Latest Updates
-
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Pudina Vetrilai Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் ரசம் செய்வீர்களா? பொதுவாக ரசம் செரிமானத்திற்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். அதுவும் அஜீரண கோளாறால் அதிகம் சிரமப்படுபவர்கள் சாதாரண ரசத்திற்கு பதிலாக புதினா மற்றும் வெற்றிலை கொண்டு ரசம் செய்யும் போது, செரிமான பிரச்சனையும் தீரும், சுவையும் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக இந்த ரசத்தை மற்ற நாட்களில் செய்து சாப்பிடுகிறீர்களோ இல்லையோ, அசைவ உணவுகளை சமைக்கும் நாட்களில் செய்து சாப்பிடுங்கள். இதனால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு இந்த புதினா வெற்றிலை ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா வெற்றிலை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு...
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 10 பல்
* வெற்றிலை - 1
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (அரைத்தது)
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை 3 கப் நீரில் ஊற
வைத்து, பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், புதினா, கொத்தமல்லி,
கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு மற்றும் வெற்றிலையை சேர்த்து கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள் மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் புளிச்சாறு
மற்றும் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து, 1 கொதி வந்ததும், அதை இறக்கினால், சுவையான புதினா வெற்றிலை
ரசம் தயார்.



Click it and Unblock the Notifications
