Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம்
உலகம் முழுவதும் மாறாத சில விஷயங்கள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் மும்பை, பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும், பரபரப்பான சாலைகளில் நீண்ட வரிசைகளில் சிக்கிக்கொள்ளும் பயணிகள் மன அழுத்தத்திற்கும் நேர விரயத்திற்கும் ஆளாக நேரிடுகிறது.

உலகின் அனைத்து நாடுகளிலும் போக்குவரத்து நெரிசல்களை சமாளிக்க டிராபிக் சிக்கனல்கள் பயன்படுகின்றன. டிராபிக் சிக்னல் இல்லாமல் ஒரு நாளை கூட மக்களால் சமாளிக்க முடியாது. ஆனால் உலகின் ஒரு நாட்டில் டிராபிக் சிக்னலே இல்லையென்றால் உங்களால் நம்ப முடியுமா? அனைத்திற்கும் மேலாக டிராபிக் சிக்னல் இல்லாமலேயே இந்த நாட்டில் போக்குவரத்து மிகவும் சீராக உள்ளது.
டிராபிக் சிக்னலே இல்லாத நாடு எது?
உலகிலேயே போக்குவரத்து விளக்குகள் எதுவும் இல்லாத ஒரே நாடு நமது அண்டை நாடான பூட்டான் ஆகும். இந்த நாட்டில் ஒரு போக்குவரத்து விளக்கு கூட இல்லை. இமயமலைப் பகுதியில் தினசரி மிக அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களில் ஒன்றான அதன் தலைநகர் திம்புவில்கூட, சிக்னல்களையோ, தானியங்கி ஜங்ஷன்களையோ அல்லது சிவப்பு-பச்சை விளக்கு சுழற்சிகளையோ காண முடியாது. மாறாக, ஒரு பூத்தில் காவலர் தனது கைகளால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதையே அங்கு காணலாம்.
பூட்டானில் ஏன் டிராபிக் சிக்னலே இல்லை?
பூட்டான் டிராபிக் சிக்னலை சோதித்துப் பார்த்து அது முன்னேற்றம் அல்ல என்று கைவிட்டு விட்டது. ஒரு சாதாரண போக்குவரத்து விளக்கை நிறுவ நு 400,000 முதல் நு 500,000 வரை செலவாகும், அதனுடன் தொடர்ச்சியான பராமரிப்பும் தேவைப்படும். ஆனால் செலவு மட்டுமே இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கவில்லை. திம்புவில் உள்ள ஒரு முக்கிய ஜங்ஷனில் இந்த விளக்குகள் சோதனை செய்யப்பட்டபோது, பயிற்சி பெற்ற அதிகாரியை விட அவை பயணிகளுக்கு அதிக இடையூறாக இருந்தன. அதனால் அவை அகற்றப்பட்டன.
இந்த நாட்டில் போக்குவரத்து விளக்குகள் இல்லாததற்கு வேறுசில நடைமுறை காரணங்களும் உள்ளன. போக்குவரத்து சிக்னல்கள், திடீரென பிரேக் பிடிப்பதால் ஏற்படும் பின் மோதல்களை அதிகரிக்கின்றன. World Economic Forum, சிக்னல் பொருத்தப்பட்ட சந்திப்புகளை அதிக மாசுபாடு உள்ள இடங்களாக அடையாளம் கண்டுள்ளது. மேலும், கணிக்க முடியாத மின்சார விநியோகம் கொண்ட மலைப் பகுதிகளில், சிக்னல் செயலிழப்பு என்பது, போக்குவரத்தை தடுப்பதற்குப் பதிலாக குழப்பத்தையே ஏற்படுத்தியது. எனவே பூட்டான் இந்த நடைமுறையை கைவிட்டது.
போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமல் திம்புவில் போக்குவரத்து எவ்வாறு சீராக உள்ளது?
திம்புவின் மிக முக்கியமான ஜங்சன்களில், ரவுண்டானாக்களின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறிய, அலங்கரிக்கப்பட்ட ஒரு கூண்டுக்குள் போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் இருப்பதைக் காணலாம். அவர்கள் சுழற்சி முறையில், இரவு-பகல் பாராமல் அனைத்து வாகனப் போக்குவரத்தையும் தங்கள் கைகளால் சைகை செய்து ஒழுங்குபடுத்துகிறார்கள்.
திம்புவில் இந்த முறை சிறப்பாகச் செயல்படுகிறது. திம்புவில் போக்குவரத்து தடையின்றி நகர்கிறது. மேலும், வெள்ளை நிறக் கையுறைகளை அணிந்து, துல்லியமாகவும் சில சமயங்களில் நடனமாடியும் சைகை செய்யும் இந்தக் காவலர்களே ஒரு தனித்துவமான ஈர்ப்பாகவும் மாறியுள்ளனர்.
பூட்டானில் மட்டும்தான் போக்குவரத்து விளக்குகள் இல்லையா?
இந்த கேள்விக்கு பதில் என்பது ஆம்தான். உலகளவில் சில சிறிய நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் குறைந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்து விளக்குகள் இல்லாத நிலையில், வளர்ந்து வரும் ஒரு நகர்ப்புற மையமான தனது தலைநகரம், அவை இல்லாமல் இயங்க வேண்டும் என்று ஒரு திட்டமிட்ட கொள்கை முடிவை எடுத்த ஒரே இறையாண்மை கொண்ட நாடு பூட்டான் மட்டுமே. ஏனெனில் பூட்டானில் வளர்ச்சி என்பது வெறும் செயல்திறனை மட்டும் பார்க்காமல், நல்வாழ்வு, பாரம்பரியம் மற்றும் நிலைத்தன்மை ஆகிய கண்ணோட்டங்களின் வழியாகவே பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications

