Latest Updates
-
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா?
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்!
Venus Transit In Swati Nakshatra On 11 September 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் சுக்கிரன் செப்டம்பர் 11 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த பெயர்ச்சியின் போது சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் அக்டோபர் 24 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைவார்.
சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான முழு பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். தடைபட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் உகந்ததாக இருக்கும்.
துலாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கடனால் சிரமப்பட்டு வந்தால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். கலை, ஊடகம், ஃபேஷன் துறையில் இருப்பவர்கள் பெரிய அளவில் பெற்றியைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய திட்டங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
கும்பம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறக்கூடும். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கவாம். பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
