Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது..
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க...
Kanchipuram Kovil Idli With Podi Recipe In Tamil: தினமும் காலையில் ஒரே மாதிரியான சுவையில் டிபன் செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் ருசியான டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இட்லி ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் காஞ்சிபுரம் கோவில் இட்லியை ஒருமுறை செய்து கொடுங்கள். இந்த இட்லிக்கு இட்லி பொடி அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

உங்களுக்கு இந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி மற்றும் இட்லி பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஞ்சிபுரம் கோவில் இட்லி மற்றும் இட்லி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
காஞ்சிபுர இட்லிக்கு..
* பச்சரிசி - 1 கப்
* இட்லி அரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1 கப்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 1/4 கப்
* உடைத்த முந்திரி - தேவையான அளவு
* கொரகொரவென்று பொடித்த மிளகு தூள் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
இட்லி பொடிக்கு...
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* கடலைப் பருப்பு - 1/3 கப்
* எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வரமிளகாய் - 10
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம்
ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நீரில் 2 முறை கழுவிக்
கொண்டு, பின் நீரை ஊற்றி 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 5 மணிநேரம் கழித்து, ஊற வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து,
கொரகொரவென்று அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து 4-5
மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* 5 மணிநேரம் கழித்து மாவை நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய்யை ஊற்றி
சூடானதும், முந்திரியை சேர்த்து ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் ஒன்றிரண்டாக பொடித்த மிளகுத் தூள், சீரகம்,
பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய கறிவேப்பிலை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை ப்ரை செய்து இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள மாவில் ப்ரை செய்த முந்திரி, 1 டீஸ்பூன்
சுக்கு பொடி மற்றும் வறுத்த பொருட்களை நெய்யுடன் -சூடாக இருக்கும்
போதே சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மாவானது கெட்டியாக இட்லி
மாவு போன்று இருக்க வேண்டும்.
* அடுத்து இட்லி பாத்திரத்தினுள் வைக்குமாறான குட்டி குட்டி
கிண்ணங்களை எடுத்து, அதனுள் சிறிது நெய்யை தடவி, கலந்து வைத்துள்ள
மாவை பாதி பாதியாக ஊற்றி, இட்லி பாத்திரத்தினுள் வைத்து 10 நிமிடம்
வேக வைத்து எடுக்க வேண்டும்.
* இட்லி வெந்ததும், அதை இறக்கி ஓரளவு குளிர்ந்த பின், கத்தியால்
முனைப்பகுதிகளை கீறிவிட்டு, பின் தலைகீழாக கவிழ்த்து தட்டினால்,
காஞ்சிபுரம் இட்லி தயார்.
* அடுத்து இட்லி பொடி தயாரிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சேர்த்து நன்கு பொன்னிறமாக
ப்ரை செய்ய வேண்டும்.
* அதன் பின் அதில் எள்ளு, கறிவேப்பிலை, வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு
மற்றும் பெருங்காயத் தூள் சேர்டத்து நன்கு வறுத்து இறக்கி, மிக்சர்
ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்தால், இட்லி பொடி தயார்.



Click it and Unblock the Notifications