Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் அல்சர் வர வாய்ப்பிருக்கு-ன்னு தெரியுமா?
ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் வயிற்றில் அல்சர் வருகிறது என்று தெரியுமா? கீழே அல்சரை உண்டாக்கும் சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அல்சர் என்பது ஒரு வகையான புண் ஆகும். இந்த அல்சர் உடலின் பல்வேறு பகுதிகளில் வரக்கூடும். அதில் பெரும்பாலானோர் வயிறு, டியோடினம், உணவுக்குழாய் மற்றும் வாய் போன்ற பகுதிகளில் அல்சரை சந்திப்பார்கள். அல்சரானது மிகுந்த வலியை மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இது தவிர மிகுந்த அசௌகரியத்தையும் உண்டாக்கும். குறிப்பாக வயிற்றில் ஏற்படும் அல்சருக்கு சிகிச்சை எடுக்காமல் இருந்தால், அதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

வயிற்றில் அல்சர் இருந்தால், அவர் எரிச்சலுடனான கடுமையான வயிற்று வலி, வயிற்று உப்புசம், எப்போது வயிறு நிறைந்த உணர்வு, நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற அறிகுறிகளை சந்திப்பார். அதுவும் வயிறு காலியாக இருந்தால், வயிற்று வலி இன்னமும் கடுமையாக இருக்கும். சரி, ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் வயிற்றில் அல்சர் வருகிறது என்று தெரியுமா? கீழே அல்சரை உண்டாக்கும் சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்று
ஹெச்.பைலோரி பாக்டீரியா வயிறு அல்லது சிறு குடலின் சுவர்களைத் தாக்கும் போது, அதன் விளைவாக அல்சரை உண்டாக்கும். எப்படியெனில், இந்த பாக்டீரியாவானது வயிற்றுப் பகுதியில் உள்ள பாதுகாப்பு படலத்தை பலவீனமடையச் செய்து, வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் வயிற்றின் சுவர் சேதமடைவதை எளிதாக்குகிறது.

ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்
ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், பொதுவாக வலி நிவாரணிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வலி நிவாரண மருந்துகள் அல்லது மாத்திரைகளான ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன் மற்றும் நாப்ராக்ஸன் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் போது, அது வயிற்று சுவர்களை எரிச்சலடையச் செய்வதோடு, அல்சரின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே நீங்கள் மருத்துவரின் அறிவுரையின்றி அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பவராயின், முதலில் உடனே அதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் அல்சரால் அதிகம் அவதிப்பட நேரிடும்.

ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், பொதுவாக வலி நிவாரணிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வலி நிவாரண மருந்துகள் அல்லது மாத்திரைகளான ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன் மற்றும் நாப்ராக்ஸன் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் போது, அது வயிற்று சுவர்களை எரிச்சலடையச் செய்வதோடு, அல்சரின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே நீங்கள் மருத்துவரின் அறிவுரையின்றி அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பவராயின், முதலில் உடனே அதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் அல்சரால் அதிகம் அவதிப்பட நேரிடும்.
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும், புகைப்பிடிப்பவர்களுக்கும் அல்சர் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. ஏனெனில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பது போன்றவை வயிறு மற்றும் குடல் சுவர்களை சேதப்படுத்தி, அல்சரை வரவழைக்கும். அதில் ஆல்கஹாலை அதிகம் அருந்தும் போது, அது வயிற்றில் அமிலங்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதேப் போல் புகைப்பிடிப்பது செரிமான மண்டலத்தில் இரத்த ஓட்டத்தைக் குறைத்து, வயிற்றில் உள்ள அல்சர் குணமாவதைக் கடினமாக்கும்.

மன அழுத்தம்
மன அழுத்தம் ஒருவருக்கு நேரடியாக அல்சரை வரவழைப்பதில்லை. மாறாக, அது வயிற்றில் செரிமான அமிலத்தின் உற்பத்தியை அதிகரித்து, அல்சரை உண்டாக்குவதோடு, ஏற்கனவே இருக்கும் அல்சரை இன்னும் தீவிரமாக்கி, நிலைமையை மோசமடையச் செய்யும்.

மரபணுக்கள்
சில சமயங்களில் பரம்பரையில் யாருக்கேனும் அல்சர் பிரச்சனை இருந்தால், அந்த பரம்பரையைச் சேர்ந்தவர்களுகு மரபணுக்கள் காரணமாக அல்சர் வருவதற்கான வாய்ப்புள்ளது. உதாரணமாக, உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வயிற்று புற்றுநோய் அல்லது பிற குடல் பிரச்சனைகள் இருந்தால், அவர்களுக்கு அல்சர் வருதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

மருத்துவ நிலைகள்
கிரோன் நோய் அல்லது முடக்கு வாதம் போன்ற குறிப்பிட்ட மருத்துவ நிலைகள் அல்சர் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். ஏனெனில் இந்நிலைகள் செரிமான மண்டலத்தில் வீக்கத்தை/அழற்சியை ஏற்படுத்தி, செரிமான மண்டலத்தின் சுவர்களை சேதப்படுத்தி, அல்சர் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். ஆகவே இந்த ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications