Latest Updates
-
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க!
நமக்கு ஏன் கால் வலிக்கிறது என்று தெரியுமா? அதுக்கு இதான் முக்கிய காரணம்...
கால்வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். உண்மையில் கால்வலிக்கு பின்னால் இருக்கும் காரணங்களை நாம் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்வதில்லை.
சிலருக்கு அடிக்கடி கால் வலி ஏற்படும். நாமும் தொலை தூரம் நடந்ததால் தான் இந்த கால் வலி ஏற்படுகிறது என்று நம்புவோம். ஆனால் உண்மை அதுவல்ல. கால்வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். உண்மையில் கால்வலிக்கு பின்னால் இருக்கும் காரணங்களை நாம் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்வதில்லை.

உடற்பயிற்சி செய்வதால் கால் வலிக்கிறது, உடம்பு குண்டாக இருப்பதால் கால் வலிக்கிறது இது போன்று காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் சரியான காலணிகளை அணியாவிட்டாலும் கால் வலிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். இது போன்று கால் வலிப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தவறான காலணிகளை அணிதல்
கால் வலிக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் பொருத்தமற்ற காலணிகளை தேர்ந்தெடுப்பது. கணுக்கால் வலியிலிருந்து வீங்கிய பாதம் வரை எல்லாவற்றுக்கும் இந்த காலணி தொந்தரவு தான் காரணமாம். மிகவும் இறுக்கமான காலணிகளை நீங்கள் அணிந்து நடக்கும் போது விரல்கள் உராய்வதால் வலியை ஏற்படுத்துகின்றன. இதுவே மிகவும் லூசாக அணிந்தால் உங்களால் நடக்கவே முடியாது. எனவே உங்கள் கால்களுக்கு ஏற்ற சரியான அளவில் காலணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் கால் வலி பிரச்சனைகளை சரி செய்யலாம்.

உடல் பருமன் அல்லது உடல் எடை இழப்பு
உங்கள் உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதும் கால் வலிப்பதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் எடையை அதிகரிக்கும் போது அல்லது குறைக்கும் போது ஏற்படும் தசைகளின் விரிவாக்கம் அல்லது சுருக்கம் இவற்றால் கால் வலி ஏற்படுகிறது. மேலும் உடல் எடையை குறைத்து விடுவதால் உங்கள் கால் தசைகள் சுருங்கி இருக்கும். இதனால் உங்களுக்கு பழைய காலணி பொருந்தாமல் போக வாய்ப்புள்ளது. அதை திரும்ப போடும் போது கால் வலி உண்டாகிறது. எனவே வலியை போக்க நீங்கள் ஆர்த்தோடிக்ஸ் சிகச்சை பெறலாம்.

சர்க்கரை நோய் பிரச்சனைகள்
நீங்கள் அடிக்கடி கால், பாத வலியால் அவதிப்பட்டால் நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதிக இரத்த சர்க்கரை உங்கள் உடல் பகுதியில் உள்ள நரம்புகளை பாதிப்படையக் கூடும். இந்த அறிகுறிகளைத் தள்ளிப் போடாமல் உடனடியாக சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

பாதங்களுக்கு உடற்பயிற்சி கொடுக்காமல் இருப்பது
தினமும் பாதங்களுக்கு என்று தனி உடற்பயிற்சி கொடுக்க வேண்டும். எப்படி உடலுக்கு உடற்பயிற்சி செய்வது முக்கியமோ அதே போல் பாதங்களுக்கு உடற்பயிற்சி செய்வதும் முக்கியம். கால்வலியை போக்க காலை நன்றாக நீட்டி மடக்கி அசைவு கொடுக்க வேண்டும். அடிக்கடி காலை நீட்டி மடக்கி உட்காரவிட்டால் பிளாண்டர் ஃபாஸ்சிடிஸ் என்ற ஆபத்தை நீங்கள் சந்திக்கலாம்.

தட்டையான பாதம்
தட்டையான பாதம் உடையவர்கள் பொதுவாக ஏராளமான கால் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதே போல் பாத வளைவு அதிகமாக கொண்ட வர்களும் கால் வலி பிரச்சனையை சந்திக்கின்றனர். இந்த இரண்டு பாத அமைப்புகளிலும் கணுக்காலில் உள்ள தசைநார்கள் திரிக்கப்படுகின்றன. இதனால் கால் வலி பிரச்சனையை எளிதாக சந்திக்க நேரிடுகிறது.

உயரமான ஹீல்ஸ் அணிதல்
உயரமான ஹீல்ஸ் போன்ற காலணிகளை அணிவது இப்போது பெண்களுக்கிடையே மிகவும் பேஷனாகி விட்டது. இதனால் வலி, கால் சுளுக்கு, கால் அழற்சி போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். 2.5 அங்குலத்திற்கு மேல் ஹீல்ஸ் அணியும் போது பாதங்களுக்கு மிகுந்த அழுத்தத்தை கொடுக்கிறீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே பெண்கள் 3 அங்குலத்திற்கு குறைவான அல்லது குறைவான உயரமுள்ள தட்டையான காலணிகளை அணியுங்கள். அதே மாதிரி பாயிண்ட்டேடு ஹீல்ஸ் அணியாமல் சமமான ஹீல்ஸ் அணிய பழகுங்கள்.

நின்று கொண்டே வேலை செய்வது
ஒரு நாளைக்கு 10 மணிநேரத்திற்கு மேல் நின்று கொண்டே வேலை செய்தால் அது உங்க பாதங்களை காயப்படுத்தக் கூடும். எனவே நின்று கொண்டே வேலை பார்க்கும் நபர்கள் கால் மற்றும் பாதங்களுக்கு அவ்வப்போது உடற்பயிற்சி கொடுங்கள். இது உங்கள் கால் வலி பிரச்சனையை ஓரளவுக்கு குறைக்கும்.



Click it and Unblock the Notifications
