Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
புற்றுநோயில் இருந்து மீண்டு வெண்படை நோயின் பிடியில் சிக்கிய நடிகை மம்தா மோகன்தாஸ்!
தென்னிந்திய நடிகையான மம்தா மோகன்தாஸ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆட்டோஇம்யூன் நோயான லிட்டிலிகோ எனப்படும் வெண்படை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகையான மம்தா மோகன்தாஸ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆட்டோஇம்யூன் நோயான லிட்டிலிகோ எனப்படும் வெண்படை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிவித்தார். விட்டிலிகோ என்பது சருமம் அதன் நிறத்தை இழக்கும் ஒரு நிலையாகும். இந்த விட்டிலிகோ பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் உடலின் பல பகுதிகளில் நிறமிழப்பை சந்திப்பார்கள். பெரும்பாலும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலும் வாய், ஸ்கால்ப், கண் இமைகள் அல்லது புருங்கள் போன்ற பகுதிகளில் நிற இழப்பை சந்திக்கின்றனர்.

ஏற்கனவே மம்தா மோகன்தாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர். இந்நிரலையில் இப்படிப்பட்ட ஒரு மோசமான சரும பிரச்சனையால் தான் நடிகை மம்தா மோகன்தாஸ் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வெண்படை ஏற்படுத்தும் பாதிப்பை விட, சுற்றியுள்ளவர்களின் பார்வையும், புறக்கணிப்பும் தான் பெரும் வலியை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் எவ்வளவு தான் தகுதியையும், திறமையையும் கொண்டிருந்தாலும், மற்றவர்களின் பேச்சுக்களால் தங்களால் வெளியே எதையும் தைரியமாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், பலருக்கும் வெண்படை நோய் பற்றிய தவறான புரிதல் இருப்பது தான். இப்போது விட்டிலிகோ என்னும் வெண்படை நோய் எதனால் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்ன என்பதைக் காண்போம்.

வெண்படை என்றால் என்ன?
விட்டிலிகோ என்னும் வெண்படை நோயானது, சருமம் அதன் நிறத்தை இழக்கும் நிலையாகும். பொதுவாக நிறமிழக்கப்பட்ட பகுதிகள் காலப்போக்கில் பெரிதாக ஆரம்பிக்கும். இந்நிலை உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். பொதுவாக முடி மற்றும் சருமத்தின் நிறமானது மெலனின் என்னும் நிறமி பொருளால் தீர்மானிக்கப்படுகிறது. எப்போது இந்த மெலனின் உற்பத்தி செய்யும் செல்களானது இறந்தோ அல்லது அதன் செயல்பாடு நிறுத்தப்படுகிறதோ, அப்போது தான் வெண்படை ஏற்படுகிறது. இந்த நோயானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

வெண்படைக்கான காரணங்கள்
வெண்படை நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள், பரம்பரை அல்லது குடும்ப வரலாறு ஆகியவற்றால் வரலாம். மேலும் தைராய்டு பிரச்சனை, நீரிழிவு நோய், வைட்டமின் பி12 குறைபாட்டினால் ஏற்படும் தீவிரமான இரத்த சோகையோடும் சேர்ந்து வரலாம்.

வெண்படை ஒரு தொற்றுநோயா?
வெண்படை தொற்றுநோய் அல்ல. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவது, அவர்களது பொருட்களை பயன்படுத்துவது போன்றவற்றால் வெண்படை பரவாது. இது தவிர, வெண்படை நோயால் பாதிக்கப்பட்டவர்களை திருமணம் செய்பவர்களுக்கும் இந்த நோய் வராது.

குணப்படுத்த முடியுமா?
வெண்படையை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றிற்கு சிகிச்சை எடுத்து வந்தால், அதனால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்தவோ, சில சமயங்களில் குணப்படுத்தவோ முடியும். எனவே உங்கள் சருமத்தில் ஏதேனும் வெள்ளைப்புள்ளிகள் தென்பட்டால், உடனே சரும மருத்துவரை அணுகுங்கள். அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் பயன்படுத்தி வாருங்கள்.

பரம்பரையாக வருமா?
குடும்பத்தில் யாருக்கேனும் வெண்படை நோய் இருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு வெண்படை வருவதற்கான வாய்ப்புள்ளது. அதற்காக நிச்சயம் வரும் என்று சொல்ல முடியாது. மேலும் பரம்பரையில் இப்பிரச்சனை யாருக்கும் இல்லாதவர்களுக்கும், பிற காரணங்களால் வெண்படை நோய் வரலாம்.



Click it and Unblock the Notifications
