Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
ஆண்களே! 'இது' அதிகமா இருந்தா மலட்டுத்தன்மை ஏற்படுமாம்.. கவனமா இருங்க...
ஹைப்பர்ஸ்பெர்மியா என்பது வழக்கத்தை விட அதிகமான விந்தணுவை உற்பத்தி செய்யும் நிலை ஆகும். பலருக்கும் இந்த பிரச்சனை பற்றி தெரியாது. இது ஒரு அசாதாரண நிலை மற்றும் இது ஆண்களின் கருவுறுதலைப் பாதிக்கக்கூடியது.
இதுவரை விந்தணு குறைபாடு பற்றிய செய்திகளைத் தான் படித்திருப்பீர்கள். ஆனால் சில ஆண்கள் அதிகப்படியான விந்தணு உற்பத்தி பிரச்சனைகயை சந்தித்து வருகிறார்கள் என்பது தெரியுமா? அப்படி அதிகளவு விந்தணு உற்பத்தியைக் கொண்ட ஆண்கள், தங்கள் பிரச்சனைகளை மற்றவர்களுடன், ஏன் மருத்துவர்களுடன் கூட வெளிப்படையாக சொல்ல தயக்கம் கொள்கிறார்கள். ஹைப்பர்ஸ்பெர்மியா என்பது வழக்கத்தை விட அதிகமான விந்தணுவை உற்பத்தி செய்யும் நிலை ஆகும். பலருக்கும் இந்த பிரச்சனை பற்றி தெரியாது. இது ஒரு அசாதாரண நிலை மற்றும் இது ஆண்களின் கருவுறுதலைப் பாதிக்கக்கூடியது.

ஆய்வுகளில் சுமார் 4% ஆண்களுக்கு இந்த பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹைப்பர்ஸ்பெர்மியா உடல் ஆரோக்கியத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும், இந்நிலை ஆண் கருவுறுதலைப் பாதிக்கலாம். தற்போது மலட்டுத்தன்மை இந்தியாவில் மட்டுமின்றி உலகில் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. அதுவும் மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் அதிகம் ஏற்படும். இப்போது ஹைப்பர்ஸ்பெர்மியா என்றால் என்ன, அதன் அறிகுறிகள், காரணங்கள், கண்டறியும் முறை மற்றும் சிகிச்சைகள் குறித்து விரிவாக காண்போம்.

ஹைப்பர்ஸ்பெர்மியா என்றால் என்ன?
ஹைப்பர்ஸ்பெர்மியா என்பது ஆண்களுக்கு வழக்கத்தை விட அதிகமான விந்துவை உற்பத்தி செய்யும் நிலை. உடலுறவின் போது ஆண்களின் வெளியேற்றும் திரவம் விந்து என்று அழைக்கப்படுகிறது. இந்த விந்துவில் விந்தணு மற்றும் புரோஸ்டேட் சுரப்பியில் இருந்து வரும் திரவம் போன்றவை அடங்கும். இப்படி ஒரு ஆண் வெளியேற்றும் விந்துவின் சராசரி அளவு 2-5 மிலி. ஆனால் இந்த அளவு 5.5 மிலி வரை இருந்தால், அது ஹைப்பர்ஸ்பெர்மியா பிரச்சனையாக இருக்கும்.

ஹைப்பர்ஸ்பெர்மியாவின் அறிகுறிகள்
* உடலுறவின் போது வெளியேற்றும் விந்துவின் அளவு மிகவும் அதிகமாக இருப்பது.
* ஹைப்பர்ஸ்பெர்மியா இருக்கும் ஆண்கள், தங்கள் துணையை கர்ப்பமாக்குவது கடினமாக இருக்கும்.
* ஒருவேளை மனைவி கர்ப்பமாகிவிட்டால், கருச்சிதைவு ஏற்படும் அபாயம் சற்று அதிகமாக இருக்கும்.
* ஹைப்பர்ஸ்பெர்மியா உள்ள சில ஆண்களுக்கு, மற்ற ஆண்களை விட சற்று அதிகமான பாலியல் ஆசை இருக்கும்.
* வெளியேறும் விந்தணுவின் நிறம் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.
* இந்த பிரச்சனை இருக்கும் ஆண்கள் விந்து வெளியேறும் போது சற்று அசௌகரியமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

ஹைப்பர்ஸ்பெர்மியாவின் காரணங்கள்
* நீண்ட காலம் உடலுறவு கொள்ளாமல் இருந்தால், அது விந்தணுக்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்து, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
* பாலியல் செயல்திறனை மேம்படுத்தும் மாத்திரைகள் விந்து அளவை அதிகரிக்கும்.
* பாலியல் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகள் மற்றும் தயாரிப்புகளின் பயன்பாடு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
* ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவது இந்த கோளாறுக்கு வழிவகுக்கும்.
* புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் தொற்று இந்த அரிய பிரச்சனையை ஏற்படுத்துவதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
* நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவை அதிகமாக உண்பதால், சிலருக்கு விந்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.

ஹைப்பர்ஸ்பெர்மியா மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?
அதிகளவு விந்து வெளியேறும் சில ஆண்களுக்கு மற்றவர்களை விட விந்துவில் உள்ள விந்தணுக்கள் குறைவாக இருக்கும். இந்த நீர்த்த திரவம் கருவுறுதலை மோசமாக பாதிக்கும். இதனால் சில நேரங்களில், ஹைப்பர்ஸ்பெர்மியா மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும். மறுபுறம், குறைவான விந்தணு எண்ணிக்கையைக் கொண்ட ஆண்களுக்கு கட்டாயம் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதில்லை. இப்பிரச்சனை இருந்தாலும் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஹைப்பர்ஸ்பெர்மியாவை எவ்வாறு கண்டறிவது?
கருவுறுதல் நிபுணரிடம் சென்றால், அவர் பின்வரும் சோதனைகளை மேற்கொள்ளச் சொல்லி, அதன் மூலம் உங்களுக்கு இருக்கும் இப்பிரச்சனையை உறுதிபடுத்துவார். அந்த சோதனைகளாவன:
* ஹார்மோன் சோதனை
* விந்து பகுப்பாய்வு
* இமேஜிங்

சிகிச்சைகள்
உங்கள் வாழ்க்கைத் துணை கருத்தரிக்க முடியாமல் அவதிப்படாத வரை இப்பிரச்சனைக்கு சிறப்பு சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை. ஒருவேளை கருத்தரிக்க கஷ்டப்பட்டால் மருத்துவர் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க மருத்துகளைப் பரிந்துரைப்பார்.
இல்லாவிட்டால், பிரச்சனை உள்ள ஆணின் விந்துவில் இருந்து விந்தணுக்களை மீட்டெடுக்க விந்தணு மீட்பு நுட்பங்களைப் பயன்படுத்துவார். IVF மருத்துவரால் விந்தணு பிரிக்கப்பட்ட பின்னர், அது IVF அல்லது ICSI மூலம் உங்கள் மனைவியின் கருமுட்டையில் நேரடியாக செலுத்தப்படும். கரு வளர்ச்சியடைந்த பின் உங்கள் மனைவியின் கருப்பையில் மீண்டும் கருமுட்டை பொருத்தப்படும்.



Click it and Unblock the Notifications