தினமும் ஒரு கையளவு 'இத' சாப்பிட்டா.. விந்தணுக்கள் இருமடங்கு அதிகரித்து ஆரோக்கியமாகவும் இருக்குமாம்..

தினமும் ஒரு கையளவு வால்நட்ஸ் சாப்பிட்டால், அது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கருத்தரிப்பதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் கருத்தரிக்க முயற்சித்தும், கருத்தரிப்பதில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? எவ்வித கருத்தடையும் இல்லாமல் வழக்கமான உடலுறவு கொண்டாலும், கருத்தரிக்க முடியாவிட்டால் உங்கள் விந்தணு அதற்கு காரணமாக இருக்கலாம். ஒரு ஆணின் விந்து வெளியேற்றத்தில் உள்ள விந்தணுக்கள் 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அது கருத்தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கும். நீங்கள் உங்கள் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இல்லை என்று நினைத்தால், உங்கள் விந்தணுக்கள் மீண்டும் நல்ல வடிவத்தில் பெற உதவும் ஒருசில உணவுகள் உள்ளன.

How Walnuts Can Improve Your Sperm Health

விந்தணுக்கள் சரியான வடிவத்தில் கட்டமைப்பில் இருந்தால் தான், அதனால் பெண் இனப்பெருக்க பாதைக்குள் நீந்தி சென்று கருமுட்டையுடன் இணைய முடியும். விந்தணுக்களின் வடிவத்தையும், இயக்கத்தையும் மேம்படுத்த ஒரு அற்புதமான உணவுப் பொருள் உள்ளது. அது தான் வால்நட்ஸ். தினமும் ஒரு கையளவு வால்நட்ஸ் சாப்பிட்டால், அது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கருத்தரிப்பதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். இப்போது வால்நட்ஸ் எப்படி அதற்கு உதவுகிறது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வால்நட்ஸ் மற்றும் விந்தணு ஆரோக்கியத்திற்கு இடையிலான இணைப்பு

வால்நட்ஸ் மற்றும் விந்தணு ஆரோக்கியத்திற்கு இடையிலான இணைப்பு

ஒரு ஆணின் விந்தணு ஆரோக்கியம் பின்வரும் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அவையாவன:

* விந்து எண்ணிக்கை

* விந்து இயக்கம்

* விந்து வடிவம்

தினமும் ஒரு கையளவு வால்நட்ஸ் (தனியாகவோ அல்லது மற்ற நட்ஸ்களுடன் சேர்த்தோ) சாப்பிடுவது மேம்பட்ட விந்தணு வடிவம், அளவு, இயக்கம் மற்றும் உயிர்சக்தியுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஏனெனில் வால்நட்ஸில் அதிகளவு ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை விந்து இயக்கத்தை மேம்படுத்துகின்றன மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.

ஆய்வு

ஆய்வு

ஆய்வு ஒன்றில் 117 ஆரோக்கியமான ஆண்கள் மீது வால்நட்ஸ் பருப்புகளின் விளைவுகளை ஆய்வாளர்கள் கவனித்தனர். அந்த ஆய்வில் பங்கேற்றவர்களை 2 குழுக்களாகப் பிரித்தனர். 59 பேர் கொண்ட குழுவில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 75 கிராம் அக்ரூட் பருப்புக்கள் சாப்பிட கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் 58 பேர் கொண்ட மற்ற குழுவில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு நட்ஸ் சாப்பிடவும் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. அதில் வால்நட்ஸ் சாப்பிட்ட ஆண்களுக்கு விந்தணுக்களின் இயக்கம் மற்றும் வடிவமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டது மட்டுமல்லாமல், அவர்களின் விந்தணுவில் ஒருசில விந்தணுக்கள் மட்டும் அசாதாரணங்களுடன் இருந்தது தெரிய வந்தது.

இருப்பினும், இந்த ஆய்வில் உள்ள ஒரு குறைபாடு என்னவெனில், இதில் பங்கேற்றவர்கள் ஆரோக்கியமாகவும், கருவுறுதல் பிரச்சனை இல்லாதவராகவும் இருந்தனர். எனவே வால்நட்ஸ் பருப்புகளின் நன்மைகள் கருவுறுதல் பிரச்சினை உள்ளவர்களுக்கு நீட்டிக்கப்படுகிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.

ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களின் பங்கு

ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களின் பங்கு

முன்பே கூறிய படி, வால்நட்ஸ் பருப்புக்களில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் விந்துவில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் செயல்பாட்டை அதிகரிக்கின்றன மற்றும் விந்தணுக்களின் அடர்த்தியை அதிகரிக்கின்றன. இதன் விளைவாகவே விந்தணு எண்ணிக்கை, வடிவம் மற்றும் இயக்கம் மேம்படுகிறது.

வால்நட்ஸ் சாப்பிடுவது எப்படி?

வால்நட்ஸ் சாப்பிடுவது எப்படி?

வால்நட்ஸ் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதால், அதை அப்படியே சாப்பிடுவது மிகச்சிறந்த வழி. இல்லாவிட்டால், நீங்கள் சாப்பிடும் சாலட்டுகள், பிரௌனி, மஃபின்கள் அல்லது தேனுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பிற உணவுகள்

விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பிற உணவுகள்

வால்நட்ஸ் தவிர, விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளாவன தக்காளி, பசலைக்கீரை, முட்டை, ப்ராக்கோலி, அஸ்பாரகஸ், வாழைப்பழம், மாதுளை, ஆரஞ்சு, அவகேடோ, பூண்டு மற்றும் பூசணிக்காய் விதைகள் ஆகியவை. நீங்கள் கருத்தரிக்க முயல்பவராக இருந்தால், இந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் கருவளம் மேம்படுவதோடு, கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கும்.

குறிப்பு

குறிப்பு

வால்நட்ஸ் சாப்பிடுவதற்கு முன், உங்களுக்கு அலர்ஜி இருக்கிறதா என்பதை சோதித்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ட்ரீ நட் அலர்ஜி உள்ளவர்கள், வால்நட்ஸ் சாப்பிடும் போது, அது நிலைமையை மோசமாக்கிவிடும். கூடுதலாக, வால்நட்ஸ் பருப்புக்களை எப்போதும் அளவாக சாப்பிடுங்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

நினைவில் கொள்ள வேண்டியவை

நினைவில் கொள்ள வேண்டியவை

வால்நட்ஸ் சாப்பிடுவது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றாலும், அதை மட்டும் சாப்பிட்டால் போதாது. விந்தணுக்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க யோகா போன்ற உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது என்று நம்பப்படுகிறது. அதுவும் உடலை வளைப்பது மற்றும் தலைகீழான நிலைகள் போன்ற யோகா நிலைகள் பயனுள்ளதாக கருதப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion