விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.

Posted By:

Ganesh Chaturthi Special Inipu Pidi Kozhukattai Recipe In Tamil: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது. இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, லட்டு, சுண்டல் என பலவிதமான பலகாரங்களை செய்து படைத்து வழிபாடு செய்வோம். இதில் பலர் கொழுக்கட்டையைத் தான் விநாயகருக்கு செய்து படைப்பார்கள்.

Ganesh Chaturthi Special Recipes How To Make Inipu Pidi Kozhukattai In 15 Minutes

இந்த கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிடிக்கொழுக்கட்டை. இந்த வகை கொழுக்கட்டையை செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இது 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். சொல்லப்போனால் இந்த வகை கொழுக்கட்டைக்கு பக்குவம் எதுவும் தேவையில்லை.

உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இனிப்பு பிடிக்கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி மாவு - 1 கப்
* வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* நெய் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 மூடி (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியில் 1 கப் பச்சரிசி மாவை எடுத்துக் கொண்டு, நன்கு வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு வறுத்த மாவை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இந்த வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, அத்துடன் 2 சிட்டிகை உப்பு மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* வெல்ல நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்த மாவை சேர்த்து நன்கு வெல்லப்பாகுவில் சேருமாறு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* மாவானது நன்கு திரண்டு வெந்து வந்ததும், அதை இறக்கி கைபொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் நன்கு மென்மையாக பிசைந்து விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்த்து கைகளால் பிசைய வேண்டும்.
* அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து பிடிக்கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி கொழுக்கட்டையை வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தினுள் இட்லித் தட்டை வைத்து மூடி அடுப்பில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான இனிப்பு பிடிக்கொழுக்கட்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 9, 2026, 18:54 [IST]
Desktop Bottom Promotion