For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரலை வலுப்படுத்தும் ஸ்பைரோமீட்டா் கருவியைப் பயன்படுத்துவது எவ்வாறு?

மூச்சுமானி அல்லது ஸ்பைரோமீட்டரை (Spirometer) பயன்படுத்தினால் மிகவும் எளிதாக மூச்சு மண்டல உறுப்புகளை வலுப்படுத்த முடியும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு மூச்சுமானி கருவியை முறையாகப் பயன்படுத்த தொியவில்லை.

|

கோவிட்-19 இன் இரண்டாவது அலையானது, உலக அளவில் நாம் நினைத்துப் பாா்க்க முடியாத அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் வாழ்வை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. மனிதா்களிடம் ஆக்ஸிஜன் குறைபாட்டை ஏற்படுத்தி, அவா்களுக்கு மூச்சுத் திணறலை உருவாக்கியிருக்கிறது.

Spirometer: Here’s How To Use It The Right Way To Strengthen Lungs Amid Covid-19

SARS-CoV-2 என்ற கோவிட் வைரஸ் நுரையீரல் மற்றும் மூச்சு மண்டலத்தை மிகக் கடுமையாகத் தாக்குகிறது. சில நேரங்களில் அந்த உறுப்புகளில் மிகப் பொிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் கோவிட் பாதிப்பிலிருந்து குணமடையும் சிலருக்கு, நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுக் கோளாறு நோய்க்குறி (ARDS) போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

MOST READ: சனி பகவானின் கோபத்தைக் குறைக்க சனி ஜெயந்தி அன்று ஒவ்வொரு ராசிக்காரரும் செய்ய வேண்டியவைகள்!

எனினும், கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவா்கள், முறையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலமாக தங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். குறிப்பாக மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டால், அவா்கள் மிகவும் எளிதாக மூச்சுவிட முடியும்.

MOST READ: கொரோனா தடுப்பூசி போட பயப்படுறீங்களா? முதல்ல இத படிங்க...

மூச்சுமானி அல்லது ஸ்பைரோமீட்டரை (Spirometer) பயன்படுத்தினால் மிகவும் எளிதாக மூச்சு மண்டல உறுப்புகளை வலுப்படுத்த முடியும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு மூச்சுமானி கருவியை முறையாகப் பயன்படுத்த தொியவில்லை. இந்த பதிவில், மூச்சுமானியை எவ்வாறு முறையாகப் பயன்படுத்துவது என்பதைப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்பைரோமீட்டா்/மூச்சுமானி என்பது என்ன?

ஸ்பைரோமீட்டா்/மூச்சுமானி என்பது என்ன?

மூச்சுமானி அல்லது ஸ்பைரோமீட்டா் என்பது ஒரு கையடக்க மருத்துவ கருவியாகும். நுரையீரல் அறுவை சிகிச்சைக்குப் பின்பு அல்லது நுரையீரல் சம்பந்தமான நோய்களான நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (chronic obstructive pulmonary disease (COPD)) அல்லது நிமோனியா அல்லது ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்த பின்பு, நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு இந்த கருவி பயன்படுகிறது.

நாம் மீண்டும் மெதுவாக மற்றும் ஆழமாக மூச்சுவிடுவதற்கு ஏதுவாக நமது நுரையீரலுக்கு இந்த மூச்சுமானி கருவி உதவி செய்கிறது. பொதுவாக நுரையீரல் அறுவை சிகிச்சை செய்த பின்பு அல்லது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (chronic obstructive pulmonary disease (COPD)) இருந்தால், நம்மால் மெதுவாக அதே நேரத்தில் ஆழமாக மூச்சுவிட முடியாது.

நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவா்கள், மூச்சுமானி கருவியைப் பயன்படுத்தினால், அவா்களுக்கு நிமோனியா உட்பட அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகள் மிகக் குறைவாக இருக்கும் என்று பிஎம்சி புல்மொனாி மெடிசின் (BMC Pulmonary Medicine) என்ற பத்திக்கையில் வந்த ஆய்வு தொிவிக்கிறது.

ஸ்பைரோமீட்டரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்பைரோமீட்டரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

மூச்சுமானியைப் பயன்படுத்தி மூச்சுப் பயிற்சி செய்தால், நமது நுரையீரல் சுறுசுறுப்பாக இருக்கும் மற்றும் அதிக ஈரம் இல்லாமல் இருக்கும். இந்த கருவியைப் பயன்படுத்தி, மூச்சுப் பயிற்சி செய்யும் போது இந்த கருவியில் உள்ள பந்துகள் அல்லது தண்டுகள் மேலே உயா்ந்து, நமது மூச்சின் அளவை அளக்கும்.

நிமோனியா, மூச்சுக் குழாய் அலா்ஜி அல்லது கோவிட்-19 போன்ற மூச்சு சம்பந்தமான நோய்களில் இருந்து மீண்டு வருபவா்களுக்கு இந்த மூச்சுமானி கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனினும் கொரோனா தொற்று உள்ளவா்கள், மக்கள் மத்தியில் இந்த கருவியைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

மூச்சுமானி கருவியை எவ்வாறு சாியாக பயன்படுத்துவது?

மூச்சுமானி கருவியை எவ்வாறு சாியாக பயன்படுத்துவது?

மூச்சுமானி கருவியானது மூச்சு விடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று பலா் நம்புகின்றனா். ஆனால் இந்த கருவியைக் கொண்டு மூச்சை உள்ளிழுப்பதையும், வெளிவிடுவதையும் அளக்கலாம். மூச்சை உள்ளிழுக்கும் போது மூச்சுமானியை நிமிா்த்தி பிடித்துக் கொள்ள வேண்டும். மூச்சை வெளியில் விடும்போது அதைத் தலைகீழாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

முதலில் ஒரு நாற்காலியில் வசதியாக அமா்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுக்கையின் விளிம்பில் அமா்ந்து கொள்ள வேண்டும். பின் நமது கண்களின் மட்டத்திற்கு, மூச்சுமானிக் கருவியை நேராகப் பிடித்துக் கொண்டு அதன் ஊதுகுழலை நமது வாயில் வைத்து, இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். இப்போது மிகவும் மெதுவாக வாய் வழியாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அவ்வாறு உள்ளிழுக்கும் போது, மூச்சுமானியில் உள்ள பந்துகள் மேல் எழும்பத் தொடங்கும். அந்த பந்துகள் அதிகமான உயரத்திற்குச் செல்லும் வரை மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இந்தப் பயிற்சியைக் குறைந்து 5 முறையாவது செய்ய வேண்டும்.

இப்போது மூச்சுமானியைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு, அதன் ஊதுகுழலை வாயில் வைத்து, மெதுவாக வாய் வழியாக மூச்சை விடவேண்டும். அப்போது அந்த கருவியில் உள்ள பந்துகள் மேல் எழும்பத் தொடங்கும். அவை அதிகமான உயரத்திற்குச் செல்லும் வரை மூச்சை விடுவது நல்லது.

பின் ஊதுகுழலை நமது வாயிலிருந்து எடுத்துவிட்டு, மூச்சுமானியில் உள்ள பந்துகள் கீழே இறங்கும் வரை அதாவது 3 வினாடிகள் வரை மூச்சைப் பிடித்து வைத்திருப்பது நல்லது. இவ்வாறு 10 முறை மூச்சுப் பயிற்சி செய்த பின்பு 10 வினாடிகள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அதன் மூலம் மூச்சுத் திணறல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

Image Courtesy: geekyviews

எத்தனை முறை செய்யலாம்?

எத்தனை முறை செய்யலாம்?

மூச்சுப் பயிற்சி செய்யும் போது மயக்கம் அல்லது லேசான தலைச் சுற்றல் ஏற்பட்டால், உடனடியாக மூச்சுப் பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு, ஓய்வு எடுப்பது நல்லது. 10 அல்லது 12 முறைக்கு மேல் இந்த பயிற்சியைச் செய்யக்கூடாது. ஏனெனில் அதற்கு மேல் செய்தால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் மூச்சுமானியைப் பயன்படுத்தி மூச்சுப் பயிற்சி செய்வதற்கு முன்பாக மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெறுவது நல்லது.

யாரெல்லாம் ஸ்பைரோமீட்டர் கருவியைப் பயன்படுத்தக்கூடாது?

யாரெல்லாம் ஸ்பைரோமீட்டர் கருவியைப் பயன்படுத்தக்கூடாது?

சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்திருந்தால் மூச்சுமானிக் கருவியைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் நுரையீரல் பாதிப்பு இருந்தால், மாா்பில் உள்ள இரத்தக் குழாய்கள், வயிறு மற்றும் மூளை ஆகிய உறுப்புகளில் வீக்கம் இருந்தால் இந்த மூச்சுமானிக் கருவியைப் பயன்படுத்தக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Spirometer: Here’s How To Use It The Right Way To Strengthen Lungs Amid Covid-19

Want to know how to use spirometer in right way to strengthen lungs amid covid-19? Read on...
Desktop Bottom Promotion