Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
நீங்க புத்திசாலியாக மாறணுமா? அப்ப இத பண்ணுங்க போதும்...!
மல்டி டாஸ்க் செய்வதை பொதுவாக அனைவரும் குறைத்துக்கொள்ள வேண்டும். நினைவாற்றல் அதிகம் கொண்டவர்கள் கூட பலவேலைகள் செய்ய வேண்டாம்.
ஒவ்வொரு விவரத்தையும், மிகவும் அற்பான விவரங்களை கூட தங்கள் விரல் நுணியில் வைத்திருக்கும் சில நபர்களை உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்து இருக்கலாம். அல்லது அந்த நபர் நீங்களாகவே கூட இருக்கலாம். ஒவ்வொரு விவரங்களையும் தங்கள் விரல் நுணியில் எப்படி வைத்திருக்கிறார்கள் என்று மற்றவர்கள் யோசித்தது உண்டா? அல்லது அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று நினைத்துள்ளீர்களா?

வாழ்க்கையில் நல்ல முறையில் சிறந்து விளங்கும் நபர்களை பார்த்து "அவன் நல்ல மூளக்காரன்" என்பார்கள். ஏனென்றால் அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகமாக இருக்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் மட்டும் நினைவாற்றலை அதிகரிக்க முடியாது. இதற்கு மனம் சம்பந்தமான சில செயல்களிலும் ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்யும்போது உங்களுடைய நினைவாற்றல் அதிகரிக்கும்.

ஆலோசனை
சில நபர்கள் முக்கியமான நாட்களான தங்களுடைய பிறந்த நாள் அல்லது மனைவி, காதலி அல்லது மகளின் பிறந்தநாள் அல்லது திருமண நாள் போன்ற நாட்களை கூட மறந்துவிடுவார்கள். பின்னர், வீட்டில் வெடிக்கும் அணுகுண்டுகளுக்கு இவர்களே காரணமாக இருப்பார்கள். இதுபோன்ற பாதிப்புகளுக்கு நிறைய பேர் ஆளாகியிருப்பார்கள்.
கவலையைவிடுங்க. உங்களுக்கு நினைவாற்றால் நன்றாக இருக்க சில எளிய விஷயங்களை நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். அதை பின்பற்றி நீங்களும் ஒரு நினைவக மேதையாக மாறலாம். சில எளிதான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவது மூளையின் தகவல்களை சிறந்த முறையில் செயலாக்க உதவுகிறது மற்றும் அது உங்கள் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. உங்கள் நினைவாற்றால் திறனை விரிவாக்க விரும்பினால், இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பலவேலைகள் செய்வதை நிறுத்த வேண்டும்
மல்டி டாஸ்க் செய்வதை பொதுவாக அனைவரும் குறைத்துக்கொள்ள வேண்டும். நினைவாற்றல் அதிகம் கொண்டவர்கள் கூட பலவேலைகள் செய்ய வேண்டாம். இதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. எளிமையாகச் சொன்னால், பலவேலை உங்கள் கவனத்தை பிரிக்கிறது. இதனால், ஞாபக சக்தி குறைய வாய்ப்பு உள்ளது. தேவைப்படும் போது பல விஷயங்களை செயலாக்குவது அல்லது நினைவில் கொள்வது மனதை கடினமாக்கும்.
நீங்கள் அதிக தகவல்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்றால், முக்கியமான விஷயங்களை நீங்கள் குறைவாக வலியுறுத்த முடியும். இதைச் செய்வதற்கான ஒரு நல்ல நடவடிக்கை, அடிப்படை வேலைகளைச் செய்யும்போது செல்போன்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அதேபோல வாசிக்கும்போது, உணவு உண்பது அல்லது தொலைக்காட்சியைப் பார்ப்பது ஆகியவை உங்கள் கவனத்தை திசை திருப்பும். மேலும் கவனத்தை நினைவகத்திலிருந்து விலக்கி வைக்கிறது.

தினசரி அட்டவணை
நினைவுகள் மற்றும் தகவல்களைச் சேகரிப்பது மற்றும் ஒழுங்கமைப்பது முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துவது மற்றும் தேவையில்லாத விஷயங்களை நினைவிலிருந்து அகற்றுவதற்கும் தினசரி நிகழ்வு அட்டவணை உதவுகிறது.
வழக்கமான பணிகளைச் செய்வது, தினசரி நிகழ்வுகளை எழுதுவது, சுத்தம் செய்வது அல்லது நினைவூட்டல்களை அமைப்பது போன்ற எளிய தகவல்களைச் சேமிக்க இந்த தினசரி நிகழ்வு அட்டவணை உங்களுக்கு மிகவும் பயன்படும். பணிகளை திறமையாகவும் சிறப்பாகவும் செய்யவும், முக்கியமான தகவல்களை நீங்கள் மறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவும் இது உதவுகிறது.

தவறாமல் தியானாம் செய்வது
தினமும் தியானம், யோகா போன்றவை செய்வதால் நிரூபிக்கப்பட்ட பல நன்மைகள் நமக்கு உள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவற்றில் ஒன்று நினைவாற்றாலை மேம்படுத்துவது. தியானம் செய்வதால் நரம்பு இணைப்புகள் மேம்படுகின்றன. மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது. தேவையில்லாத விஷயங்களை விலகி முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. தினசரி தியானம் செய்வதால் மூளையில் உள்ள கட்டமைப்பு மாறி, கவனம் செலுத்த உதவும் நரம்புகளை நன்றாக மாற்றும்.

சரியான நேரத்தில் தூங்குவது
கண்களுக்கு ஓய்வு கொடுப்பதை விட சரியான நேரத்தில் தூங்குவது அதிக நன்மைகளைக் கொடுக்கிறது. நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது மூளையின் ஆரோக்கியத்தையும் மூளையின் பகுதியையும் மேம்படுத்துகிறது. இது நினைவுகளை பிரத்தியேகமாக சேமித்து நினைவாற்றாலை மேம்படுத்துகிறது.
குறைந்தபட்சம் 7-8 மணிநேர தூக்கத்தைப் பெறும் நபர்கள் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தைப் பெறுபவர்களை விட நினைவுகளை சிறப்பாக வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக தூக்கத்தை விட போதுமான தூக்கம் உங்கள் சுழலுக்கு சிறந்தது என்று தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மன தொடர்புகளை உருவாக்குங்கள்
நிபுணர்களின் கூற்றுப்படி, கூர்மையான மூளை மற்றும் நினைவாற்றல் உள்ளவர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு மனத் தொடர்புகளை இணைக்கிறார்கள். புதிய தகவல்களைச் சேகரிப்பது, அதில் சில நினைவகங்களை இணைப்பது, எதையாவது சிறந்த முறையில் நினைவில் வைத்துக் கொள்ளவும், உங்களுக்குத் தேவைப்படும்போது அதை நினைவுபடுத்தவும் இது உதவும். இது வெறுமனே ஒலி அல்லது வாசனையைப் போன்ற எளிமையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் இது உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

உடற்பயிற்சி செய்வது
உடற்பயிற்சி செய்வது என்பது உங்கள் உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும் செயல். ஒருவித உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் மன செயல்பாடுகளை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளி போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாடு பலவீனமடையக்கூடும்.
நீங்கள் உடற்பயிற்சி செய்யாதபோது இது நிகழலாம். உடற்பயிற்சி மூளைக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது நினைவாற்றல், அறிவாற்றல் செயல்பாடுகள் மற்றும் கற்றல் ஆகியவற்றை அதிகரிக்கும். எனவே, தினமும் 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications