Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
முட்டைகளைப் போலவே, பச்சைக் கோழியிலும் சால்மோனெல்லா உள்ளது. இது மீண்டும் சூடுபடுத்தும்போது, அவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.
வீடுகளில் நாம் அன்றாடம் அனைவரும் சமைக்கிறோம். ஆரோக்கியமான உணவுகளே வீட்டில் தயாரிக்கப்படுகிறது. வீடுகளில் சமைக்கும் உணவையே உட்கொள்ள நிபுணர்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள். வீடுகளில் நாம் சமைக்கும்போது, பெரும்பாலான நேரங்களில் உணவுகள் மிச்சப்படலாம். மீதமுள்ள உணவை பின்னரோ அல்லது மறுநாளோ நாம் சூடுபடுத்தி சாப்பிடுவோம். ஆனால், இந்த எஞ்சிய உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? ஆம், ஆய்வுகளின்படி, சில உணவுகள் மற்றும் பொருட்கள், மீண்டும் சூடுபடுத்தும் போது, தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை வெளியிடுகின்றதாகக் கூறப்படுகிறது.

அவை உங்கள் உடல்நலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சில சேர்மங்களை மீண்டும் செயல்படுத்துகின்றன. உங்களுக்கு நோய்வாய் ஏற்படுத்தக்கூடிய மீந்த உணவுகளைப் பற்றியும், அவை என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

முட்டை
தினமும் முட்டை சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். முட்டை எப்போதும் சால்மோனெல்லாவைக் கொண்டிருக்கின்றன. மேலும் முட்டைகளை சமைக்கப் பயன்படுத்தப்படும் மென்மையான வெப்பம் பாக்டீரியாவைக் கொல்லத் தவறிவிடும். எனவே, நீங்கள் அவற்றை பின்னர் சாப்பிட்டால், அவை உங்கள் உடலுக்குள் சில பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஆதலால், முட்டை சாப்பிட வேண்டுமென்றால், புதிதாக சமைத்து சாப்பிடுங்கள்.

பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைடுகள் நிறைந்துள்ளன. இந்த கலவை நிறைந்த உணவுகளை மீண்டும் சூடாக்கும்போது, அவை நைட்ரைட்டுகளாகவும் பின்னர் நைட்ரோசமைன்களாகவும் மாற்றப்படுகின்றன. இவை உங்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. ஆதலால், பீட்ருட்டை சமைக்கும்போது, நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கீரை
பொதுவாக கீரை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சில நேரங்களில் கீரை உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆம், கீரையில் நைட்ரேட் அதிகம் உள்ளது. அவை மீண்டும் சூடுபடுத்தும் போது, புற்றுநோயை உண்டாக்கும் நைட்ரோசமைனாக மாறி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆதலால், கீரையை மீண்டும் சூடுபடுத்தாமல் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு நல்லது.

கோழி
முட்டைகளைப் போலவே, பச்சைக் கோழியிலும் சால்மோனெல்லா உள்ளது. இது மீண்டும் சூடுபடுத்தும்போது, அவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். ஆதலால், சிக்கன் உணவுகளை நீங்கள் சமைத்திருந்தால், மீண்டும் சூடுபடுத்தாமல் சாப்பிடுங்கள். சிக்கனை மறுநாள் வைத்திருந்தும் சாப்பிட வேண்டாம். இவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரியளவில் தீங்கு விளைவிக்கும்.

குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய்கள்
ஆளிவிதை, ஆலிவ் எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெய்கள் போன்ற குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய்களில் ஒமேகா -3 கொழுப்புகள் நிறைந்துள்ளன. ஆனால் அவை மீண்டும் சூடுபடுத்தப்படும் போது, அவை நிலையற்றதாகவும், ஆரோக்கியமற்றதாகவும் மாறும். எனவே, இந்த எண்ணெய் உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆரோக்கியமானது இல்லை. ஆதலால், அவற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட வேண்டாம்.



Click it and Unblock the Notifications