Latest Updates
-
நடிகை சமந்தாவிற்கு பிடித்த பிஸிபேலேபாத் - எப்படி செய்யணும் தெரியுமா? -
பாம்பு இரத்தத்தை குடிக்கும் பழக்கமுள்ள நாடுகள் - இந்த வினோத பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்களை சுத்தமா வெச்சுக்கணுமா? அப்ப இந்த பானங்களை குடிங்க போதும்! -
ஹரா பரா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏன் அனைத்து நாட்டு வீரர்களும் வெள்ளை நிற ஜெர்சியை மட்டும் அணிகிறார்கள் தெரியுமா? -
ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
பூஜைக்கு வாங்குன பொரி நமத்துப் போச்சா? அப்ப தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
அக்டோபர் 23, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்..
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நவகிரகங்களில் சூரியபகவான் கிரகங்களின் அதிபதியாக கருதப்படுகிறார். எனவே சூரியனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதிகாரம், வலிமை மற்றும் ஆற்றலின் அதிபதியான சூரியன், 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி அன்றுகிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்குள் பெயர்ச்சி அடைந்து, 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி வரை அதேநிலையில் நீடித்திருக்கப் போகிறார்.
30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சூரியன் இந்த காலத்தில் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். தற்போது கன்னி ராசிக்குள் நுழையும் சூரியன் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
இந்த பெயர்ச்சியின் போது சூரியன் மிதுன ராசியின் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். இந்த கிரக மாற்றத்தால் பணியிடத்தில் நிலவிய சிக்கல்கள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்குப் சரியான வேலைவாய்ப்புகள் அமையலாம். இந்த காலகட்டத்தில் படிப்பு விஷயங்களில் இருந்த தடைகள், குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். வேலையில் அவர்களின் செயல்திறன் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும்.
அவர்களின் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் பலன் கிடைக்கும். பணப்பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பணக் கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உறவுகளில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும், வாழ்க்கைத்துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்குள் இப்போது சூரியன் நுழையப்போகிறார். இந்த காலகட்டத்தில், கன்னி ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றியைப் பெறலாம். அவர்களுக்கு குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும், மேலும் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். அவர்கள் மற்றவர்களுக்கு கடனாகக் கொடுத்த பணத்தை மீட்டெடுக்கலாம்.
அவர்கள் வாழ்க்கைத்துணையுடனான உறவு மகிழ்ச்சியானதாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு, மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவு மிகவும் நன்றாக இருக்கும். இது அவர்களின் வேலையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்
சூரியன் விருச்சிக ராசியின் பதினொன்றாம் வீட்டிற்குள் நுழையப்போகிறார். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை தடைப்பட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் எட்டாவது வீட்டிற்குள் சூரியன் நுழையப்போகிறார். இந்த வீடு நிதி வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நன்மை பயக்கும். கும்ப ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் பல வருமான ஆதாரங்களுக்கான வாய்ப்புகளை அனுபவிக்கலாம்.
சொத்து அல்லது வாகனங்களை வாங்குவதற்கு இந்த காலம் சிறந்தது, மேலும் தொழில் வல்லுநர்கள் தங்கள் தொழிலில் சீரான முன்னேற்றத்தைக் காணலாம். சக ஊழியர்களின் ஆதரவும், மகிழ்ச்சியான பணிச்சூழலும் உற்பத்தித்திறனையும், திருப்தியையும் அதிகரிக்கும். மகர ராசிக்காரர்கள் குடும்ப நல்லிணக்கம் மற்றும் தனிப்பட்ட மனநிறைவால் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான காலகட்டத்தை எதிர்பார்க்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

