Latest Updates
-
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
Kothamalli Paruppu Kadayal Recipe in Tamil: மதியம் எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று ஒரேமாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் சாதத்துக்கு அட்டகாசமாகவும் இருக்கும் ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் அதை வைத்து ஒரு அட்டகாசமான கடையல் செய்யுங்க.
கொத்தமல்லியை வைத்து பொதுவாக சட்னிதான் செய்வோம், ஆனால் கொத்தமல்லியை வைத்து பருப்புடன் சேர்த்து சூப்பரான குழம்பு செய்யலாம். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மட்டுமின்றி தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் சூப்பர் சைடிஷாக இருக்கும். இந்த கொத்தமல்லி பருப்பு கடையல் ஆந்திராவில் மிகவும் பிரபலமானதாகும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி பருப்பு கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/4 கப் துவரம் பருப்பு
- 2 பூண்டுப் பல்
- 1/4 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 1/4 கப் நறுக்கிய தக்காளி
- 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 3/4 கப் தண்ணீர்
- ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லித் தழை (தண்டுகளுடன்)
- தேவையான அளவு உப்பு
தாளிக்கத் தேவையானவை:
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 பூண்டுப் பல்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 5 நறுக்கிய சின்ன வெங்காயம்
- 1 வர மிளகாய்
- சிறிது நறுக்கிய கொத்தமல்லித் தழை
செய்முறை:
- துவரம் பருப்பைக் கழுவி, முக்கால் கப் தண்ணீரில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.
- ஊறவைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தண்டுகளுடன் கூடிய கொத்தமல்லி இலைகள் மற்றும் பருப்பு ஊறவைத்த தண்ணீர் ஆகியவற்றை ஒரு பிரஷர் குக்கரில் சேர்க்கவும். உப்பு சேர்க்க வேண்டாம்.
- 4 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பிரஷர் தானாகவே வெளியேறும் வரை காத்திருக்கவும்.
- குக்கரைத் திறந்து உப்பு சேர்த்து, ஒரு கரண்டியால் பருப்பு குழைந்து மென்மையாகும் வரை நன்றாக மசிக்கவும்.
- ஒரு சிறிய வாணலியில் நெய்யைச் சூடாக்கவும். கடுகு சேர்த்து, அது வெடிக்கும் வரை காத்திருக்கவும். பிறகு சீரகம் சேர்க்கவும்.
- அதன்பின் நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதன்பின் அடுப்பை அணைத்துவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துக் கிளறவும்.
- இந்த தாளிப்பை மசித்து வைத்துள்ள பருப்பில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். அவ்வளவுதான் சூப்பரான கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி.
- இதை சூடான சாதத்தில் போட்டு நெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
