For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சை நீர் Vs வெந்தய நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?

எலுமிச்சை நீர் மற்றும் வெந்தய நீர் என இரண்டுமே கலோரி குறைவான பானங்கள். இவற்றில் எடையைக் குறைக்கும் செயல்முறையை ஆதரிக்கும் அற்புதமான பண்புகள் நிறைந்துள்ளன.

|

எடை இழப்பு என்று வரும் போது, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் நிச்சயம் முக்கிய பங்கை வகிக்கின்றன. சரியான உணவு இல்லாமல், உடல் எடையைக் குறைப்பது என்பது எளிதில் அடைய முடியாத ஒன்று. உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான எடையைக் குறைக்க சரியான உணவுடன், பல்வேறு வகையான உடல் செயல்பாடுகளிலும் ஈடுபடுவது அவசியம்.

Lemon Water Vs Fenugreek Water: Which Is Better For Weight Loss

ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கு குறுக்குவழிகள் எதுவும் கிடையாது. ஆனால் உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையை வேகப்படுத்துவதற்கு ஒருசில தந்திரங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் நினைத்தவாறு விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம்.

எலுமிச்சை நீர் மற்றும் வெந்தய நீர் என இரண்டுமே கலோரி குறைவான பானங்கள். இந்த பானங்களைத் தயாரிப்பது என்பது மிகவும் எளிது மற்றும் அவற்றில் எடையைக் குறைக்கும் செயல்முறையை ஆதரிக்கும் அற்புதமான பண்புகள் நிறைந்துள்ளன. ஆனால் இவற்றில் எது மிகவும் சிறந்தது என்ற கேள்வியை பலரும் கேட்கலாம். ஆகவே இக்கட்டுரையில் இவற்றில் எது சிறந்தது, இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதைக் காண்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை இழப்புக்கு எலுமிச்சை நீர்

எடை இழப்புக்கு எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் மிகவும் பிரபலமான பானம். இதை சூடாகவோ அல்லது குளிர்ச்சியுடனோ குடிக்கலாம். எலுமிச்சையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே எலுமிச்சை நீரைக் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதுடன், உடலுக்குத் தேவையான சத்துக்களும் கிடைக்கின்றன.

எலுமிச்சை நீர் முழுமையை ஊக்குவிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இவை இரண்டுமே ஒருவரது உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது மிகவும் முக்கியமானதாகும். மேலும் எலுமிச்சை நீர் கலோரி குறைவான பானம் மற்றும் இது கலோரி அதிகமான பாயங்களான ஆரஞ்சு ஜூஸ் மற்றும் எனர்ஜி பானங்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.

பல ஆய்வுகள் அதிகளவு நீரைக் குடிப்பது ஒருவரது உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த உதவுவதாக கூறுகிறது. இந்த ஆய்வு தண்ணீரைப் பற்றியது என்றாலும், எலுமிச்சை நீரைக் குடித்தாலும் அதே பலனைப் பெறலாம். அதோடு எலுமிச்சையில் உள்ள இதர சத்துக்களால் பெறும் நன்மைகளையும் பெறக்கூடும்.

ஆகவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், நாள் முழுவதும் வெற்று நீரைக் குடிப்பதற்கு பதிலாக, எலுமிச்சை நீரைக் குடிப்பது நல்லது. முக்கியமாக எலுமிச்சை நீர் சுவையானதும் கூட.

எலுமிச்சை நீரைத் தயாரிப்பது எப்படி?

எலுமிச்சை நீரைத் தயாரிப்பது எப்படி?

எலுமிச்சை நீரைத் தயாரிக்கும் போது, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் பாதி நற்பதமான எலுமிச்சையைப் பிழிந்து கலந்து குடிக்க வேண்டும். வேண்டுமானால், சுவைக்காக அத்துடன் சிறிது புதினா இலைகள் மற்றும் தேனை சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.

எலுமிச்சை நீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

எலுமிச்சை நீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

48 கிராம் எலுமிச்சை சாறு பிழிந்த நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களாவன:

* கலோரிகள் - 10.6

* ஃபோலேட் - 9.6 mcg

* வைட்டமின் சி - 18.6 மிகி

* பொட்டாசியம் - 49.4 மிகி

* வைட்டமின் பி1 - 0.01 மிகி

* வைட்டமின் பி2 - 0.01 மிகி

* வைட்டமின் பி5 - 0.06 மிகி

எடை இழப்புக்கு வெந்தய நீர்

எடை இழப்புக்கு வெந்தய நீர்

வெந்தயமானது சர்க்கரை நோய் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ஒரு பழங்கால ஆயுர்வேத தீர்வாகும். தற்போதெல்லாம் வெந்தய நீர் உடல் எடையைக் குறைக்க உதவும் சிறப்பான பானங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த சிறிய விதையில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது பசியைக் கட்டுப்படுத்தவும், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கவும் உதவுகிறது. வெந்தய விதைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. மேலும் வெந்தய விதைகளில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்துள்ளதால், இது உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையை வேகப்படுத்தும். அதோடு அதில் உள்ள குறிப்பிட்ட பொருள், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

வெந்தய நீரைத் தயாரிப்பது எப்படி?

வெந்தய நீரைத் தயாரிப்பது எப்படி?

இரவு தூங்கும் முன் 10 கிராம் வெந்தய விதைகளை 2 கப் சுடுநீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாய் காலையில் நீரை வடிகட்டி, அந்நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, வெந்தய விதைகளை வாயில் போட்டுமென்று சாப்பிட வேண்டும்.

வெந்தய நீரில் உள்ள சத்துக்கள்

வெந்தய நீரில் உள்ள சத்துக்கள்

1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தில் உள்ள சத்துக்களாவன:

* கலோரிகள் - 35

* நார்ச்சத்து - 3 கிராம்

* புரோட்டீன் - 3 கிராம்

* கார்போஹைட்ரேட் - 6 கிராம்

* கொழுப்பு - 1 கிராம்

இவற்றில் எது சிறந்தது?

இவற்றில் எது சிறந்தது?

எலுமிச்சை நீர் மற்றும் வெந்தய நீர், இரண்டுமே உடல் எடையைக் குறைக்க சிறந்த பானங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது கடினமான ஒன்று. ஏனெனில், உடல் எடையைக் குறைப்பதைத் தவிர்த்து, வெந்தய விதைகளில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே வெந்தய விதைகளை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது.

ஒரு சிறப்பான வழி என்றால், இரண்டையுமே எடுப்பது தான். அதற்கு வெந்தய நீரை காலையில் எழுந்ததும் குடிக்கலாம் மற்றும் எலுமிச்சை நீரை நாள் முழுவதும் வெறும் தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக குடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lemon Water Vs Fenugreek Water: Which Is Better For Weight Loss

Lemon water and methi seeds are two such low-calories drinks that all the rage these days. They are easy to make and known for their amazing properties that can support the weight loss process. But a common question that arises is which one is better.
Desktop Bottom Promotion