Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
டயட்டில் இருக்கும் போது சப்பாத்தியில் நெய் தடவி சாப்பிடலாமா? கூடாதா?
டயட் என்ற ஒன்றை பின்பற்ற ஆரம்பித்தோமோ, அப்போது இருந்து உணவில் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கும் பழக்கத்தை நிறுத்த ஆரம்பித்துவிட்டோம். உண்மையிலேயே டயட்டில் இருந்தாலும் நெய்யை உணவில் சேர்க்கலாமா? கூடாதா?
நெய் வீட்டின் சமையலறையில் இருக்கும் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாகும். முந்தைய காலத்தில் நெய் அன்றாட உணவில் சேர்க்கப்பட்டு வந்தது. பலருக்கும் சம்பார் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றுடன் நெய் சேர்த்து சாப்பிட பிடிக்கும். இன்னும் சிலருக்கு சப்பாத்தியில் நெய் தடவி சாப்பிட பிடிக்கும்.

ஆனால் எப்போது உடல் பருமன் பிரச்சனையால் டயட் என்ற ஒன்றை பின்பற்ற ஆரம்பித்தோமோ, அப்போது இருந்து உணவில் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கும் பழக்கத்தை நிறுத்த ஆரம்பித்துவிட்டோம். இதற்கு அவற்றில் உள்ள கொழுப்புக்கள் காரணமாக இருக்கலாம். உண்மையிலேயே டயட்டில் இருந்தாலும் நெய்யை உணவில் சேர்க்கலாமா? கூடாதா? இந்த கேள்விக்கான பதிலை இக்கட்டுரையில் காண்போம்.

நெய்யை சப்பாத்தியில் தடவி சாப்பிடலாமா?
ஊட்டச்சத்து நிபுணரான ஆஞ்சல் சோகானி தனது இடுகை ஒன்றில் இதுக்குறித்து கூறியிருந்தார். அது என்னவெனில், சப்பாத்தியில் நெய் தடவி சாப்பிடும் பழக்கம் மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். ஆனால் அது அந்த நெய்யை மிதமான அளவில் பயன்படுத்தினால் மட்டும் தான். உண்மையில் ஒருவர் நெய்யை தங்களின் உணவில் மிதமான அளவில் தினந்தோறும் சேர்த்து வந்தால், அது ஒட்டுமொத்த உடலிலும் மாயங்களைப் புரியும். ஆனால் பலர் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறேன் என்று நெய்யை உணவில் இருந்து முற்றிலும் அகற்றுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி செய்யக்கூடாது.

ஒரு நாளைக்கு எவ்வளவு நெய் சாப்பிடுவது நல்லது?
ஊட்டச்சத்து நிபுணரான ஆஞ்சல் சோகானியின் கூற்றுப்படி, ஒரு சப்பாத்திக்கு ஒரு சிறிய டீஸ்பூன் நெய் சேர்ப்பது நல்லது. எந்த ஒரு உணவுப் பொருளும் அளவுக்கு அதிகமானால் அது தீங்கை விளைவிக்கும். இது நெய்க்கும் பொருந்தும். எனவே அளவாக நெய்யை உட்கொண்டு அதன் நற்பலனைப் பெற முயற்சி செய்யுங்கள்.

நெய்யின் ஆரோக்கிய நன்மைகள்
நெய்யில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் மற்றும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. நெய்யானது உடல் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெய்யை சப்பாத்தியில் தடவி சாப்பிடும் போது, அது சப்பாத்தியின் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவைக் குறைக்க உதவுகிறது.
மேலும் நெய்யை உணவில் சேர்க்கும் போது, அது மன நிறைவாக உணர வைக்கிறது. இது தவிர நெய்யில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன. இது தான் எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதிலும், ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை உடலில் பராமரிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. முக்கியமாக இது ப்ரீ ராடிக்கல்களின் உற்பத்தியைத் தடுத்து, செல்களின் செயல்பாடுகள் சேதமடைவதைத் தடுக்கிறது.
அது மட்டுமின்றி, செரிமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. கண் பார்வையை மேம்படுத்துகிறது. எலும்புகளின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கிறது. தமனிகளை பாதுகாக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது.

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாமா?
பலருக்கும் நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா என்ற கேள்வி மனதில் இருக்கும். கத்ரீனா கையிப் முதல் மலாய்கா அரோரா வரை பல பாலிவுட் பிரபலங்கள் தங்களின் நாளை ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை வெறும் வயிற்றில் உட்கொண்டு தான் தொடங்குகிறார்கள். ஏனெனில் நெய்யானது செல் மீளுருவாக்கம் செயல்முறையை மேம்படுத்துவதன் மூலம் உடலின் குணப்படுத்தும் செயல்முறைக்கு உதவுகிறது. மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரிகிறது.
எனவே நெய்யை சப்பாத்தியில் சேர்க்க யோசிக்காமல், அளவாக சேர்த்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications