Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
காலை எழுந்தவுடன் இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்க.. நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பீங்க...
நீங்கள் படுக்கும் படுக்கையில் இருந்த படியே மர்ஜார்யசனா யோகாசனத்தை செய்யலாம். இதனை தொடர்ந்து செய்வதால் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கக்கூடும்.
தினமும் காலை படுக்கையில் இருந்து எழுவது என்பதே பெரிய வேலையாகவும், படு சோம்பேறி தனமாகவும் சிலருக்கு இருக்கும். அதிலும், நாள்தோறும் கம்ப்யூட்டர், லேப்டாப் என ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். முதுகு வலி பாடாய் படுத்தும். அதிலும், குறிப்பாக காலை எழுந்திருக்கும் போது தான் வலி அதிகமாக இருக்கும். சிலருக்கு இத்தகைய முதுகு வலி சரியான நிலையில் படுக்காவிட்டால் கூட ஏற்படலாம். இளம் வயதிலேயே பலர் இத்தகை முதுகு வலியால் அவதிப்படும் நிலையில், அவர்களுக்கென்று சிறு உடற்பயிற்சி, யோகாசனங்கள் உள்ளன. அவற்றை செய்தாலே வலியில் இருந்து விடுபட போதுமானதாக இருக்கும்.

காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறுவது பலருக்கு பிடிக்காத விஷயமாகவே மாறிவிட்டது. உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறியவுடன், காலை சீக்கிரம் எழுந்து தயாராகி, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றபடியான உடை அணிந்து... அப்படியெல்லாம் எதுவுமே தேவையில்லை. இத்தனை விஷயங்களை செய்ய வேண்டும் என்று கூறினால் பலருக்கு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வமே ஏற்படாமல் போகிறது. அதற்கு மாறாக, அனைவரும் விரும்பும் வகையில், படுக்கையிலே சுலபமாக உடற்பயிற்சி செய்யலாம் என்று கூறினால், அனைவருமே உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்ய ஆரம்பித்துவிடுவர்.
ஆம், நீங்கள் படுக்கும் படுக்கையில் இருந்தபடியே இந்த யோகாசனத்தை செய்யலாம். இதனை தொடர்ந்து செய்வதால் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கக்கூடும். மனதை அமைதிப்படுத்துவது தொடங்கி, நாள் முழுவதிற்குமான ஆற்றலை வழங்குவது வரை அனைத்தையும் செய்திடக் கூடியது. வாருங்கள், அந்த யோகாசனம் குறித்து சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்...

மர்ஜார்யசனா செய்யும் முறை
* முதலில் 2 கைகள் மற்றும் முட்டிகளை பயன்படுத்தி 4 கால்களில் நின்று கொள்ள வேண்டும். உள்ளங்கைகளானது, தோள்பட்டைக்கு நேராக நீட்டியபடி, தரையில் பதிய வேண்டும். முட்டிகள் இரண்டும் இடுப்பிற்கு நேராக இருக்க வேண்டும். பாதங்கள் வெளிபுறமாக பார்த்த படி வைக்கவும்.
* இப்போது மூச்சை உள்ளே இழுக்கும் போது, வயிற்று பகுதியை கீழ் நோக்கி உள்ளிழுக்கவும். தலையை தூக்கி மேலே பார்க்கவும்.
* அந்த நிலையில் 2 முதல் 3 வினாடிகளுக்கு அப்படியே இருக்கவும்.
* அடுத்ததாக, மூச்சை வெளியே விடும் போது, அதற்கு அப்படியே தலைகீழாக, வயிற்று மேல்நோக்கி வளைத்து, தலையை குனிந்து நெஞ்சு பகுதியை பார்க்கவும்.
* இந்த ஆசனத்தை தொடர்ந்து 20 முதல் 25 நிமிடங்களுக்கு காலை எழுந்தவும் செய்யவும்.

காலை எழுந்தவுடன் எதற்காக இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்?
யோகாசனத்திற்கு பொதுவாக ஏகப்பட்ட ஆரோக்கி பலன்களை கொடுக்கும் ஆற்றல் உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது, இரத்த அழுத்தத்தை சீராக்குவது, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மற்றும் மனஅழுத்தத்தை குறைப்பது என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். எனவே, யோகாசனம் செய்வது ஒட்டு மொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக இந்த மர்ஜார்யசனாவை செய்வதன் மூலம், நாள் முழுவதும் முழு ஆற்றலுடன், ஆரோக்கியமானதாக நகர்த்திட முடியும். இதனால் கிடைக்கக்கூடிய மேலும் சில ஆரோக்கிய பலன்களையும் தெரிந்து கொள்வோம்...

முதுகு வலியை விரட்டிடும்
ஒழுங்கான நிலையில் இரவில் தூங்காதது அல்லது நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது என பல்வேறு காரணங்களால் முதுகு வலி ஏற்படக்கூடும். இந்த மர்ஜார்யசனாவை காலை எழுந்தவுடன் செய்து வந்தால் முதுகு தசைகள் தளர்வடைந்து, வலியில் இருந்து நிவாரணம் கிடைத்திடும். மேலும், நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படவும் இந்த ஆசனம் உதவிடும்.

மனதை சாந்தப்படுத்த உதவிடும்
காலை எழுந்தவுடன், இந்த உடற்பயிற்சி செய்ய ஒரு சில நிமிடங்களே போதுமானது. ஆனால், இதனால் கிடைக்கக்கூடிய பலன்களோ நாள்முழுவதிற்கும் நீடிக்கும் தன்மை உடையது. மனஅழுத்ததிற்கு ஹார்மோன் சுரப்பை குறைத்து, மனதை சாந்தப்படுத்தி, நாள் முழுவதையும் நீடித்த ஆற்றலுடன் செயல்பட செய்திடும். இது சுய விழிப்புணர்வையும், உள் அமைதியையும் மேம்படுத்த உதவுகிறது.

தோரணையை மேம்படுத்திடும்
நாள்தோறும் ஒரு நிலையில் அமர்ந்து வேலை பார்ப்பதால் உடலின் தோரணையே மாறிடக்கூடும். இந்த மர்ஜார்யசனா சரியான முறையில் தொடர்ந்து செய்து வந்தால், முதுகு எலும்பின் இயற்கையான வளைவு கிடைக்கப்பெற்று, உட்காரும் நிலையும் சரியாகிவிடும். அதுமட்டுமல்லாது, வயதான பின்னர் ஏற்படக்கூடிய கூன் பிரச்சனையில் இருந்தும் இது காத்திடக்கூடும்.

ஒருங்கிணைப்பை அதிகரித்திடும்
நீங்கள் எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும், அதில் சிறப்பாக செயல்பட மன அமைதியும். சிறந்த ஒருங்கிணைப்பும் தேவை. அதனை வழங்கி, உங்கள் துறையில் நீங்கள் சாதிக்க இந்த யோகாசனம் உதவிடும். ஒருங்கிணைப்பு மட்டுமின்றி, கவனச் சிதறல் பிரச்சனையில் இருந்தும் இந்த ஆசனம் காத்திடும்.



Click it and Unblock the Notifications