மாதவிடாய் கப் யூஸ் பண்ற ஐடியா இருக்கா? அப்ப முதல்ல இத படிங்க...

சானிடரி நாப்கின்கள், டாம்பான்ஸ் என்கின்ற வரிசையில் தற்போது, முக்கிய இடத்தை பிடித்து வருவது தான் மாதவிடாய் கப்.

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பல்வேறு விதத்தில் விஞ்ஞான வளர்ச்சிக்கு தகுந்தவாறு தங்களை மாற்றுக் கொண்டுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அனுபவிக்கக்கூடிய ஓர் பிரச்சனை என்றால் அது மாதவிடாய் காலம் தான்.

பண்டைய காலங்களில் இது போன்ற காலங்களில் பெண்கள் சுத்தமான துணிக்களை உபயோகித்து வந்தனர். ஆனால், காலம் மாற மாற, அதற்கென ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. சானிடரி நாப்கின்கள், டாம்பான்ஸ் என்கின்ற வரிசையில் தற்போது, முக்கிய இடத்தை பிடித்து வருவது தான் மாதவிடாய் கப்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய் கப் உபயோகிக்கும் முறை:

மாதவிடாய் கப் உபயோகிக்கும் முறை:

மாதவிடாய் கப் என்பது நாப்கின்களுக்கு பதிலாக, டாம்பான்களுக்கு பதிலாக கப் உபயோகிக்கும் பழக்கம் இளம் பெண்களிடையே அதிகரித்து வருகிறது. பிறவற்றை காட்டிலும் இது சற்று சுத்தமாகவும், பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. இந்த கப், சிலிகான் அல்லது ரப்பரால் செய்யப்பட்ட மணி வடிவத்தில் சிறியதாக இருக்கும். இந்த கப்பை மடித்து சுருட்டி பிறப்புறுப்பிற்குள் வைக்க வேண்டும். உள்ளே செலுத்தியதும் அது அதன் வடிவத்திற்கு விரிந்து சரியாக பொருந்திக் கொள்ளும். இரத்தப்போக்கானது அந்த கப்பில் சேகரிக்கப்படும். 4 அல்லது 5 மணி நேரத்திற்கு ஒரு முறை கப்பை வெளியே எடுத்து சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.

முந்தைய காலங்களில், மாதவிடாய் கப்கள் அல்லது குப்பி ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தியதால் பயன்படுத்தவில்லை. இருப்பினும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பட்ட வடிவமைப்புகள் காரணமாக மாதவிடாய் கப்புகளைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து விட்டது. மேலும், மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை பராமரிக்கவும் பெண்கள் இந்த கப்புகள் உபயோகிப்பதை விரும்புகின்றனர். இந்த கட்டுரையில், மாதவிடாய் கப்பின் நன்மை தீமைகள் பற்றி அறிந்து கொள்ள போகிறோம்...

மாதவிடாய் கப்புகளின் நன்மைகள்:

மாதவிடாய் கப்புகளின் நன்மைகள்:

மாதவிடாய் கப்

சில வகையான மாதவிடாய் கப்புகள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் விதமாகவும், சில கப்புகள் மறுபயன்பாட்டுக்குரியவை ஆகவும் இருக்கின்றன. உங்கள் விருப்பத்திற்கும், சௌகரியத்திற்கும் ஏற்ற ஒன்று தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். மாதவிடாய் கப் உபயோகிப்பதன் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்:

யோனி வறண்டு போகாதிருக்கும்

யோனி வறண்டு போகாதிருக்கும்

டாம்பான்கள் உபயோகித்தால் யோனி வறண்டு போகக்கூடும். ஆனால், மாதவிடாய் கப்புகளை உபயோகிக்கும் போது அவ்வாறு நடக்காது. இது ஆரோக்கியமான பாக்டீரியாக்களைப் பாதுகாப்பதோடு, ஆறுதலான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருக்கவும் உதவுகிறது.

சுற்றுச்சூழல் நட்பு மற்றும் மலிவு விலை

சுற்றுச்சூழல் நட்பு மற்றும் மலிவு விலை

மீண்டும் பயன்படுத்தக்கூடிய கப்பின் விலையானது மிகவும் குறைவானது. அதுமட்டுமின்றி, அவை சந்தைகளிலும் சுலபமாக கிடைக்கக்கூடியவை. உண்மையிலேயே, ஒரு கப் பல ஆண்டுகள் வரை நீடிக்கும். எனவே, மாதவிடாய் கப் சுற்று சூழலை பாதுகாப்பதோடு, விலையும் மிக மிக மலிவானது.

ரசாயனங்கள் இல்லாதவை

ரசாயனங்கள் இல்லாதவை

மாதவிடாய் கப்பின் ஆயுள் காலத்தை அதிகரிக்க வேண்டுமென்று எந்தவொரு ரசாயனங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, அவை பாதுகாப்பான மற்றும் சுத்தமான மாதவிடாய் சுழற்சிக்கு இயற்கையானவையாக திகழ்கின்றன.

துர்நாற்றத்தை ஒழித்திடும்

துர்நாற்றத்தை ஒழித்திடும்

உங்கள் மாதவிடாய் காலத்தின் போது வெளிப்படக்கூடிய ஒரு வகையான வித்தியாசமான நாற்றம் உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கக்கூடும். அதுவே, மாதவிடாய் கப்புகள் உபயோகித்தால் அந்த பிரச்சனையே இருக்காது. ஏனென்றால், மாதவிடாய் கப்புகள் அந்த நாற்றத்தைக் கூட அகற்றிவிடும்.

மாதவிடாய் கப்புகளின் தீமைகள்

மாதவிடாய் கப்புகளின் தீமைகள்

நீங்கள் ஒரு நாப்கின் அல்லது டாம்பான் இல்லாத மாதவிடாய் சுழற்சியை விரும்பினால், நிச்சயமாக இந்த கப்கள் உங்களுக்கு சரியாக பொருந்தும். இருப்பினும், ஒவ்வொரு நல்ல விஷயத்திலும் சில தீமைகள் இருப்பது சகஜம் தானே. அந்த வகையில், மாதவிடாய் கப்புகளைப் பயன்படுத்துவதில் உள்ள சில தீமைகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்:

எரிச்சல்

எரிச்சல்

நாப்கின்களை போலவே மாதவிடாய் கப்களும் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால், கப் உபயோகிக்கும் போது முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, கப் வைப்பதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தமாக கழுவுவது மிகவும் அவசியம். அதை நாளொன்றிற்கு இரண்டு முதல் மூன்று முறையாவது காலி செய்ய வேண்டும்.

ரப்பர் அழற்சி

ரப்பர் அழற்சி

மாதவிடாய் கப்புகள் பெரும்பாலும் சிலிகான் அல்லது ரப்பரால் ஆனவை. ஒரு சிலருக்கு ரப்பரால் அழற்சி ஏற்படக்கூடும். எனவே, அப்படிப்பட்ட பெண்களுக்கு இந்த கப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. மேலும், யோனி என்பது உடலின் மிக முக்கியமான மென்மையான பகுதியாகும். அங்கு ஏற்படக்கூடிய அழற்சி எதிர்விளைவு, அசௌகரியத்தையும், நீண்ட கால சிகிச்சையையும் பெறும் வகையில் செய்துவிடலாம்.

பொருத்துவதில் சற்று கடினம்

பொருத்துவதில் சற்று கடினம்

சில நேரங்களில், மாதவிடாய் கப்பை பொருத்துவது மிகவும் கடினமானதாக இருக்கக்கூடும். உங்கள் வயது, இரத்தப்போக்கின் அளவு மற்றும் குழந்தை பெற்றவரா என்பதனை அடிப்படையாக கொண்டு வெவ்வேறு அளவுகளில் கப்புகளை எளிதாக வாங்கி விடலாம். இருப்பினும், சரியான பொருத்தத்தைக் கண்டுபிடிப்பதே பெரும் சவாலாக தான் இருக்கும். மேலும் நீங்கள் சாய்ந்த கருப்பை அல்லது குறுகிய கர்ப்பப்பையை கொண்டிருந்தால் மேலும் கடினம் தான். இந்த கப்பை பயன்படுத்துவது என்பது சிலபல சோதனைகளையும், பிழைகளையும் எடுக்கக்கூடும். இதற்கிடையில், கப் வைத்தும் இரத்த கசிவு ஏற்படலாம். பழகும் வரை இதுவும் சற்று கடினமானமாக தான் தெரியும்.

நீக்குவதில் சிரமம்

நீக்குவதில் சிரமம்

மாதவிடாய் கப்களில் உள்ள மற்றொரு அசௌகரியமான விஷயம் என்னவென்றால், அதனை நீக்குவதில் சிரமம் ஏற்படுவது தான். கடினமான மற்றும் குழப்பமான அகற்றலைத் தவிர்க்க வேண்டுமென்றால், அதற்கென சில யுக்திகளை கையாண்டு, நுட்பத்துடன் மெதுவாகவும், முறையாகவும் அகற்ற வேண்டும்.

முடிவுரை

முடிவுரை

மாதவிடாய் கப்புகளைப் பயன்படுத்துவதன் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி இப்போது பார்த்தோம். ஒரு மாதவிடாய் கப் என்பது இரத்தப்போக்கை ஒருபோதும் உறிஞ்சாது. ஆனால், அதற்கு மாறாக அவற்றை கப்பில் சேகரிக்கிறது. ஆகையால், மாதவிடாய் காலத்தில் எதைப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவை எடுக்க இந்த நன்மை தீமைகள் அனைத்தையும் படித்து தெரிந்து, ஆராய்ந்து எளிதாக முடிவெடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion