Latest Updates
-
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா?
ஆண்கள் அதிகம் அவதிப்படும் ஆரோக்கிய பிரச்சனைகளும்.. அவற்றைத் தவிர்க்கும் வழிகளும்...
இன்று சர்வதேச ஆண்கள் தினம் என்பதால், தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களை அதிகம் தாக்கும் நோய்களைப் பற்றியும், அவற்றைத் தவிர்க்கும் சில வழிகளைப் பற்றியும் கீழே கொடுத்துள்ளது.
International Men's Day 2022: ஒருவரது வாழ்வில் தந்தையாக, சகோதரனாக, கணவனாக என ஆண்கள் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். ஒரு குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அந்த வீட்டின் தலைவனான ஆணின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஆனால் தற்போது பெண்களை விட ஆண்கள் அதிகளவில் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதற்கு அவர்கள் குடும்பம் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று அல்லும் பகலும் அயராது உழைப்பது ஓரு முக்கிய காரணம்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சர்வதேச ஆண்கள் தினம் என்பதால், தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களை அதிகம் தாக்கும் நோய்களைப் பற்றியும், அவற்றைத் தவிர்க்கும் சில வழிகளைப் பற்றியும் கீழே கொடுத்துள்ளது. வாருங்கள் அவற்றைக் காண்போம்.

1. இதயம் தொடர்பான நோய்கள்
பெண்களை விட ஆண்கள் பல்வேறு இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் பக்கவாதம், மாரடைப்பு, ஒழுங்கற்ற இரத்த அழுத்தம் போன்ற பல உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் இதயம் தொடர்பான நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

2. மன இறுக்கம்
சமூக அழுத்தங்கள், பொறுப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் காரணமாக ஆண்களின் மன ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது. மேலும் பெண்களை விட ஆண்கள் மன இறுக்கம் மற்றும் பிற மனநல கோளாறுகளால் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகளும் கூறுகின்றன.

3. சுவாச நோய்கள்
ஆண்களிடம் இருக்கும் மிகவும் மோசமான பழக்கங்களுள் ஒன்றான புகைப்பிடிக்கும் பழக்கத்தால் பெரும்பாலான ஆண்கள் சுவாச நோய்களால் அவதிப்படுகிறார். புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே தான் அதிகம் உள்ளது. இப்பழக்கம் சிஓபிடி, நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

4. மது அடிமை
தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலருமே மது அருந்துகிறார்கள். ஆனால் பெண்களை விட ஆண்கள் அதிகளவு மது அருந்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி மது அருந்துவதால், அதற்கு அடிமையாவதோடு, கல்லீரல் நோய்கள், மலட்டுத்தன்மை, புற்றுநோய் மற்றும் பிற உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் கொடிய நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது.

5. கல்லீரல் நோய்
ஒருவரின் ஆரோக்கியமான உடலுக்கு கல்லீரலின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் ஆண்களிடம் இருக்கும் புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்களால் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல் தான். எனவே தான் ஆண்கள் கல்லீரல் நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

6. சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் அனைவருக்கும் வரக்கூடியது தான். இருப்பினும் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால், அது மனநல கோளாறுகள், இதய நோய்கள், பாலியல் இயலாமை மற்றும் பலவற்றை ஏற்படுத்தும்.

7. எய்ட்ஸ்
எய்ட்ஸ் என்பது உயிரைப் பறிக்கும் மிகவும் கொடிய நோய். ஆய்வுகளின் படி, அஇதுவரை பதிவுசெய்யப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகளில் 70%-த்திற்கும் அதிகமானோர் ஆண்கள் என்பது தெரியுமா?

8. புற்றுநோய்
ஆண்கள் சரும புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், கணையப் புற்றுநோய், குடல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களைத் தாக்கும் நோய்களின் அபாயத்தைக் குறைப்பது எப்படி?
ஒருவருக்கு நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் தங்கள் ஆரோக்கியத்தின் மீதான அக்கறை இல்லாமை தான். அதோடு வாழ்க்கைத் முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவையும் ஒருவருக்கு வரக்கூடிய நோய்களுக்கு முக்கிய காரணம். எனவே நல்ல ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதோடு, தினசரி உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் மற்றும் மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இது தவிர சிகரெட், மது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மருத்துவரை அணுகி முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications