Latest Updates
-
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Mars Transit In Pushya Nakshatra On 24 September 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாகவும், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுபவர் செவ்வாய்.

மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் செப்டம்பர் 24 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது செவ்வாய் பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான்.
செவ்வாய் சனி பகவானின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால், நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும் திறன் மேம்படும், நிதானமாக எதையும் யோசித்து செய்யும் திறன் அதிகரிக்கும். இந்த பூச நட்சத்திரத்தில் செவ்வாய் அக்டோபர் 17 ஆம் தேதி வரை இருப்பார். இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நண்பர்களின் முழு ஆதரவு கிடைப்பதோடு, அவர்கள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
சிம்மம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிணைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். இதனால் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கன்னி
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சவால்களை எதிர்கொண்டாலும், அதை திறம்பட சமாளிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
தனுசு
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பெற்றோர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
