Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
நீண்ட காலம் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ... உங்க உணவு பழக்கத்தை இப்படி மாத்துங்க...!
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழச்சாறு, விளையாட்டு பானங்கள் மற்றும் சோடாவில் சர்க்கரை உள்ளது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதித்து, எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.
நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, குறிப்பாக உங்கள் ஆரோக்கியம் என்று வரும்போது, மாற்றம் முக்கியமானது. உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இருக்க, சிறந்த மற்றும் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இருப்பினும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் முக்கியத்துவத்தை நாம் அடிக்கடி புறக்கணித்து, நாவின் சுவை மொட்டுகள் சொல்வதை கேட்கிறோம். அப்படிச் செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இதை ஒரு பழக்கமாக மாற்றுவது சரியான செயல் அல்ல. இது தேவையற்ற உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

ஆதலால், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்றுங்கள். ஏனெனில் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமற்ற உணவை மாற்றுவது அவ்வளவு கடினமானதல்ல. அந்த வகையில், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி, உங்கள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமான தேர்வுகளுடன் மாற்றவும்.

சர்க்கரை பானங்களுக்கு மாற்றவும்
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழச்சாறு, விளையாட்டு பானங்கள் மற்றும் சோடாவில் சர்க்கரை உள்ளது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதித்து, எடையை அதிகரிக்க வழிவகுக்கும். கூடுதலாக, இது பல் சிதைவையும் ஏற்படுத்தும். அதனால், சர்க்கரை பானங்களுக்கு பதிலாக தண்ணீரை குடியுங்கள் போதுமான தண்ணீர் குடிப்பதன் மூலம் நீரிழப்பு மற்றும் பிற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். கூடுதலாக, இது உங்களை ஆரோக்கியமாகவும் கலோரிகள் இல்லாததாகவும் வைத்திருக்கிறது. எலுமிச்சைப் பழம், ராஸ்பெர்ரி எலுமிச்சைப் பழம், இலவங்கப்பட்டை ஆப்பிள் வாட்டர் போன்ற ஆரோக்கியமான இயற்கையான சுவையுள்ள வீட்டில் தயாரிக்கப்பட்ட தண்ணீரையும் நீங்கள் முயற்சி செய்யலாம்.

பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள்
சிப்ஸ் மற்றும் குக்கீகள் போன்ற தின்பண்டங்களைத் தேர்ந்தெடுத்து நாம் அதிகம் சாப்பிடுகிறோம். இந்த தின்பண்டங்களில் பொதுவாக சர்க்கரை, செயற்கை இனிப்புகள், உப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் சேர்க்கப்படுகின்றன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ்கள் போன்ற முழு உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை மாற்றுவது நல்லது. மேலும் ஆரோக்கியமான முறையில் நீங்கள் முழுமையாகவும் திருப்தியாகவும் உணர முடியும். ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதற்கு சாலட்டுகள், புரோட்டீன் பார்கள் போன்றவற்றையும் முயற்சி செய்யலாம்.

சிவப்பு இறைச்சி
சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளுக்கு ஆரோக்கியமான மாற்றாக தாவர அடிப்படையிலான புரத உணவுகளை நீங்கள் சாப்பிடலாம். இந்த பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சிகளை சாப்பிடுவதால் புற்றுநோய், இதய நோய் மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதைத் தடுக்க பீன்ஸ், பயறு மற்றும் டோஃபு போன்ற தாவர அடிப்படையிலான புரதங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தாவர அடிப்படையிலான உணவைப் பராமரிப்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும்.

உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள்
வழக்கமான உடல் செயல்பாடுகள் உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெரிதும் மேம்படுத்தும். வழக்கமான உடற்பயிற்சிகள் உங்கள் மன மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதால், உங்களுக்கு வலுவான தசைகள் மற்றும் எலும்புகள் மற்றும் உங்கள் உடற்தகுதியை அதிகரிக்கும். எனவே, டிவி பார்ப்பது அல்லது கணினியைப் பயன்படுத்துவதை விட நடைபயிற்சி, யோகா பயிற்சி அல்லது விளையாட்டு விளையாடுவது போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

ஆரோக்கியமற்ற சமையல் முறைகள்
ஆரோக்கியமாக இருக்க உங்கள் உணவை வீட்டிலேயே செய்யத் தொடங்குங்கள். உங்கள் உணவில் உள்ள அனைத்து கூடுதல் கொழுப்புகள் மற்றும் கலோரிகளை புறக்கணிக்க எண்ணெயில் பொறிப்பது மற்றும் அதிகமாக வறுப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக உங்கள் உணவைத் தயாரிக்க பேக்கிங், கொதித்தல், வேகவைத்தல் அல்லது கிளறி வறுக்கவும் முயற்சிக்கவும். பொதுவாக வேக வைத்த உணவுகள் உங்கள் உடலுக்கு நன்மையளிக்கும்.

இறுதி குறிப்பு
ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பதப்படுத்தப்பட்ட மற்றும் பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட திட்டமிட்டாலும், அதிகமாக சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். ஒரு சிறிய பகுதி எந்தத் தீங்கும் செய்யாது. ஆனால் உங்களுக்கு இதயப் பிரச்சனைகள் அல்லது நீரிழிவு நோய் போன்ற ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கப்படாத எதையும் உட்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
