For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்தத்தால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா? அப்ப உங்க வீட்டுல இத பண்ணுங்க... நிம்மதியா இருப்பீங்க!

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஆபத்து காரணிகளில் ஒன்று தனிமை. சமைப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது பொதுவாக எல்லா மக்களையும் ஒன்றிணைக்கிறது.

|

சமையல் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஆனால், பல பெண்களுக்கு இயற்கையாகவே சமையல் நான்றாக வருகிறது. அப்படி இல்லையென்றால், எப்படி சமைக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் கற்றுக்கொள்வது நல்லது. அதைவிடுத்து, உணவு ஆப்களிலும், அடிக்கடி அருகிலுள்ள உணவகத்திலிருந்தும் உணவை ஆர்டர் செய்வது நல்லதல்ல. அப்படி நீங்கள் ஆடர் செய்ப்பவராக இருந்தால், அதை நிறுத்த வேண்டிய நேரம் இது. வீட்டில் சமைப்பதில் பல நன்மைகள் உள்ளன. அவை நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடலாம், அதிக உணவை வீணாக்க வேண்டாம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தலாம். இவை மட்டுமல்லாமல் சமைப்பது மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா? சிலர் மன அழுத்தத்தைக் குறைக்க இசையை கேட்பது அல்லது வாகனம் ஓட்டுதல் அல்லது நீச்சல் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

reasons why cooking is good for mental health in tamil

இந்த பட்டியலில் நீங்கள் சமையலையும் சேர்க்கலாம். ஆம், காய்கறிகளை வெட்டுவது அல்லது நறுக்குவது, தண்ணீர் கொதிக்க வைப்பது மற்றும் வெவ்வேறு பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு டிஷ் செய்வது போன்றவை உங்கள் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, சமையலறைக்குச் சென்று சமைக்கத் தொடங்கி உங்கள் மன அழுத்தத்தைக் குறையுங்கள். மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சமையல் எப்படி உதவுகிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமூக உறவுகளுக்கு சமையல் உதவுகிறது

சமூக உறவுகளுக்கு சமையல் உதவுகிறது

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஆபத்து காரணிகளில் ஒன்று தனிமை. சமைப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது பொதுவாக எல்லா மக்களையும் ஒன்றிணைக்கிறது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒன்றாக இணைந்து சாப்பிடுவது, அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் தோழமை உணர்வை அளிக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் சமையல் செய்வதில் ஈடுபடுவது, மேம்பட்ட தகவல்தொடர்பு மற்றும் ஒன்றாக தரமான நேரம் செலவழித்தல் போன்ற கூடுதல் பலன்களைத் தரக்கூடும். இந்த கூறுகள் அனைத்தும் உங்கள் மன ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்த பங்களிக்கின்றன.

சமையல் உங்களுக்கு சாதனை உணர்வைத் தருகிறது

சமையல் உங்களுக்கு சாதனை உணர்வைத் தருகிறது

மனநலத் துறையில் உள்ள வல்லுநர்கள் பொதுவாக நீங்கள் விரும்பத்தக்க வெகுமதிகளுடன் நிர்வகிக்கக்கூடிய இலக்குகளை நிறுவ பரிந்துரைக்கிறார்கள். நீங்கள் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா? இல்லையா? என்பதைப் பொருட்படுத்தாமல், உணவை தயாரிப்பது ஒரு அற்புதமான குறுகிய கால நோக்கமாகும். உங்கள் சமையல் ஊட்டமளிக்கும் மற்றும் சுவையான ஒன்றாக மாறுவதைக் கவனிக்கும்போது மன அமைதியையும் திருப்தியையும் நீங்கள் பெறலாம். சமையலில் கொண்டு வரக்கூடிய சாதனை உணர்வு ஒரு பெரிய நம்பிக்கையை உருவாக்குகிறது.

சமைப்பது மன அழுத்தத்தை குறைக்கும்

சமைப்பது மன அழுத்தத்தை குறைக்கும்

சிலர் சமையலை ஒரு சுமையாக உணரலாம். பலர் சமைப்பதை ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்காக கருதுகிறார்கள். சமைப்பதன் மூலம் உங்கள் உடல் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. அதாவது வெங்காயம், காய்கறி வெட்டுவது மற்றும் கிளறுவது போன்றவை தேவையை மையப்படுத்துகின்றன. இது சமையல் வேலையில் முழு கவனம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, பிடித்த உணவுகளை சமையுங்கள். இது சமையலின் உடனடி நன்மைகளில் ஒன்றாகும். இது அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களை குறைக்கவும் கவனத்தைத் திசைதிருப்பவும் உதவும்.

ஆரோக்கியமான உறவை வளர்க்க சமையல் உதவுகிறது

ஆரோக்கியமான உறவை வளர்க்க சமையல் உதவுகிறது

வீட்டில் சமைப்பது உணவுடனான உங்கள் உறவில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். பொறுப்பேற்று எப்படி சமைக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே கற்றுக்கொடுப்பது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். இரவு உணவிற்கு என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் போது நீங்கள் அனுபவிக்கும் கவலையையும் இது குறைக்கும்.

சமையல் ஏற்பாடு செய்ய உதவுகிறது

சமையல் ஏற்பாடு செய்ய உதவுகிறது

சமையல் அடிப்படைகளில் நீங்கள் தேர்ச்சி பெற்றவுடன், வாரம் முழுவதும் உங்கள் பெரும்பாலான உணவை வீட்டிலேயே சமைக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் திறனை மேம்படுத்த உதவும். நீங்களே என்ன உணவை சமைக்கலாம் எனத் திட்டமிடுங்கள். ஏனெனில், முன்கூட்டியே திட்டுமிடுவது, உங்கள் சமையல் ஷாப்பிங் பட்ஜெட்டை சிறப்பாக நிர்வகிக்க உதவும். வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடல் மற்றும் மூளையை பாதுக்காக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

reasons why cooking is good for mental health in tamil

Here we are talking about the reasons why cooking is good for mental health in tamil.
Story first published: Friday, January 13, 2023, 15:53 [IST]
Desktop Bottom Promotion