For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் புதிதாக அனுமதி பெற்றுள்ள 'மாடர்னா தடுப்பூசி' பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள்!

கொரோனாவுக்கு எதிராக இந்தியா மிகக்கடுமையான மருத்துவ போரை மேற்கொண்டிருக்கும் போது, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

|

கொரோனாவுக்கு எதிராக இந்தியா மிகக்கடுமையான மருத்துவ போரை மேற்கொண்டிருக்கும் போது, இந்தியாவின் டி.சி.ஜி.ஐ (DCGI) இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய மும்பையைச் சேர்ந்த சிப்லா நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்பூட்னிக் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் கிடைக்கும் நான்காவது கொரோனா தடுப்பூசி என்றால் அது மாடர்னா தடுப்பூசி ஆகும். இந்த மாடர்னா தடுப்பூசி இந்தியாவிற்கு வருவதற்கு முன், இந்த தடுப்பூசி குறித்த முழு விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாடர்னா தடுப்பூசி என்பது என்ன?

மாடர்னா தடுப்பூசி என்பது என்ன?

மாடர்னா தடுப்பூசி அமெரிக்க மருந்து நிறுவனத்தால் அதே பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி mRNA-1273 தடுப்பூசி என்றும் அழைக்கப்படுகிறது. இது மெசஞ்சர் ஆர்.என்.ஏ அல்லது mRNA-வைப் பயன்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது நமது செல்களுக்கு ஒரு புரதத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை கற்பிக்கும் தொழில்நுட்பம் அல்லது ஒரு துண்டு புரதம் நம் உடலுக்குள் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.

எத்தனை டோஸ் தேவைப்படுகிறது?

எத்தனை டோஸ் தேவைப்படுகிறது?

மாடர்னா தடுப்பூசியானது 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் போடப்படுகிறது. இந்தியாவிலும் இரண்டு அளவுகளிலேயே இந்த தடுப்பூசி போடப்படும். இருப்பினும், இந்தியாவில் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்டதா?

இந்த தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்டதா?

மாடர்னா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அதன் மூலோபாய ஆலோசனைக் குழுவின் நிபுணர்களின் (SAGE) பரிந்துரைகளின் அடிப்படையில் ஏப்ரல் 30 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மாடர்னா தடுப்பூசியின் செயல்திறன்

மாடர்னா தடுப்பூசியின் செயல்திறன்

மாடர்னா தடுப்பூசியானது கோவிட்-19 க்கு எதிராக பாதுகாப்பதில் சுமார் 94.1% செயல்திறனைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அதுவும் இதன் செயல்திறனானது தடுப்பூசியின் முதல் டோஸுக்கு 14 நாட்களுக்குப் பிறகு தொடங்குவதாக உலக சுகாதார அமைப்பு அதன் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த தடுப்பூசி புதிய வகைகளுக்கு எதிராக செயல்படுமா?

இந்த தடுப்பூசி புதிய வகைகளுக்கு எதிராக செயல்படுமா?

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், B.1.1.7 (ஆல்பா மாறுபாடு) மற்றும் 501Y.V2 (பீட்டா மாறுபாடு) உள்ளிட்ட SARS-CoV-2 இன் புதிய வகைகளுக்கு எதிராக மாடர்னா mRNA தடுப்பூசி செயல்படுகிறது. இருப்பினும், புதிய மாறுபாடுகளுக்கு எதிராக மாடர்னா தடுப்பூசியின் செயல்திறனை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் சோதித்து வருகின்றனர்.

மாடர்னா தடுப்பூசிக்கு எத்தனை நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன?

மாடர்னா தடுப்பூசிக்கு எத்தனை நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன?

இதுவரை மாடர்னா தடுப்பூசிக்கு கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாடர்னா தடுப்பூசியின் பக்கவிளைவுகள்

மாடர்னா தடுப்பூசியின் பக்கவிளைவுகள்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கருத்துப்படி, கை வலி, கை சிவத்தல், கை வீக்கம் போன்றவை மாடர்னா தடுப்பூசியின் பக்கவிளைவுகளாக இருக்கலாம். இது தவிர, தடுப்பூசி போட்டவர் உடல் சோர்வு, தலைவலி, தசை வலி, குளிர், காய்ச்சல், குமட்டல் போன்றவற்றையும் சந்திக்கலாம். அதுவும் தடுப்பூசி போட்ட ஓரிரு நாட்களில் பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இவையெல்லாம் உடலில் தடுப்பூசி வேலை செய்வதை உணர்த்தும் சாதாரண அறிகுறிகளாகும் மற்றும் இவை ஒரு சில நாட்களில் தானாக சரியாகிவிடும்.

எந்த வயதினர் இந்த தடுப்பூசியைப் போடலாம்?

எந்த வயதினர் இந்த தடுப்பூசியைப் போடலாம்?

உலக சுகாதார அமைப்பு (WHO) 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி போட ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் மாடர்னா ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்திடம் 12-17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு பயன்படுத்த அங்கீகாரம் கேட்டு கோரிக்கை தாக்கல் செய்தது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 12 மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளில் அதன் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக அதன் மருத்துவ சோதனை தரவை மதிப்பாய்வு செய்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Moderna’s COVID-19 Vaccine Gets Nod In India: All You Need To Know About This Vaccine In Tamil

The Moderna vaccine has been shown to have an efficacy of approximately 94.1% in protecting against Covid-19.The Moderna Covid vaccine has been approved in more than 40 countries, including the US, Japan, Singapore, South Korea, Israel, etc.
Desktop Bottom Promotion