For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் நைட் தூங்கும் முன் பாதங்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா?

பாதங்களுக்கு தேவையான பராமரிப்பு வழங்குவதில் பாத அப்யங்கம் என்ற வழிமுறை பின்பற்றப்படுகிறது. ஆயுர்வேத எண்ணெய் கொண்டு பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

|

உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியும் அதற்கான முக்கியத்துவம் கொண்டது. இதில் பாதங்கள் விதிவிலக்கல்ல. ஆயுர்வேத பாரம்பரியத்தில் பாதங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உடலும் ஆன்மாவும் ஒரு நபரின் பாதங்களில் தான் இணைகிறது என்பது பழங்கால நம்பிக்கை. அதனால் பாதங்களுக்கு தனி கவனம் கொடுக்கப்பட்டு வந்தது.

Padabhyanga Ayurvedic Foot Massage Is The Therapy Your Feet Need

உங்கள் பாதங்களுக்கு தேவையான பராமரிப்பு வழங்குவதில் பாத அப்யங்கம் என்ற வழிமுறை பின்பற்றப்படுகிறது. ஆயுர்வேத எண்ணெய் கொண்டு பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் நரம்பு அழுத்தம் நீக்கப்பட்டு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாத மசாஜ் செய்வதன் சிறப்புகள் என்ன?

பாத மசாஜ் செய்வதன் சிறப்புகள் என்ன?

ஆயுர்வேதத்தின் படி பாதம் உடலின் முக்கிய உறுப்பாக பார்க்கப்படுகிறது. பல்வேறு உறுப்புகளின் நரம்புத் தொடர்கள் பாதங்களில் முடிவுறுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் அந்த நரம்புகள் புத்துணர்ச்சி அடைவதோடு, வலிமை அடைகின்றன. இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் இதர உறுப்புகளும் வலிமை அடைகிறது.

இரவு உறங்கச் செல்வதற்கு முன் பாத அப்யங்கம் செய்வது நல்ல பழக்கம். தினமும் இந்த சிகிச்சையை பின்பற்றுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. மற்ற சிகிச்சைகளுக்கு அன்னையாக திகழ்வது பாத அப்யங்கம். தோஷ சமநிலையை கொடுக்கும் ஆற்றல் இந்த சிகிச்சைக்கு உண்டு.

பாத அப்யங்கம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்:

பாத அப்யங்கம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்:

1. நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவித்து தன்னுடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது.

2. டென்சன், பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்குகிறது.

3. அலைபாயும் மனதிற்கு அமைதியைத் தருகிறது.

4. ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது

5. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது

6. கண்பார்வை மேம்படுகிறது

7. காது கேட்கும் திறன் மேம்படுகிறது

8. பாத வெடிப்பை தடுக்கிறது மற்றும் குணமாக்குகிறது

9. பாத ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

10. பாத வலிக்கு சிகிச்சை அளிக்கிறது

11. சரும வறட்சி மற்றும் கடினத்தன்மையைப் போக்குகிறது

12. உடல் பாதிப்பை ஊக்குவிக்கும் வாத தோஷத்தை சமநிலைப்படுத்துகிறது.

பாத அப்யங்கம் செய்யும் முறை :

பாத அப்யங்கம் செய்யும் முறை :

நோயாளிக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின் சான்று பெற்ற மருத்துவர் மட்டுமே இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.

முதல் நிலை : எண்ணெய் தேர்வு

முதல் நிலை : எண்ணெய் தேர்வு

தைலம் என்ற ஆயுர்வேத எண்ணெய் கொண்டு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவ எண்ணெய் அல்லது மருத்துவ நெய் அல்லது சில நேரம் இரண்டையும் சேர்த்து கலந்து இந்த தைலம் தயாரிக்கப்படுகிறது.

சில நேரங்களில், பால், லக்ஷ சுரணம் மற்றும் தசமுலா காஷயம் ஆகியவற்றை இணைத்து தயாரிக்கப்படும் ஷீரோதாரா என்பதும் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாம் நிலை : எண்ணெய் தேய்ப்பது

இரண்டாம் நிலை : எண்ணெய் தேய்ப்பது

மருத்துவ எண்ணெய்யை சிறிது நேரம் சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் எடுத்துக் கொள்ளவும்.

வெதுவெதுப்பான எண்ணெய் அல்லது நெய்யை எடுத்து குதிகால், பாதம், கணுக்கள் மூட்டு , மற்றும் கால் முழுவதும் தடவவும்.

மூன்றாம் நிலை : மசாஜ் செய்வது

மூன்றாம் நிலை : மசாஜ் செய்வது

எண்ணெய் தடவிய பின் முக்கிய செயல்பாடு தொடங்குகிறது. எண்ணெய் தேய்க்கப்பட்ட சருமத்தில் கைகளால் அழுத்தமில்லாமல் அதே நேரத்தில் வேகமாக மசாஜ் செய்ய வேண்டும்.

நரம்புகள் மற்றும் ஆற்றல் குறிகளை ஊக்குவிக்கும் படி, மசாஜ் செய்பவர்கள் குறிப்பிட்ட பகுதியில் லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்த செயல்பாடு எதிர்மறை ஆற்றல் மற்றும் கழிவுகளை உடலில் இருந்து அகற்றி நேர்மறை தாக்கத்தை உண்டாக்குகிறது.

சில முக்கிய குறிப்புகள்

சில முக்கிய குறிப்புகள்

* ஒரு நாளின் எந்த நேரத்திலும் பாத மசாஜ் செய்யலாம். ஆனால் இரவு உறங்கச் செல்வதற்கு முன் பாத மசாஜ் செய்வது நல்லது. இரவு நேரத்தில் உங்கள் உடலை தளர்த்திக் கொள்வதால் உடலின் முக்கிய குறிகள் ஊக்குவிக்கப்படும்.

* "சர்வ அப்யங்கம்" என்னும் முழு உடல் மசாஜ் செய்யும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக பாத அப்யங்கம் பார்க்கப்படுகிறது.

* பாத மசாஜ் செய்வதை வழக்கமாகிக் கொள்வதால் உடல் புத்துணர்ச்சி அடைந்து பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.

யாரெல்லாம் செய்யக்கூடாது?

யாரெல்லாம் செய்யக்கூடாது?

சில குறிப்பிட்ட உடல் நிலையில் பாத அப்யங்கம் செய்வது நல்லதல்ல. சளி, காய்ச்சல், இரத்த தொற்று, அஜீரணம், வயிற்று கோளாறுகள், சரும பாதிப்புகள், இரத்த ஓட்ட கோளாறுகள் போன்ற பாதிப்புகள் இருக்கும் போது இந்த சிகிச்சை ஏற்புடையது அல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Padabhyanga Ayurvedic Foot Massage Is The Therapy Your Feet Need

Padabhyanga foot massage is an ancient healing therapy to promote wellness by massaging the vital points on the feet.
Story first published: Tuesday, March 3, 2020, 12:41 [IST]
Desktop Bottom Promotion