For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஆபத்தான அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உங்க உடலில் இந்த சத்து குறைவாக இருக்குனு அர்த்தமாம்!

நம் உடலுக்கு பல்வேறு வகையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் சில அளவுகளில் உள் செயல்பாட்டைத் தொடர தேவைப்படுகிறது.

|

நம் உடலுக்கு பல்வேறு வகையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் சில அளவுகளில் உள் செயல்பாட்டைத் தொடர தேவைப்படுகிறது. எந்த சத்தும் அதற்கு தேவையான அளவில் கிடைக்காமல் போனால், அது ஒட்டுமொத்த செயல்பாட்டில் இடையூறு ஏற்படுத்துவதோடு, நமது உடலின் பல்வேறு பாகங்களிலும் அறிகுறிகள் தென்படும். நோய் எதிர்ப்பு சக்தி, உயிரணுப் பிரிவு, உயிரணு வளர்ச்சி மற்றும் புரதங்கள் மற்றும் டிஎன்ஏ தொகுப்பு ஆகியவற்றை உருவாக்க 300 க்கும் மேற்பட்ட என்சைம்களை செயல்படுத்த நமது உடலுக்குத் தேவையான தாதுக்களில் ஜிங்க் ஒன்றாகும்.

Signs That Indicates You Need To Increase Your Zinc Intake in Tamil

நாம் உண்ணும் உணவுகளில் ஜிங்க் குறைந்த அளவே காணப்படுவதால், இந்த ஊட்டச்சத்தை நம் உடலால் சேமிக்க முடியாது. அதாவது, அதை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் 11 mg துத்தநாகத்தை உட்கொள்ள வேண்டும், 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 8 mg தேவை. கர்ப்பிணிப் பெண்களுக்கு, துத்தநாகத்தின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளல் 11 மில்லிகிராம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இது 12 மில்லிகிராம் ஆகும். உங்கள் துத்தநாக உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டிய சில அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காயம் மெதுவாக குணமாகுதல்

காயம் மெதுவாக குணமாகுதல்

துத்தநாகத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் சரியான இரத்த உறைதலை ஊக்குவிப்பது ஆகும். ஆனால் நீங்கள் போதுமான அளவு துத்தநாகத்தை எடுத்துக் கொள்ளாதபோது உங்கள் காயம் குணமடைவதை கடினமாக்குகிறது. முகப்பரு வெடிப்பு துத்தநாகக் குறைபாட்டினாலும் ஏற்படுகிறது. பிடிவாதமான காயங்களை குணப்படுத்த இந்த சப்ளிமெண்ட் பரிந்துரைக்கப்படுகிறது.

எடைக்குறைவு

எடைக்குறைவு

குறைந்த துத்தநாக உட்கொள்ளல் எடை இழப்புக்கு வழிவகுக்கும் பசியின் மாற்றத்திற்கும் வழிவகுக்கும். நீங்கள் அதிக எடையுடன் இருக்கும்போது எடைக் குறைவது நல்லது, ஆனால் அதிக எடை இழப்பு மற்ற உடல்நலப் பிரச்சினைகளையும் அழைக்கிறது. எடையைக் குறைக்க முயற்சித்தாலும், உங்கள் உள் செயல்பாட்டைச் செயல்பட வைக்க அனைத்து வகையான நுண்ணூட்டச்சத்துக்களும் இருக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் எடை இழப்பு ஆரோக்கியமற்றது.

முடி உதிர்வு

முடி உதிர்வு

மன அழுத்தம், மோசமான முடி பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு உட்கொள்ளாமல் இருத்தல் ஆகியவை முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். முடி உதிர்தல் மற்றும் முடி உடைதல் ஆகியவை துத்தநாகக் குறைபாட்டின் விளைவாக இருக்கலாம். இந்த ஊட்டச்சத்தை உட்கொள்வதை அதிகரிப்பது முடி உதிர்வைத் தடுக்கவும், முடியின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். எனவே, நீங்கள் சமீப காலமாக முடி பிரச்சனைகளை எதிர்கொண்டால், முதலில் உங்கள் ஜிங்க் உட்கொள்ளலை அதிகரிக்கவும்.

சளி

சளி

துத்தநாகம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது மற்றும் நாள்பட்ட நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. குறைந்த துத்தநாக உட்கொள்ளல் உங்களை தொற்று மற்றும் நோய்களுக்கு ஆளாக்கும். நீங்கள் மற்றவர்களை விட குளிர்ச்சியாக உணர்ந்தால் மற்றும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், அது துத்தநாகக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். துத்தநாகத்தின் உட்கொள்ளலை அதிகரிப்பது வழக்கத்தை விட விரைவாக சளியிலிருந்து மீள உதவும்.

மங்கலான கண்பார்வை

மங்கலான கண்பார்வை

ஆரோக்கியமான கண்பார்வைக்கு ஜிங்க் தேவைப்படுகிறது. நமது உடலுக்குத் தேவையான அளவு துத்தநாகம் தொடர்ந்து கிடைக்காதபோது, அது நமது பார்வையை மாற்றுகிறது. இதன் விளைவாக மங்கலான பார்வை மற்றும் பார்வைக்குறைபாடு போன்றவை ஏற்படுகிறது. துத்தநாகத்தை போதுமான அளவு உட்கொள்வது உங்கள் பார்வையை கட்டுக்குள் வைத்திருக்கும். துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை ஆரோக்கியமான பார்வைக்கு தேவையான இரண்டு ஊட்டச்சத்துக்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs That Indicates You Need To Increase Your Zinc Intake in Tamil

Here are some signs that you need to increase your zinc intake.
Story first published: Monday, March 21, 2022, 18:32 [IST]
Desktop Bottom Promotion