Latest Updates
-
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
இந்த 3 சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் நீங்க மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாம் - ஜாக்கிரதை -
ருசியான வெஜ் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
பொலிவிழந்து இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப காபித் தூளை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை 25-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உடலை குறைக்க நீங்கள் செய்யும் பட்டினி டயட் உங்கள் உடலுறுப்புகளை எப்படி பாதிக்கிறது தெரியுமா?
பட்டினி கிடப்பது சுயமாகவோ அல்லது அனோரெக்ஸியா அல்லது புலிமியா போன்ற பிற நிலைகளால் ஏற்படுவதாக இருக்கலாம். இதனால் உங்களின் சில உடல் உறுப்புகள் நிரந்தர பாதிப்பிற்கு உள்ளாகலாம்.
உடலை குறைப்பதற்காக பட்டினி கிடப்பது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கட்டாய பட்டினி கிடப்பது உங்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல ஆபத்துக்களை உண்டாக்கும். பட்டினி கிடக்கும்போது அது உங்கள் உடலில் எடுத்துக்கொள்ளப்படும் கலோரிகளின் அளவை பாதிக்கிறது.

பட்டினி கிடப்பது சுயமாகவோ அல்லது அனோரெக்ஸியா அல்லது புலிமியா போன்ற பிற நிலைகளால் ஏற்படுவதாக இருக்கலாம். இதனால் உங்களின் சில உடல் உறுப்புகள் நிரந்தர பாதிப்பிற்கு உள்ளாகலாம். இந்த பதிவில் ஸ்டார்விங் அல்லது பட்டினி கிடைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு
சுய அல்லது கட்டாய பட்டினியால் ஏற்படும் மோசமான விளைவு இதுவாகும். வளரும் நாடுகளில் பல குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக பட்டினி என்பது நீங்கள் போதுமான அளவு சாப்பிடுவதில்லை என்பதன் அர்த்தம் ஆகும். இதனால் உங்கள் உடலுக்கு தேவைப்படும் பல ஊட்டச்சத்துக்களையும், வைட்டமின்களையும் நீங்கள் தவிர்க்கிறீர்கள். இதனால் அனிமியா, மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம்.

நீர்சத்துக் குறைவு
பட்டினியால் ஏற்படும் இரண்டாவது மோசமான பாதிப்பு இதுவாகும். உணவுப்பற்றாக்குறை எப்படி ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறதோ அதேபோல நீர்குறைபாடு உங்கள் உடலில் இருக்கும் நீரேற்றத்தை குறைக்கிறது. இதனால் உங்கள் சருமத்தில் வெடிப்பு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். டயட்டில் இருக்கும்போது கூட தண்ணீர் குடிப்பதில் குறை வைக்கக்கூடாது. ஏனெனில் இதனால் சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாதவிடாய் கால இழப்பு
பட்டினி பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. அதில் முக்கியமானது பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் பிரச்சினை ஆகும். இந்த டயட்டை பின்பற்ற விரும்பும் பெண்கள் இதனை முதலில் கருத்தில் கொள்வது நல்லது. நீங்கள் எடை குறைவானவராக இருந்தால் உங்கள் உடல் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை நிறுத்திவிடும். இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் கொழுப்பு செல்களின் உற்பத்தி குறைவக இருப்பதுதான். இதனால் உடலின் செயல்பாடுகள் மெதுவாக மாறுவதோடு உடல் உறுப்புகள் சிதையவும் வாய்ப்புள்ளது.

மலச்சிக்கல்
பட்டினி டயட் இருக்கும் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது. பட்டினி கிடக்கும் பலருக்கும் அவர்களின் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற மலமிலக்கிகள் தேவைப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடையே நடத்தபட்ட ஆய்வில் பட்டினி கிடப்பவர்களில் பெரும்பாலானோர் குடலை சுத்தப்படுத்த மலமிலக்கிகளையோ அல்லது செயற்கை மருந்துகளையோ பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எலும்புகளின் பலவீனம்
பட்டினி கிடந்தவர்கள் அல்லது கிடப்பவர்கள் மிகவும் ஆபத்தான அளவில் தொடர்ந்து எடையை இழக்க நேரிடும். உங்கள் சருமம் மற்றும் தசைகளில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்படையாக தெரியும். ஆனால் எலும்புகளில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர மட்டுமே முடியும். கலோரி குறைக்கப்பட்ட உணவுகளை உண்ணும்போதோ அல்லது பட்டினி கிடக்கும்போதோ உங்கள் எலும்புகள் மறுசீரமைக்கப்படுகிறது. ஆனால் அவற்றின் அடர்த்தி தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கும்.

களைப்பு
பட்டினியின் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று களைப்பு ஆகும். பட்டினி உங்கள் உடலில் சமநிலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அளவின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உங்களின் உடல் செயல்பாடுகள் குறைந்துவிடும். இதனால் களைப்பு மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

எலக்ட்ரோலைட் சமநிலையின்மை
பட்டினி கிடப்பதால் உங்களுக்கு தினசரி கிடைக்க வேண்டிய எலெக்ட்ரோலைட்டுகளில் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் போன்றவை உங்களின் தினசரி செயல்பாடுகளுக்கும், இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். பட்டினி டயட் இருக்கும்போது இதில் பற்றாக்குறை ஏற்படுவதால் உங்கள் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை ஏற்படுகிறது.



Click it and Unblock the Notifications