Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உலக வரலாற்றில் சில நாடுகள் மிகவும் மர்மமானவையாக உள்ளன. அந்த நாடுகள் வலிமை குறைந்தவையாக இருந்தாலும் மிகப்பெரிய பேரரசுகள் கூட அந்த நாடுகளிடம் தோல்வியை தழுவிய பல் வரலாறு உள்ளது. அந்த வகையில் தன்னுடைய மர்மமான நிலப்பரப்பில் பழங்கால ரகசியங்களைத் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் ஒரு நாடு உள்ளது. அந்த நாட்டை ஆள்வதற்காக படையெடுத்த வலிமைமிக்க படைகள் அனைத்தும் தோல்வியையே தழுவின. இங்குள்ள மலைச்சிகரங்கள், கடுமையான வானிலை மற்றும் அங்குள்ள மக்களின் போர்திறன் ஆகியவை அந்த இடத்தை வெல்வதை சாத்தியமற்றதாக மாற்றிவிட்டது.

பல பேரரசுகள் இந்த நாட்டிடம் தோல்வியை தழுவியதால் இது 'பேரரசுகளின் கல்லறை' என்று அழைக்கப்படுகிறது. அந்த நாடுதான் ஆப்கானிஸ்தான். பல வலிமைமிக்க நாடுகள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற முயன்றும், எவராலும் அங்கு தொடர்ந்து நிலைத்திருக்க முடியவில்லை என்பதாலேயே இந்த பெயர் அந்த நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரலாறு முழுவதும் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு பெரும் பேரரசுகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தன, ஆனால் அந்த நாடுகள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இறுதியில் அவை அங்கிருந்து வெளியேறவே நேரிட்டது. இந்த பதிவில் ஆப்கானிஸ்தான் ஏன் 'பேரரசுகளின் கல்லறை' என்று அழைக்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆப்கானிஸ்தான் ஏன் பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படுகிறது?
ஆப்கானிஸ்தானின் தனித்துவம், அந்நியப் படையெடுப்பாளர்களை வீழ்த்திய அதன் நீண்ட வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதன் கரடுமுரடான மலைகளும் தொலைதூரப் பள்ளத்தாக்குகளும், பிற நாட்டின் படைகள் நாட்டில் நடமாடுவதையோ அல்லது நாட்டைக் கட்டுப்படுத்துவதையோ கடினமாக்குகின்றன. இந்தக் கடினமான புவியியல் அமைப்புடன், ஆப்கானிய மக்கள் தங்கள் நிலத்தைப் பாதுகாக்க எப்போதும் கடுமையாகப் போராடி வந்துள்ளனர். இந்த இயற்கைச் சவால்களும் ஆப்கானிய மக்களின் எதிர்ப்பும் இணைந்ததன் விளைவாக, பல பேரரசுகள் ஆப்கானிஸ்தானைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் வந்து சென்றுள்ளன.
பிரிட்டிஷ் படையெடுப்பும் ஆப்கானிஸ்தானும்
19-ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் பேரரசு ஆப்கானிஸ்தானைக் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முயற்சி செய்து போர் தொடுத்தது. அப்பகுதியில் ரஷ்யா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதை விரும்பாத பிரிட்டிஷார், ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினர். வெவ்வேறு காலகட்டங்களில், அவர்கள் ஆப்கானிஸ்தானில் மூன்று போர்களை நடத்தினர், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தங்கள் நிலப்பரப்பை நன்கு அறிந்திருந்ததோடு, தங்கள் சுதந்திரத்தைக் காக்கத் தீவிரமாகப் போராடிய ஆப்கானியப் போராளிகளைப் பிரிட்டிஷாரால் இறுதிவரை தோற்கடிக்க முடியவில்லை.
சோவியத் யூனியனின் தோல்வி
1980-களில், கம்யூனிச ஆட்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. இந்தப் போர் மிகவும் எளிதானதாக இருக்கும் என்று அவர்கள் கருதின, ஆனால், அவர்களின் கணிப்பு முற்றிலும் தவறாக இருந்தது. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட தரப்பினரின் உதவியுடன், 'முஜாஹிதீன்' என்று அழைக்கப்பட்ட ஆப்கானியப் போராளிகள் சோவியத் படைகளை எதிர்த்துப் போராடினர். ஏறக்குறைய 10 ஆண்டுகள் நீடித்த போரில் பெரும் இழப்புகளைச் சந்தித்த பிறகு, 1989-ல் சோவியத் ஒன்றியம் அங்கிருந்து வெளியேறியது.
அமெரிக்கா சந்தித்த சவால்கள்
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த மோசமான தாக்குதலுக்குக் காரணமான அல்-கொய்தா தலைவர்களைக் கண்டறியவும் தலிபான் அமைப்பை அழிக்கவும் 2001-ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. மிகக் குறுகிய காலத்திலேயே அமெரிக்கா தலிபான்களை எளிதாக வீழ்த்தியது, ஆனால் அந்த நிகழ்வு ஆப்கானிஸ்தானின் நிலைமையை முற்றிலும் மாற்றி அமைத்தது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு, தலிபான்களின் எழுச்சியை எதிர்த்துப் போராடியபடியே, அந்நாட்டை மறுகட்டமைப்பு செய்யவும் நிலையான அரசாங்கத்தை நிறுவ உதவவும் அமெரிக்கா முயன்றது. பல பில்லியன் டாலர்களைச் செலவிட்டும், மிகப்பெரிய படையை அனுப்பியும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இறுதியில் 2021-ல் அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது, அதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவது ஏன் கடினமானது?
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றுவது மிகவும் கடினமாக இருக்க முக்கிய காரணம் அதன் புவியியல் அமைப்புதான். ஆப்கானிஸ்தானில் மலைகள், பாலைவனங்கள் மற்றும் பயணம் செய்வதற்கு மிகவும் கடினமான தொலைதூரப் பகுதிகள் உள்ளன. கடும் குளிர்காலம் மற்றும் வெப்பமான கோடைக்காலம் என அங்குள்ள கடினமான வானிலை சூழல், வெளிநாட்டுப் படைகள் நீண்ட காலம் அங்கு நிலைத்திருப்பதைச் சவாலானதாக மாற்றுகிறது.
புவியியல் காரணங்கள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் தாஜிக் மற்றும் ஹசாரா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன. இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கலாச்சாரங்களையும் மரபுகளையும் கொண்டவர்கள். பெரும்பாலும் இவர்களுக்கு இடையே இணக்கமான சூழல் இருப்பதில்லை. இது நாட்டில் பிளவை உருவாக்குவதுடன், ஒரு ஒற்றை அரசாங்கத்தால் நாட்டை ஒருங்கிணைத்து நிர்வகிப்பதையும் சாத்தியமற்றதாக்குகிறது.



Click it and Unblock the Notifications

