் பாலியல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். மிகவும் பின்பற்றப்பட்ட உணவுகளில் ஒன்றான மத்திய தரைக்கடல் மேம்பட்ட விறைப்புத்தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மோசமான விந்தணுக்களின் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

இறுதிகுறிப்பு
அதிக மீன் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்த விந்தணுக்களின் எண்ணிக்கை, அதிகரித்த செக்ஸ் இயக்கி மற்றும் ஒட்டுமொத்த சிறந்த பாலியல் செயல்பாடு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.