For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைஞ்சுபோக காரணம் இதுதானாம் தெரிஞ்சிக்கோங்க...!

பொதுவாக ஆண்களுக்கு பெண்கள் மீதான அன்பு குறைவது, அவர்களை பாராட்டாமல் இருப்பது, அவர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது போன்ற உணர்வுகள் பெண்களின் பாலியல் ஆசைகளை குறைக்கும்.

|

ஆண், பெண் உறவில் தாம்பத்யம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒருசில ஆண்களைத் தவிர பெரும்பாலும் அனைத்து ஆண்களுக்கும் 40 வயதைக் கடந்தும் தாம்பத்யத்தில் ஆர்வம் இருக்கும். ஆனால் பெண்களுக்கு அவ்வாறு இருப்பதில்லை, இதற்கு காரணம் அவர்களின் லிபிடோ குறைபாடு மட்டுமல்ல, ஆழமாக சிந்தித்தால் அவர்களின் உறவு சிக்கல்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.

medical reasons for your low sex drive

பொதுவாக ஆண்களுக்கு பெண்கள் மீதான அன்பு குறைவது, அவர்களை பாராட்டாமல் இருப்பது, அவர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது போன்ற உணர்வுகள் பெண்களின் பாலியல் ஆசைகளை குறைக்கும். அதேசமயம் சில மருத்துவ பிரச்சினைகளும், தவறான உணவுகளும் கூட அவர்களின் பாலியல் ஆசையைக் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெண்களுக்கு பாலியல் உறவில் விருப்பம் இல்லாமல் போவதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கமின்மை

தூக்கமின்மை

உங்களின் எட்டு மணி நேர தூக்கத்தை குறைத்துக் கொள்வது என்பது உங்களின் தாம்பத்ய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் இரவில் நன்றாக தூங்கும் பெண்கள் அடுத்தநாள் காலையில் பாலியல்ரீதியாக அதிகளவு தூண்டப்படுவதாக தெரிய வந்தது. நன்றாக தூங்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவர்களின் பாலியல் ஆர்வத்தை 14 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

அதிகளவு இரசாயனங்களை எடுத்துக் கொள்வது

அதிகளவு இரசாயனங்களை எடுத்துக் கொள்வது

சிறுநீரில் பாதலேட்டுகள் எனப்படும் வேதிப்பொருளை அதிக அளவில் கொண்டிருக்கும் பெண்களுக்கு குறைந்த அளவு பாலியல் ஆசைகள் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மற்ற பெண்களை விட இவர்களுக்கு இரண்டரை மடங்கு பாலியல் ஆர்வம் குறைவாக இருக்கும். முந்தைய ஆராய்ச்சிகளில் ஆண்களில் எண்டோகிரைன் அமைப்பை பாதலேட்டுகள் பாதிக்கின்றன என்று கண்டறியப்பட்டது, ஆனால் சமீபத்திய ஆய்வில் பெண்களின் ஹார்மோன்களையும், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்றவற்றையும் பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் உடலில் பாதலேட்டுகள் அதிகரிக்கக் காரணம் நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும், பூச்சிக்கொல்லிகள் சேர்க்கப்பட்ட உணவுகளும்தான். இவற்றில் உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் பல இரசாயனங்கள் உள்ளது, இது உங்களின் பாலியல் ஆசையைக் குறைக்கலாம்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

மனசோர்வு உள்ள பெண்களுக்கு உச்சக்கட்டத்தில் சிக்கல், உடலுறவின் போது வலி, திருப்த்தியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதுமட்டுமின்றி மனஅழுத்தத்திற்காக பெண்கள் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள் கூட பெண்களின் பாலியல் ஆசையை குறைக்கலாம். குறிப்பாக, ட்ரைசைக்ளிக் ஆண்டிடிரஸன்ட்கள் பெண்ணின் காதல் உணர்வுகளை பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

MOST READ: கையில இந்த ரேகை இருக்கறவங்க ஒரே நேரத்தில ரெண்டு பேர காதலிப்பாங்களாம் தெரியுமா?

மெனோபஸ்

மெனோபஸ்

மெனோபஸ் ஏற்பட்ட பெண்கள் திடீரென பல ஹார்மோன்களின் உற்பத்திக்கு உள்ளாவார்கள், இதனால் அவர்களின் பாலியல் ஆர்வம் பெருமளவில் குறைந்துவிடும். மாதவிடாய் நின்ற பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலியலில் ஆர்வம் குறைந்து விட்டதாக கூறுகிறார்கள். பெண்களின் வயது அதிகரிக்கும் போது ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைகிறது, இது அவர்களின் பாலியல் ஆர்வத்துடன் தொடர்புடையதாகும். பல பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்துடன் யோனி வறட்சியை அனுபவிக்கிறார்கள், இது அதிக வலிமிகுந்த உடலுறவுக்கு வழிவகுக்கும்.

முழுமையாக்க முயற்சிக்கிறார்கள்

முழுமையாக்க முயற்சிக்கிறார்கள்

ஆண்கள் தங்கள் துணையிடம் இருந்து பூரணத்துவத்தை எதிர்பார்க்கும் போது பெண்களுக்கு பெரும்பாலும் தாம்பத்யத்தில் ஆர்வம் குறைந்து காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. அவர்கள் துணையிடம் இருந்து அவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அவர்களின் ஆசையையும், ஆர்வத்தையும் குறைகிறது.

புதிய மருந்துகள்

புதிய மருந்துகள்

மருந்துகள் பல்வேறு ஹார்மோன் அளவை மாற்றக்கூடும், இது பெண்களின் லிபிடோவைக் குறைக்கும். நாள்பட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பல மருந்துகள், அதே போல் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் ஆண்டிடிரஸன் மருந்துகள் அனைத்தும் பெண்களின் பாலியல் ஆசைகளைக் குறைக்கும். எனவே எந்தவொரு மருந்தையும் உட்கொள்ளும் முன் அதன் பக்கவிளைவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

MOST READ: இந்த ராசிக்காரங்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்...உங்க ராசியும் இதுல இருக்கா?

கர்ப்பகாலம்

கர்ப்பகாலம்

சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தாம்பத்யத்தில் அதிகளவு விருப்பம் இருக்கும், ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பகாலம், பிரசவத்திற்கு பிறகு, தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் அவர்களுக்கு பாலியல் ஆர்வம் குறைந்து விடுகிறது. இதற்கு காரணம் அவர்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும்போது சுரக்கும் புரோலேக்ட்டின் பெண்களின் பாலியல் ஆசையைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Medical Reasons for Your Low Sex Drive

Here is the list of medical reasons for your low sex drive.
Story first published: Wednesday, October 16, 2019, 14:50 [IST]
Desktop Bottom Promotion