For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் வயிற்றுப் பகுதி வீக்கி இருந்தா, அதுக்கு இந்த பிரச்சனை தான் காரணம்..

ஹைட்ரோனெபிரோசிஸ் என்பது ஒரு நிலை, இது 100 குழந்தைகளில் 1 பேரை பாதிக்கிறது. இந்த நிலை ஏற்பட்ட குழந்தைகளில் சிறுநீர்ப்பை நிரம்பி பிறகு, சிறுநீர் சிறுநீரகத்தை நிரப்புவதால் சிறுநீரகம் வீங்கிப் போன நிலை உ

|

ஹைட்ரோனெபிரோசிஸ் என்பது ஒரு நிலை, இது 100 குழந்தைகளில் 1 பேரை பாதிக்கிறது. இந்த நிலை ஏற்பட்ட குழந்தைகளில் சிறுநீர்ப் பை நிரம்பி பிறகு, சிறுநீர் சிறுநீரகத்தை நிரப்புவதால் சிறுநீரகம் வீங்கிப் போன நிலை உண்டாகிறது. ஹைட்ரோனெபிரோசிஸ் ஒரு சிறுநீரகத்தையோ அல்லது இரண்டு சிறுநீரகத்தையோ பாதிப்படையச் செய்யலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த பிரச்சினை தானாகவே சரியாகிவிடும்.

Paediatric Hydronephrosis: Causes, Types, Symptoms

நிலைமையின் தீவிரம் மற்றும் அடைப்பு இவற்றை பொறுத்து சிறுநீரகம் எந்தளவு வீக்கமடைகிறது என்பதை பொறுத்து இதன் தீவிரம் கடுமையானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது சிறுநீரகத்திற்கு அருகிலுள்ள சிறுநீர்க்குழாயின் மேற்புறத்தில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இது யூரெட்டோரோபல்விக் சந்தி (யுபிஜே) என அழைக்கப்படுகிறது. இது அசாதாரணங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும் இது குழந்தையின் நுரையீரல் வளர்ச்சியையும் சேர்த்து பாதிக்கும்.

சிறுநீரக அமைப்பு, சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய் ஆகியவற்றை பாதிக்கும். சிறுநீரக அமைப்பிலிருந்து சிறுநீரை வெளியேற்றும் குழந்தையின் திறனையும் இந்த நிலை பாதிக்கிறது. ஹைட்ரோனெபிரோசிஸ் ஒரு முதன்மை நோய் அல்ல. ஆனால் வேறு சில அடிப்படை நோய்களின் விளைவாக ஏற்படும் இரண்டாம் நிலை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

இது ஒரு நோய் அல்ல. குழந்தையின் சிறுநீர் மண்டலத்தை பாதிக்கும் உள் மற்றும் வெளிப்புற நிலைமைகள் காரணமாக ஹைட்ரோனெபிரோசிஸ் ஏற்படலாம். கடுமையான ஒருதலைப்பட்ச தடுப்பு யூரோபதி ஒரு காரணமாகும் . சிறுநீரகத்தின் ஏதேனும் அசாதாரண முன்னேற்றங்கள் அல்லது வடிவங்கள் காரணமாக தடைகள் அல்லது ரிஃப்ளக்ஸ் இல்லாத நிலையில் இது உருவாகலாம். ஹைட்ரோனெபிரோசிஸுக்கு சில மரபணு காரணங்கள் கூட உள்ளன. அவை குழந்தை வளர்ந்த பின்பு செயல்படக்கூடும்.

கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளில் சுமார் 2 சதவீதம் குழந்தைகளுக்கு ஓரளவு ஹைட்ரோனெபிரோசிஸை வெளிப்படுத்துவதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. குழந்தையின் வளர்ச்சியின் போது சிறுநீர்க்குழாய் ஏன் தடுக்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஹைட்ரோனெபிரோசிஸ் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்குத் தான் அதிகமாகப் பதிவாகிறது.

ஹைட்ரோனெபிரோசிஸின் பொதுவான காரணங்கள் சில பின்வருமாறு:

ஹைட்ரோனெபிரோசிஸின் பொதுவான காரணங்கள் சில பின்வருமாறு:

* பிறவி அடைப்பு (பிறப்பிலேயே இருக்கும் ஒரு குறைபாடு)

* திசுக்களின் வடு

* கட்டி அல்லது புற்றுநோய்

வகைகள்

வகைகள்

குழந்தை ஹைட்ரோனெபிரோசிஸில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன.

வெசிகோரெட்டரல் ரிஃப்ளக்ஸ்

சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீர் ஓட்டம் சீர்குலைந்து, சிறுநீர்க் குழாயில் சிறுநீர் அசாதாரணமாக பின்வாங்கும் போது இது உருவாகிறது.

அடைப்பு

அடைப்பு

இது நான்கு வெவ்வேறு காரணங்களால் மற்றும் வெவ்வேறு இடங்களில் ஏற்படுகிறது. அதாவது சிறுநீரகம் சிறுநீர்க்குழாயைச் சந்திக்கும் இடத்திலும், யூரத்ரா சிறுநீர்ப்பையைச் சந்திக்கும் இடத்திலும், சிறுநீர்ப்பைக்குள்ளும், சிறுநீர்ப்பையில் சிறுநீர்க்குழாயின் தவறான இணைப்பு இருக்கும் போதும் ஏற்படுகிறது.

இடியோபாடிக் ஹைட்ரோனெபிரோசிஸ்

இடியோபாடிக் ஹைட்ரோனெபிரோசிஸ்

இந்த வகை ஹைட்ரோனெபிரோசிஸின் காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ இது தானாகவே குணமாகிறது .

அறிகுறிகள்

அறிகுறிகள்

புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் ஹைட்ரோனெபிரோசிஸ் குழந்தைகளுக்கு என்று பொதுவாக சில அறிகுறிகள் எதுவும் இல்லை. இருப்பினும் சில அறிகுறிகள் காணப்படுகின்றன

* மேகமூட்டமான அல்லது நுரையுடன் சிறுநீர் கழித்தல்

* வலி மிகுந்து சிறுநீர் கழித்தல்

* பலவீனமான தன்மை

* காய்ச்சல்

* குளிர்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Paediatric Hydronephrosis: Causes, Types, Symptoms

Hydronephrosis is a condition, where urine overfills or backs up into the kidney. It causes the kidney to swell up and become abnormally dilated. Hydronephrosis can affect one or both kidneys, and it resolves on its own in most of the cases.
Desktop Bottom Promotion