எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க..

Besan For Glowing Skin In Tamil: பல தலைமுறைகளாக சரும பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் கடலை மாவு. ஏனெனில் இந்த கடலை மாவில் சரும அமைப்பை மேம்படுத்தும், நச்சுக்களை அகற்றும் மற்றும் சருமத்திற்கு பளபளப்பைத் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதுவும் இதில் உள்ள எக்ஸ்போலியேட்டிங் பண்புகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், சருமத்துளைகளில் உள்ள அடைப்புக்களை நீக்கவும், முகப்பருக்களைத் தடுக்கவும் உதவுகின்றன. இது தவிர இதில் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும் திறன் இருப்பதால், எண்ணெய் பசை சருமத்தினருக்கும், காம்பினேஷன் சருமத்தினருக்கும் ஏற்ற ஒரு அற்புதமான நேச்சுரல் சரும பராமரிப்பு பொருளாகும்.

How To Get Glowing Skin Using Besan Easy DIY Methods

இப்படிப்பட்ட கடலை மாவை தனியாகவோ அல்லது பிற பொருட்களுடனோ கலந்து சருமத்திற்கு பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தும் போது சருமத்தின் பொலிவு மேம்படும் மற்றும் சருமம் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது உங்கள் முகம் பொலிவிழந்து இருப்பதாக உணர்கிறீர்களா? கெமிக்கல் இல்லாத இயற்கை பொருட்களைக் கொண்டு உங்கள் சரும அழகையும், பொலிவையும் மேம்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் கடலை மாவை பின்வருமாறு பயன்படுத்துங்கள்.

1. பொலிவான சருமத்தைப் பெற...

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் அல்லது காய்ச்சாத பாலை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

2. முகத்தில் உள்ள கருமையை நீக்க..

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

3. சரும வறட்சியைத் தடுக்க...

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.

4. எண்ணெய் பசை சருமத்தினருக்கு...

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

5. இறந்த செல்லை நீக்குவதற்கு...

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு அல்லது ஓட்ஸ் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை ஈரமான முகத்தில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

6. முகப்பருவை தடுக்க...

* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, September 9, 2026, 20:13 [IST]
Desktop Bottom Promotion