For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மேற்கொள்ளும் புதிய டயட் பற்றி தெரியுமா?

நடிகை சமந்தா சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு தனது ஆரோக்கியம் குறித்த ஒரு புதிய அப்டேட்டை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த அப்டேட்டில் அவர் மிகவும் கண்டிப்பான டயட்டை பின்பற்றுவதாக தெரிவித்திருந்தார்.

|

மிகவும் பிரபலமான தென்னிந்திய நடிகையான சமந்தா, எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருப்பதோடு, அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமந்தா, தனக்கு ஆட்டோஇம்யூன் நோயான மயோசிடிஸ் என்னும் அரிய வகை நோய் இருப்பதோடு, அதற்கான சிகிச்சை எடுத்து வருவதை வெளியிட்டார். தனக்குள்ள பிரச்சனையை மக்களுக்கு தெரிவித்த சில நாட்களிலேயே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக செய்தி வெளிவந்தது.

Samantha Follows Strict AIP Diet After Myositis: Everything YouNeedToKnow In Tamil

இதற்கிடையே அவர் நடித்த சாகுந்தலம் என்னும் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டில் கலந்து கொண்டார். அந்த விழாவில் கலந்து கொண்ட போது, சமந்தா கஷ்டப்பட்டு கலந்திருப்பது நன்கு தெரிந்தது. இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு தனது ஆரோக்கியம் குறித்த ஒரு புதிய அப்டேட்டை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த அப்டேட்டில் அவர் மிகவும் கண்டிப்பான டயட்டை பின்பற்றுவதாக தெரிவித்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மயோசிடிஸ் என்றால் என்ன?

மயோசிடிஸ் என்றால் என்ன?

மயோசிடிஸ் என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் ஆட்டோஇம்யூன் நோயாகும். மேலும் இது தசைகளில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தி, வீக்கம் மற்றும் கடுமையான வலியை உண்டாக்கும். இந்த அழற்சியானது படிப்படியாக அதிகரிக்கும் போது, அது தசைகளை பலவீனப்படுத்தி, மிகவும் அசௌகரியமாக உணர வைக்கும் மற்றும் காலப்போக்கில் இது மோசமாகக்கூடும்.

மயோசிடிஸ் அறிகுறிகள்

மயோசிடிஸ் அறிகுறிகள்

மயோசிடிஸ் நோயின் அறிகுறிகளுள் தசை காயம், பலவீனம் மற்றும் நீர்கோர்வை போன்றவை அடங்கும். இந்த அறிகுறிகள் படிப்படியாக முன்னேற்றமடைவதால், ஆரம்பத்தில் இதைக் கண்டறிவது சற்று சிரமம். இந்த மயோசிடிஸ் நோய் உள்ளவர்கள் மாடிப்படி ஏறுவதில் சிரமம், அடிக்கடி விழுவது, சரும அரிப்பு, விழுங்குவதில் சிரமம், மிகுந்த களைப்பு போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

இந்த மயோசிடிஸ் நோயை சரியான மருந்து, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் மேம்படுத்தலாம். சமந்தா சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவில் ஆட்டோஇம்யூன் டயட்டை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதை குறிப்பிட்டிருந்தார்.

ஆட்டோ இம்யூன் டயட் எப்படி வேலை செய்கிறது?

ஆட்டோ இம்யூன் டயட் எப்படி வேலை செய்கிறது?

ஆட்டோ இம்யூன் நோய் என்பது நோயெதிர்ப்பு மண்டலமானது தவறுதலாக உடலை தாக்கும் நிலையாகும். இந்த நோயானது கடுமையான அழற்சி மற்றும் களைப்பை உண்டாக்கும். இருப்பினும் இந்த அழற்சி மற்றும் களைப்பை அடக்குவதற்கு ஒருசில உணவுகள் உதவி புரியும். அந்த உணவுகள் அடங்கிய டயட் தான் ஆட்டோ இம்யூன் டயட் ஆகும்.

இந்த ஆட்டோ இம்யூட் டயட்டில் உள்ள உணவுகள் ஆட்டோ இம்யூன் நோய்களால் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இந்த டயட்டிற்கு என்று எந்த ஒரு குறிப்பிட்ட முறையும் இல்லை. ஆட்டோ இம்யூன் டயட்டில் உள்ளோர் குறிப்பிட்ட வகையான உணவுகளை உட்கொண்டு, அந்த உணவுகளால் உடலில் ஏற்படும் விளைவுகளை கவனித்து, நேர்மறையான விளைவுகளை உண்டாக்கினால், அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவார். அதுவே எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கினால், அந்த உணவுகளை தவிர்ப்பார்.

ஆட்டோ இம்யூன் டயட்டில் அடங்கிய உணவுகள்

ஆட்டோ இம்யூன் டயட்டில் அடங்கிய உணவுகள்

நீங்கள் பேலியோ டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அப்படியானால் அந்த டயட்டின் ஒரு அட்வான்ஸ்டு வெர்சன் தான் ஆட்டோ இம்யூன் டயட். இந்த டயட்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் அழற்சியை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். இப்போது அந்த உணவுகளை எவையென்பதைக் காண்போம்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகள்

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகள்

* ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சியா விதைகள், மீன், வால்நட்ஸ்

* முழு தானியங்கள்

* பருப்பு வகைககள்

* பழங்கள் மற்றும் காய்கறிகள்

* தோல் நீக்கப்பட்ட இறைச்சி

* காபி மற்றும் டீ

* டார்க் சாக்லேட்

* ஆலிவ் ஆயில், அவகேடோ ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்

* விதைகள்

* மஞ்சள் போன்ற மசாலா பொருட்கள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

* சோடா

* ஐஸ் டீ

* பாக்கெட் ஜூஸ்

* பாஸ்தா, பிரட் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள்

* பேகான்

* சாசேஜ்

* எண்ணெயில் பொரித்த உணவுகள்

* கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்

* அதிகப்படியான மது

மேலே கொடுக்கப்பட்டவையெல்லாம் ஆட்டோ இம்யூன் டயட்டில் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளாகும். இது தவிர தினமும் உடற்பயிற்சி, மன அழுத்தத்தை நிர்வகிப்பது மற்றும் தினமும் 6-8 மணிநேர தூக்கத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு நோயாக இருந்தாலும், மன தைரியத்துடன் அதை எதிர்த்துப் போராடினால் நிச்சயம் அந்த நோயை எதிர்த்து ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Samantha Follows Strict AIP Diet After Myositis: Everything You Need To Know In Tamil

Samantha follows Strict AIP diet after myositis. In this article, we have shared about that Strict AIP diet. Read on to know more...
Story first published: Tuesday, January 31, 2023, 17:10 [IST]
Desktop Bottom Promotion