Latest Updates
-
2026-ல் உலகின் மிகவும் ஆபத்தான டாப் 10 நாடுகள் - இந்த நாடுகளில் மக்கள் வாழ்வதே ரொம்ப கஷ்டம் -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா -
முட்டையை இந்த மாதிரி வித்தியாசமா புலாவ் செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியை விட அட்டகாசமாக இருக்கும் -
இந்திய சினிமாவின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும் நகரம் எது? இந்திய சினிமாவின் தந்தை யார் தெரியுமா? -
1/2 கிலோ மட்டன் வாங்குனா இந்த மாதிரி கிராமத்து ஸ்டைலில் பச்சை மிளகாய் தொக்கு செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
3/4 கிலோ சிக்கனை வாங்குனா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (25 October 2026-31 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
Aippasi Annabhishekam 2026: ஐப்பசி அன்னாபிஷேகம் அன்று சிவனுக்கு எந்தெந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்?
வேர்க்கடலையை 'இந்த' அளவுக்கு மேல சாப்பிட்டா உங்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?
வேர்க்கடலை மலிவானது மற்றும் ஆரோக்கியமானது. ஆனால், இது அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது. உணவுக் கட்டுப்பாட்டின் போது அதிகப்படியான வேர்க்கடலை சாப்பிடுவது உங்கள் எடை இழப்பு திட்டத்தை சிதைத்து, எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
குளிர்காலத்தில் மலை நேர ஸ்நாக்ஸ்சாக வேர்க்கடலையை எடுத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது. ஏனெனில், வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சிற்றுண்டியை எடுத்துக்கொள்ளலாம். மேலும், உங்கள் ஓய்வு நேரத்தை ரசிக்க வேர்க்கடலையை விட சிறந்த சிற்றுண்டி வேறு உள்ளதா? ஒருவர் தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளை அல்லது தொடர்களை மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டே வேர்க்கடலையை சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும்போது சில சமயங்களில் ஒரே நேரத்தில் அதிகமான வேர்க்கடலையை சாப்பிட நேரலாம். இது சில அசௌகரியங்களுக்கு வழிவகுக்கும்.

வேர்க்கடலை ஆரோக்கியமான பருப்புகளில் ஒன்றாகும் என்றாலும், ஒரு நேரத்தில் அதிகமாக உட்கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஒரு நாளில் நீங்கள் எத்தனை வேர்க்கடலை சாப்பிடலாம். யார் யாரெல்லாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் உடல்நல பிரச்சனைகளை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள்
வேர்க்கடலையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியமான கொழுப்பின் மூலமாகும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் மெக்னீசியம், ஃபோலேட், தாமிரம் மற்றும் அர்ஜினைன் போன்ற கனிமங்கள் உள்ளன. அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், உணவில் தொடர்ந்து வேர்க்கடலை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

ஒரு நாளைக்கு எத்தனை வேர்க்கடலை சாப்பிடலாம்?
வேர்க்கடலை வெண்ணெய் போன்ற பல வடிவங்களில் இதை உணவில் சேர்க்கலாம் அல்லது பருப்புகளை அப்படியே சாப்பிடலாம். காய்கள் இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும். உங்கள் ரொட்டித் துண்டில் வேர்க்கடலை வெண்ணெய் தடவினால், ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி ஆரோக்கியமான பரிந்துரைக்கப்பட்ட அளவாகும். மாலை நேரத்தில் சிற்றுண்டியாக சாப்பிடுவது வேர்க்கடலை சிறந்தது. வேர்க்கடலை சாப்பிடும்போது ஏன் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

தாது உறிஞ்சுதலைத் தடுக்கலாம்
வேர்க்கடலை பாஸ்பரஸின் சிறந்த மூலமாகும். இது பைடிக் அமிலம் அல்லது பைடேட் வடிவத்தில் சேமிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிக பைடேட் உட்கொள்வது இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் மாங்கனீசு போன்ற பிற தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கலாம். காலப்போக்கில் இது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

எடை இழக்க முயற்சிக்கிறீர்களா?
வேர்க்கடலை மலிவானது மற்றும் ஆரோக்கியமானது. ஆனால், இது அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது. உணவுக் கட்டுப்பாட்டின் போது அதிகப்படியான வேர்க்கடலை சாப்பிடுவது உங்கள் எடை இழப்பு திட்டத்தை சிதைத்து, எடை அதிகரிக்க வழிவகுக்கும். நீங்கள் டயட்டை ஃபாலோ செய்து கொண்டிருந்தால், ஒரு நாளைக்கு ஒரு பிடி வேர்க்கடலை போதுமானது. இது உங்களுக்கு 170 கலோரிகளை வழங்குவதோடு, நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்கும்.

வயிற்றுப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்
ஒரே நேரத்தில் அதிகமாக வேர்க்கடலை உட்கொள்வது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கம் ஆகியவை வேர்க்கடலையை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள். எனவே, நீங்கள் ஏற்கனவே வயிறு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வேர்க்கடலையை மிதமான அளவில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

அலர்ஜியை ஏற்படுத்தும்
வேர்க்கடலை ஒவ்வாமை மிகவும் பொதுவானது. குறிப்பாக குழந்தைகளிடையே இந்த ஒவ்வாமை காணப்படும். சிறிய அளவு வேர்க்கடலை கூட சிலருக்கு எதிர்வினையைத் தூண்டலாம் மற்றும் பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்: மூக்கு ஒழுகுதல், தொண்டை மற்றும் வாயில் கூச்ச உணர்வு, தோல் பிரச்சினைகள், மூச்சுத் திணறல் மற்றும் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம், இல்லையெனில் அது ஆபத்தானதாக மாறும்.



Click it and Unblock the Notifications
