For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரவர செக்ஸில் ஆர்வம் குறையுதா? அப்ப உடம்புல இந்த சத்து குறைவா இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷாரா இருங்க..

நீங்கள் கடந்த சில நாட்களாக உடல் சோர்வு, மந்த நிலை, உடல் வலி, நகம் உடைவது, கடுமையான தசை வலி மற்றும் அடிக்கடி ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா?

|

உடல் ஆரோக்கியமாகவும், உடலுறுப்புக்கள் சீராக இயங்கவும் வேண்டுமானால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் சரியான அளவு கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய உணவுப் பழக்கத்தால், நிறைய பேருக்கு உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. இதன் விளைவாக உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

Reasons Why You Should Not Take Vitamin D3 And B12 Deficiencies Lightly In Tamil

குறிப்பாக நீங்கள் கடந்த சில நாட்களாக உடல் சோர்வு, மந்த நிலை, உடல் வலி, நகம் உடைவது, கடுமையான தசை வலி மற்றும் அடிக்கடி ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அவற்றை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இவையெல்லாம் உடலில் முக்கியமான இரண்டு சத்துக்களின் குறைபாட்டை தான் குறிக்கிறது. அதுவும் இவை அனைத்தும் வைட்டமின் டி3 மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றின் அறிகுறிகளாகும்.

தற்போதைய காலகட்டத்தில் இந்த சத்துக் குறைபாட்டினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறைய பேர் இந்த வைட்டமின் குறைபாட்டை சாதாரணமாக எடுத்து அசால்ட்டாக இருக்கிறார்கள். உண்மையில் இந்த வைட்டமின் குறைபாட்டை கவனித்து, அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடாவிட்டால், பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் டி3

வைட்டமின் டி3

மூளையில் இருந்து எலும்பு வரை, உடலில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் வைட்டமின் டி3 ஏற்பிகள் உள்ளன. இந்த வைட்டமின்கள் உடலில் பல மரபணுக்களின் செயல்பாடுகளை சீராக்குகின்றன. இந்த வைட்டமின் குறைபாடு தீவிரமாகும் போது, அது எலும்புகளின் அடர்த்தியை இழக்க வைத்து, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு ஆகியவற்றை உண்டாக்குகிறது. சில சமயங்களில் வைட்டமின் டி3 குறைபாட்டினால் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி குறைந்து, உடலுறவில் நாட்டம் குறையவும் வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு இந்த வைட்டமின் டி3 குறைபாடானது ரிக்கெட்ஸ் நோயை உண்டாக்கும். ரிக்கெட்ஸ் என்பது ஒரு அரிய வகை நோய். இது எலும்புகளை மென்மையாக்குவதோடு, எலும்புகளை வளைக்கவும் செய்யும்.

உடலில் வைட்டமின் டி3-ன் வேலை என்ன?

உடலில் வைட்டமின் டி3-ன் வேலை என்ன?

வைட்டமின் டி3 எலும்புகளை வலுவாக்குவதை தவிர, உடலில் நடைபெறும் பல செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. அவை பின்வருமாறு:

* இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தி

* தைராய்டு மற்றும் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி

* மூளையின் ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றல்

* எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

வைட்டமின் பி12

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 என்பது மிகவும் முக்கியமான வைட்டமின் ஆகும் மற்றும் இது நீரில் கரையக்கூடிய வைட்டமின். இந்த வைட்டமின் பி12 நரம்பு செல்களின் ஆரோக்கியம், மூளையின் செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி ஆகியவற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. இந்த வைட்டமின் பி12 மிகவும் குறைவாக இருந்தால், அது இரத்த சோகையை உண்டாக்கும், நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.

உடலில் வைட்டமின் பி12-ன் வேலை என்ன?

உடலில் வைட்டமின் பி12-ன் வேலை என்ன?

வைட்டமின் பி12 உடலில் நடைபெறும் பல செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியமாகும். அவை பின்வருமாறு:

* ஆற்றல் உற்பத்தி

* குடல் ஆரோக்கியம்

* இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி

* நரம்புகளின் ஆரோக்கியம்

* மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றல்

* மனநிலையை சீராக வைத்துக் கொள்வது

எந்த காரணங்களுக்கு ஒருவருக்கு வைட்டமின் டி3 மற்றும் பி12 குறைபாடு ஏற்படுகிறது?

எந்த காரணங்களுக்கு ஒருவருக்கு வைட்டமின் டி3 மற்றும் பி12 குறைபாடு ஏற்படுகிறது?

ஒருவருக்கு வைட்டமின் டி3 குறைபாடு ஏற்பட முக்கிய காரணம், போதுமான அளவு வெயில் சருமத்தில் படாமல் இருப்பது தான். அதேப் போல் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட காரணம் போதுமான அளவு வைட்டமின் பி12 உணவுகளை உண்ணாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, ஆட்டோ இம்யூன் நிலைமைகள், ஆன்டாசிட் பயன்பாடு, ஹீமோரெபி சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை போன்றவற்றால் ஏற்படலாம்.

இவற்றில் வைட்டமின் டி3 குறைபாட்டினை அதிகாலை வெயிலில் சிறிது நேரம் இருப்பதன் மூலம் சரிசெய்யலாம். அதேப் போல் வைட்டமின் பி12 குறைபாட்டை விலங்கு உணவுகளை உண்பதன் மூலம் சரிசெய்யலாம். ஏனெனில் இந்த வைட்டமின் சைவ உணவுகளில் காணப்படாது. எனவே இந்த வைட்டமின் பி12 குறைபாடானது சைவ உணவாளர்களுக்கு வருதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வைட்டமின் டி3 மற்றும் பி12 குறைபாட்டை கண்டறிவது எப்படி மற்றும் தடுப்பது எப்படி?

வைட்டமின் டி3 மற்றும் பி12 குறைபாட்டை கண்டறிவது எப்படி மற்றும் தடுப்பது எப்படி?

வைட்டமின் பி12 மற்றும் டி3 குறைபாடு உள்ளதா என்பதை இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு குறைபாடுகளும் ஒருவருக்கு தீவிரமாக இருந்தால், அதை சப்ளிமெண்டுகள் மற்றும் குறிப்பிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவுகளால் சரிசெய்யலாம். ஆனால் இந்த குறைபாடுகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே சப்ளிமெண்ட்டுகளை எடுக்க வேண்டும் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்: ஈரல், நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்

வைட்டமின் டி3 நிறைந்த உணவுகள்: சூரிய வெளிச்சம், முழு முட்டை, காளான், கொழுப்பு நிறைந்த மீன்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Should Not Take Vitamin D3 And B12 Deficiencies Lightly In Tamil

Here are some reasons why you should not take vitamin D3 and B12 deficiencies lightly in tamil. Read on to know more...
Story first published: Monday, January 23, 2023, 18:30 [IST]
Desktop Bottom Promotion