கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை அடிக்கடி மாற்றுகின்றன. ஒவ்வொரு 30 நாட்களுக்கும் தனது கிரகத்தை மாற்றிக்கொள்ளும் சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் நுழையப்போகிறார். வேத ஜோதிடத்தில், சூரியன் அதிகாரம், தன்னம்பிக்கை, தலைமைத்துவம், ஆற்றல், அங்கீகாரம் மற்றும் உறுதியான முடிவுகளை எடுக்கும் திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.

Sun Transit in Virgo on September Bring Tough Time To These Zodiac Signs

சூரியன் புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்குள் நுழைவதால் ஜோதிடரீதியாக இது முக்கியமான கிரக மாற்றமாகக் கருதப்படுகிறது. சூரியனின் இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளித்தாலும் சில ராசிக்காரர்கள் தடைகளையும், சவால்களையும் சந்திக்க நேரிடும். இது அவர்களின் தொழில் வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்தும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் ஆறாவது வீட்டிற்குள் சூரியன் நுழையப்போகிறார். இந்த கிரக மாற்றத்தால் அவர்களின் பணிச்சுமை இப்போது அதிகரிக்கலாம், ஆனால் குறைவான ஆதரவு கிடைக்கக்கூடும், இதனால் அவர்கள் பாதகமான சூழலை அனுபவிக்கக்கூடும். இதனால் அவர்கள் வேலையை விடுவது பற்றி சிந்திக்கலாம், ஆனால் அவசரப்பட வேண்டாம். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளால் அவர்கள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.

திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் பயணங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை விபத்துக்கள் அல்லது இழப்புகளை ஏற்படுத்தும். வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

சிம்மம்

சிம்ம ராசியின் ஐந்தாவது வீட்டிற்குள் சூரியன் தற்போது நுழையப்போகிறார். இதனால் நீங்கள் சில எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். பெரும்பாலும் உங்களுக்கு எதிர்பாராத பல பிரச்சினைகள் ஏற்படும்.சாதகமற்ற சூழ்நிலைகளால் விருச்சிக ராசிக்காரர்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில், அவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மேலும் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும்.

அவர்களுக்குகள் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். மொத்தத்தில் அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனுசு

சூரியன் தனுசு ராசியின் பத்தாவது வீட்டிற்குள் நுழையப்போகிறார். இதன் விளைவாக, அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பல சூழ்நிலைகளில், இது மோதலுக்கு கூட வழிவகுக்கும். பொறுப்புகளை கையாளுவதில் மிகவும் கவனமாக இருங்கள். அவர்கள் இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டம் நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, September 9, 2026, 23:29 [IST]
Desktop Bottom Promotion