Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது..
August 2026 Horoscope: ஜூலை மாத இறுதியில் உள்ளோம். இன்னும் சில நாட்களில் 2026 ஆம் ஆண்டின் 8 ஆவது மாதமான ஆகஸ்ட் மாதத்தில் நுழையவுள்ளோம். பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய நம்பிக்கையையும், புதிய வாய்ப்புக்களையும் கொண்டு வரும். அந்த வகையில் 2026 ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சிகளால் சில ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக முக்கியமான மாதமாக இருக்கப் போகிறது.

அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்புக்கள் போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், வெற்றி என்பது அதிர்ஷ்டத்தை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக உங்கள் கடின உழைப்பு, தயாரிப்பு மற்றும் சரியான நேரத்தில் எடுக்கும் முடிவுகளையும் சார்ந்தது. இப்போது 2026 ஆகஸ்ட் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். நீண்ட காலமாக வேலையை மாற்றும் எண்ணத்தைக் கொண்டிருந்தால், இம்மாதத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் உங்கள் தொடர்புகளை அதிகரிப்பதும், தன்னம்பிக்கையைப் பேணுவதும் நன்மை பயக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது தொழிலில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். சிலருக்கு புதிய விஷயங்களை கற்று கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு எதிர்பார்த்த சம்பளத்துடன் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். இம்மாதத்தில் அவசரப்படாமல், நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது அதிகப் பயனளிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது ஊட்டமளிக்கும் மாதமாக இருக்கும். இம்மாதத்தில் தலைமைத்துவத் திறன்களையும் கடின உழைப்பையும் மேலதிகாரிகள் கவனிப்பார்கள். பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் வேலையின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இம்மாதத்தில் சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உங்கள் எதிர்காலத்தை வலுப்படுத்தும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், இம்மாதம் சாதகமாக இருக்கும். வேலை மாற நினைப்பவர்கள் முன்பை விட சிறந்த வாய்ப்புகளையும் நிதிப் பலன்களையும் பெறுவார்கள். மொத்தத்தில் இம்மாதத்தில் பொறுமையும் ஒழுக்கமும் உங்கள் மிகப்பெரிய பலங்களாகத் தொடரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


